இங்கிலாந்தில் இலங்கையை சேர்ந்த (74 வயது) சொந்த தாயே மகள் மீது கத்திக்குத்து!! (படங்கள்)
இங்கிலாந்தில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது தாயாரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமொன்று, இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
குமாரி மஹேந்திரன், என்ற 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சித்ரானி மஹேந்திரன், என்ற 74 வயதான தாயாரே தனது மகளை கத்தியால் குத்தியுள்ளார்.
தான் உறக்கத்தில் இருந்தபோதே தனது தாய் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ள அவ் யுவதி , பின்னர் தான் விழித்துக்கொண்டதும் தனது தாய் தன்னை துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் , 2013 ஆம் ஆண்டு மிஸ் வேல்ஸ் அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டிருந்துள்ளார்.
தனது தாயார் சுகயீனமுற்றிருந்தமையால் அவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்த தாகவும் , இதன் காரணமாகவே அவர் இத்தாக்குதலை நடத்தியிருக்க க் கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான வழக்கு கார்டிப் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மேலும் குறித்த தாய் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment