Site icon ilakkiyainfo

இசையை திருடிய அனிருத்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கத்தி (Video)

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கத்தி’.

படம் ஆரம்பித்த நேரத்தில் இருந்தே சர்ச்சையை எதிர்நோக்கி வருகிறது கத்தி, இப்படத்தின் போஸ்டர், ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிலிருந்து திருடப்பட்டது என்று கருத்து நிலவியது.

இப்படத்தின் கதை திருடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரின் பின்னணி இசையும் திருடப்பட்ட இசை என்ற கருத்து வெளியாகியுள்ளது.

DVBBS & Tony Junior – Immortal என்ற ஆங்கில இசை ஆல்பத்தில் உள்ள இசையை திருடி, அதை அப்படியே ‘கத்தி’ பட ‘டீசரின்’ பின்னணி இசையாக பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

Exit mobile version