தற்போது இணையத்தளத்தில் ஒரு காகத்தின் முற்றிலும் வினோதமான காணொளி ஒன்று வைரலாகி வலம்வந்து கொண்டிருக்கிறது.

சிறிய காணொளியில் காகம் ஒன்று அதன் இறக்கைகளுடன் அமர்ந்திருக்கும் காகத்தின் கால்கள் புலப்படவில்லை. இதனால் காகம் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து சிலர் அது காகம் தான் எனவும், பலர் பார்ப்பதற்கு கொரில்லா போன்று தோற்றமளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ ஜுன் 20 ஆம் திகதி லிவ்ஜாடன் என்பவருடைய டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து, குறித்த காணொளி வைரலாகி விட்டது. இக்காணொளி பத்து மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது, இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், இரண்டு லட்சம் ரீடுவிட்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் காணொளி குறித்து பல சுவாரஸ்மான கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது.

” இந்த பறவை தனது நோய்வாய்ப்பட்ட நிலைமையை காட்டுகின்றது ”

” இது ஒரு கொரில்லா,ஒத்து கொள்கிறேன் ”

” நான் 10 நிமிடங்கள் பறவை காணொளிவை முறைத்துப் பார்த்தேன், என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். உங்கள் புகைப்படம் இன்று இரவு தூங்க எனக்கு உதவியது ” என பல கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளது.