ilakkiyainfo

இடைக்­கால அறிக்கை குறித்த 3 நாள் விவாதம் இன்று ஆரம்பம்

இடைக்­கால அறிக்கை குறித்த 3 நாள் விவாதம் இன்று ஆரம்பம்
October 30
04:53 2017

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் இன்று திங்­கட்­கி­ழமை காலை 10.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இதற்­காக நேரெதிர் நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருக்கும் அனைத்து தரப்­புக்­களும் அவ­ச­ர­மான தயார்ப்­ப­டுத்­தல்­க­ளுடன் விவா­தத்தில் பங்­கேற்­கின்­றன.

இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் இன்று காலை 9மணி­யி­லி­ருந்து பாரா­ளு­மன்ற சுற்­று­வட்­டத்தில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும்  செயற்­பா­டு­க­ளுக்­காக  2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி 225 உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கிய பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டது.

அதன் பின்னர் பிர­தமர் தலை­மை­யி­லான 21 உறுப்­பி­னர்கள் உள்­ள­டங்­கிய வழி­ந­டத்­தல்­குழு உரு­வாக்­கப்­பட்­டது, தற்­போ­தைய அர­சியல் யாப்பின் முத­லா­வது மற்றும் இரண்­டா­வது அத்­தி­யாயம் தொடர்பில்     கலந்­து­ரை­யாடல், நாட்டின் தன்மை,  இறை­யாண்மை, மதம், அரசாங்­கத்தின் கட்­ட­மைப்பு, தேர்தல் சீர்­தி­ருத்­தங்கள், அதி­காரப் பகிர்­வுக்­கான கோட்­பா­டுகள், காணி உள்­ளிட்ட விட­யங்­களை இந்த குழு கையாண்­டது.

அதே­நேரம் அதற்கு மேல­தி­க­மாக அடிப்­படை உரி­மைகள் நீதித்­துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை , மத்­திய அர­சாங்­கத்­துக்கும் – மாகாண சபை­க­ளுக்கும் இடை­யி­லான உறவு ஆகிய விட­யங்­களை  கையாள்­வ­தற்­காக உப­கு­ழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த உப­கு­ழுக்கள் தமது அறிக்­கை­களை வழி­ந­டத்தல் குழ­வி­டத்தில் கைய­ளித்­தன.

அவ்­வ­றிக்­கை­க­ளுடன், பிர­த­மரால் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட பிறி­தொரு உப­குழு அறிக்கை ஆகி­ய­வற்­றையும் பொது மக்கள் கருத்­த­றியும் குழவின் அறிக்­கைகள், பரிந்­து­ரை­க­ளையும்   பெற்­றுக்­கொண்ட வழி­ந­டத்தல் குழு நீண்ட ஆராய்­வு­க­ளுக்கு மத்­தியில் பொது­வான இணக்­கப்­பாட்டை எட்­டிய விட­யங்கள் மற்றும் அர­சியல் கட்­சி­களின் தனிப்­பட்ட நிலைப்­பா­டகள் ஆகி­ய­வற்றை தௌிவாக குறிப்­பிடும் வகையில்  கடந்த செப்­ரெம்பர் 21ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்புச் சபையில் இடைக்­கால அறிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தது.

  குறித்த இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் இன்று திங்­கட்­கி­ழமை காலை 10.30இற்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இவ்­வி­வாதம் மாலை 6.30 வரையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதே­போன்று நாளை செவ்­வாய்­கி­ழமை, மற்றும் நாளை மறு­தினம் புதன் கிழ­மையும் விவா­தங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. ஏனினும் இந்த விவா­தத்தின் இறு­தியில் இடைக்­கால அறிக்கை மீதான வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­மாட்­டாது.

ஆனால் விவா­தத்தில் பங்­கேற்கும் உறுப்­பி­னர்­க­ளி­னது நிலைப்­பா­டுகள், அவர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும  கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் ஆகிய விட­யங்கள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

அத­னை­ய­டுத்து அவ்­வி­ட­யங்கள் தொடர்­பா­கன அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் கவ­னத்தில் கொள்­ளப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டப்­பட்டு இணக்­கப்­பாடு காணப்­படும் விட­யங்கள், இணக்­கப்­பாடு காணப்­ப­டாத விட­யங்கள் குறித்த கலந்­து­ரை­யாடல் ஆரம்­பிக்­கப்­படும்.

அச்­ச­ம­யத்தில் பொது­மக்கள், சம­யத்­த­லை­வர்கள், புத்­தி­ஜீ­விகள், சிவில் சமூ­கத்­தினர் உள்­ளிட்ட பல்­வெறு தரப்­பி­ன­ரி­னதும் கருத்­துக்­களும் கேட்­ட­றி­யப்­ப­ட­வுள்­ளது.

அதன்­பின்­னரே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைவு தயா­ரிப்பு குறித்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு வழி­ந­டத்தல் குழு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி்ன்­றது.

அவ­சர கூட்­டங்­களும் தௌிவு படுத்­தல்­களும் இதே­வேளை இடைக்­கால அறிக்கை குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு அல­ரி­மா­ளி­கையில் கலந்­து­ரை­யா­டி­ய­தோடு கடந்த வாரத்தில் இரண்டு தட­வைகள் ஐ.தே.க உறுப்­பி­னர்­க­ளுக்­கான இடைக்­கால அறிக்கை குறித்த கருத்­தங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

அதே­போன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் நேற்றும் நேற்று முன்­தி­னமும் இருநாள் கருத்­த­ரங்­கொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்­த­தோடு உறுப்­பி­னர்கள் விவா­தத்­தில்­க­லந்து கொண்டு நடந்து கொள்­ள­வேண்­டிய முறைமை தொடர்­பிலும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

  கூட்டு எதிர்க்­கட்­சியும் நேற்று இரவு வழ­மை­யான தனது வாராந்த சந்­திப்­பினை மேற்­கொண்­டி­ருந்த போது இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் குறித்தே அதி­க­ளவில் கவனம் செலுத்­தப்­பட்­ட­தோடு மட்­டு­மல்­லாது இடைக்­கால அறிக்­கையில் சமஷ்­டிக்­கான சூட்­சும விட­யங்கள் தொடர்­பா­கவும் தௌிவு படுத்­தப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

தொடரும் எதிர்ப்பு

இதே­வேளை தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நாட்டின் தன்மை, அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டுதல், அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம், பாரா­ளு­மன்­றத்­திற்­கான அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்தல், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­குதல் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து முன்னா ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ உட்­பட அவ­ரது அணியில் உள்ள 52உறுப்­பி­னர்­களும் கடு­மை­யான எதிர்ப்­புக்­களை வௌியிட்டு வரு­கின்­றனர்.

குறிப்­பாக தென்­னி­லங்கை உள்­ளிட்ட நாட்டில் பெரும்­பான்மை இன மக்கள் வசிக்கும் பகு­தி­களில் பல்­வேறு பிர­சா­ரங்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். குறிப்­பாக இடைக்­கால அறிக்கை உட்­பட புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டால் நாடு துண்­டா­டப்­படும், சமஷ்டி வழங்­கப்­படும் என்றும் கூறி­வ­ரு­கின்­றனர்.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை கண்­டிக்கும் வகையில் இன்­றை­ய­தி­னமும் பாரா­ளு­மன்ற சுற்­று­வட்­டத்தில் கண்­டன ஆாப்­பாட்­ட­மொன்றை காலை 9மணி முதல் மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

இதில் கூட்டு எதிர்க்­கட்­சியில் உள்ள உறுப்­பி­னர்கள், உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் முன்னாள் பிர­தி­நி­திகள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், பொது­மக்கள் எனப் பல­த­ரப்­பட்ட தரப்­பி­னரும் கலந்து கொள்­ள­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டள்­ளது.

தே.சு.மு. பங்­கேற்­காது

ஏற்­க­னவே புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை கடு­மை­யாக விமர்­சித்து வந்த தேசிய சுதந்­திர முன்­னணி அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது.

ஆதன் பிர­காரம் அக்­கட்­சியின் தலைவர் விமல் வீர­வன்ச உட்­பட ஐந்து உறுப்­பி­னர்கள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யி­லி­ருந்து விலகும் அறி­விப்பை எழுத்து மூல­மாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டத்தில் கைய­ளித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் அந்த ஐந்து உறுப்­பி­னர்­களும் இன்­றைய விவா­தத்­திலும் கலந்து கொள்ள மாட்­டார்கள் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முரண்­பா­டான கருத்­துக்கள் எதி­ரொ­லிக்கும்

வௌியி­டப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கையின் பிர­காரம் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் பல்­வேறு முரண்­பா­டான கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை நீக்கும், மற்றும் நாட்டின் தன்மை குறித்து ஏனைய கட்­சி­க­ளி­லி­ருந்து மாறு­பட்ட நிலை­மையில் உள்­ளது.

அதே­நேரம் மற்­றொரு பெரும்­பான்மை தேசிய கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி தனது நிலைப்­பாட்­டினை பகி­ரங்­கப்­ப­டுத்­தாத நிலையில் இருந்­தாலும் பிர­த­ம­ருக்­கான அதி­கா­ரத்­தினை வலுப்­ப­டுத்தி பாரா­ளு­மன்ற ஆட்­சி­மு­றை­மையை மையப்­ப­டுத்­தியும் நாட்டின் தன்மை தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கையில் முன்­மொ­ழி­யப்­பட்­ட­வாறே இருக்கும் என்றும் வலி­யு­றுத்­தலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது கட்­சியின் நிலைப்­பாட்­டினை இடைக்­கால அறிக்­கையில் வௌிப்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கையில் உள்­ளட விட­யங்கள் தொடர்பில் அனைத்து தரப்­பி­னரும் பொது இணக்­கப்­பாட்­டிற்கு வரும் பட்­சத்தில் தாம் அதனை ஆத­ரிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

ஏனினும் இடைக்­கால அறிக்­கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ள கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். இடைக்கால அறிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஜே.வி.பி சமஉரிமையை மையப்படுத்திய கருத்துக்களை முன்வைக்கவுள்ளதோடு தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையான சமஷ்டி, வடகிழக்கு இணைப்பை நிச்சயமாக நிராகரிக்கும் என்றும் அதிகாரங்கள் குவிந்திருப்பதற்கு எதிராக குரல்கொடுக்கும் எனவும் கூறபப்டுகின்றது.

  கூட்டாவும்,தனியாவும் முன்மொழிவுகளைச் செய்துள்ள தமிழ்முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியனவும் தமது நிலைப்பாடுகளை இறுக்கமாக வௌிப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு பலதரப்பட்ட கருத்துமொதல்கள் நடைபெறும் களமாக பாரர்ளுமன்ற தளம் இன்றிலிருந்து அடுத்து வரும் இருதினங்களும் இருக்கப்போகின்றது. இதில் கூட்டு விவாவத்தினை சுமகமாக முன்னெடுப்பதற்கு இடமளிப்பார்களா என்பதும் மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com