ilakkiyainfo

இதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்!

இதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்!
January 02
02:26 2019

முற்கால இந்தியாவில் இருந்த மன்னர்களின் வீரங்களை பற்றி நமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தங்களது மக்களை காக்க பல போர்களில் ஈடுபட்டு வெற்றிபெற்றனர்.

அவர்கள் பல போர்களில் வென்று தங்களது இராஜியங்களை விரிவுபடுத்தினர். அவர்கள் பல அரண்மனைகளை கட்டி தங்களது இராஜியங்களை விரிவுபடுத்தினர்.

நீங்கள் திரைப்படங்களில் மன்னர்களின் சண்டைக்காட்சிகள் மற்றும் ஆட்சிமுறை போன்றவற்றை கண்டு வியந்திருப்பீர்கள்..! ஆனால் இவர்களது அந்தரங்க வாழ்க்கையை பற்றிய சில சுவரஸ்யமான நிகழ்வுகள் வெளியுலகத்திற்கு தெரியாத வண்ணமே உள்ளது.

ஆனால் ஒரு சில விஷயங்கள் மட்டுமே அந்த அரண்மனையில் உள்ளவர்களால் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. இவர்களது அந்தரங்க உண்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

08-1512715320-6

கிஷாந் சிங்
ராஜஸ்தானில் உள்ள கிஷான்ப்பூரை இளம்வயதிலேயே ஆட்சி செய்தவர் இந்த கிஷாந் சிங் என்ற மன்னர் ஒரு வித்தியாசமான பழக்கத்தால் புகழடைந்தார்.

அதாவது இந்த மன்னர் குளிக்கும் போது தன்னுடன் குளிப்பதற்காகவே தன்னுடன் 40 இராணிகளை திருமணம் செய்து வைத்திருந்தார். இதற்காக இவர் மார்பில் கற்களால் ஆன சிறிய குளத்தையே அரண்மனைக்கு அருகில் உருவாக்கியிருந்தாராம்.

08-1512715306-5

உடையின்றி வரவேற்ற வேண்டும்

மேலும் மன்னர் அந்த குளத்திற்கு குளிக்க வரும் பொழுது அவர்கள் அனைவரும் உடலில் ஆடையில்லாமல் மன்னரை வரவேற்று பின்னர் அவர்கள் அனைவரும் மன்னருடன் குளிக்க வேண்டுமாம்.

அதுமட்டுமல்லாமல் இரவில் வெளிச்சங்கள் இல்லாத அறையில் ராணிகள் தங்களது கைகளில் விளக்குகளை வைத்துக் கொண்டு நடனமாட வேண்டுமாம்.

யாருடைய விளக்கு கடைசிவரை அணையாமல் இருக்கிறதோ அந்த ராணி மட்டுமே அன்று இரவு மன்னருடன் படுக்கையை பகிர்வாராம். இந்த கிஷாந் சிங் மன்னர் தன்னுடைய 29 வயதிலேயே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

08-1512715267-1

குப்பிந்தர் சிங்

19 ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை உப்பிந்தர் சிங் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்துள்ளார். இவருக்கு பல மனைவிகளும் தற்போது அறிந்தவரையிலும் இவருக்கு 88 குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மனைவிகளின் முன்னிலையில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக அணிவகுப்பாராம்.

தன்னுடைய உடலில் எந்தவித குறைபாடும் இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே இவர் வருடத்திற்கு ஒருமுறை இவ்வாறாக செய்ததாக கூறப்படுகிறது.

08-1512715555-17

ஒஸ்மான் அலிகான்
ஹைதராபாத்தை கடைசியாக ஆட்சி செய்த மன்னரான ஓஸ்மான் அலிகான் 1930 ஆண்டு உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருடைய அன்றைய சொத்துமதிப்பு சுமார் 12820 கோடியாகும். இவரது அன்றைய சொத்து மதிப்பு அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பில் 2 % ஆகும்.

இவர் உலகத்திலேயே மிக விலை உயர்ந்த வைரத்தை வாங்க எண்ணினார். அதன் விளைவாக 758 கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தை விலைக்கு வாங்கி அதனை சாதாரண பெப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார். இந்த வைரம் தற்பொழுது இந்திய அரசாங்கத்திடம் உள்ளது.

08-1512715333-7

அந்தப்புரங்கள்
பழங்கால இந்தியாவில் அந்தப்புரங்கள் மிகவும் பிரபலமானவை.. இந்த அந்தப்புறங்களை மன்னர்கள் மட்டுமில்லாமல், பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது வசதிக்கு ஏற்றவாறு அந்தப்புறங்களை வைத்திருந்தனர்.

அந்தப்புறங்கள் என்பது மன்னரின் மனைவிகள், ஆசைநாயகிகள் என மன்னருக்கு உரித்தான பெண்கள் மட்டுமே தங்கும் ஒரு அழகிய மாளிகையாகும்.

இங்கு மன்னரை தவிர வேறு எந்த ஒரு ஆணுக்கும் அனுமதி இல்லை. இங்கு மகாராணி என்று அழைக்கப்படுகிறவர்கள் உறவினர்கள் முன்னிலையில் மன்னரை திருமணம் செய்து கொண்டவர்களாவார்கள். அந்தப்புறத்தில் இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும்.

08-1512715376-11

முன்னுரிமை யாருக்கு?

அதே போல ராணிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மன்னரால் தனிப்பட்ட முறையில் விரும்பப்பட்டு திருமணம் செய்யப்பட்டவர்கள் எனவே இங்கு அவர்களுக்கு இரண்டாவது இடம் தான்.

அதன் பின் தான் மன்னரின் ஆசை நாயகிகள் மற்றும் அந்தப்புற அழகிகள் எல்லோரும்…..! மக்களிடன் இருந்து வசூலிக்கப்படும் பெரும்பாலான வரிப்பணத்தை அந்தப்புறத்தின் பராமரிப்பிற்காகவே பயன்படுத்தினர்.

08-1512715397-13

அக்பர்

இந்தியாவில் முகலாய சாம்பிராஜியத்திற்கு ஒரு வழுவான அடித்தளத்தை அமைத்தவர் தான் மூன்றாவது முகலாய பேரரசர் அக்பர். அக்காலத்தில் பிற மதத்தினருக்கும் மதிப்பு கொடுத்த மன்னர்கள் மிகவும் குறைவு. அதில் அக்பரும் அடங்குவார். அதனாலேயே இவர் ஜோதாபாய் என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

08-1512715367-10

ஐந்தாயிரம் பேர்
இவரின் அந்தப்புறத்தில் மூன்று தலைமை மகாராணிகள் உட்பட மூன்று அந்தப்புற அழகிகளும் ஐந்தாயிரம் பெண்களும் இருந்தனர். அவர் மகாராணிகளை தவிர மற்றவர்களிடத்தில் எந்த ஒரு காதலையோ அல்லது வேறு எந்த ஒரு விஷயங்களை மகாரணிகளை தவிர மற்றவர்களிடத்தில் காட்டவில்லையாம்.

அந்தரப்புறத்தை அலங்கரிப்பதற்காகவும், மகாரணிகளுக்கு பணிவிடை செய்வதற்காகவும் மட்டுமே மற்ற அனைத்து பெண்களையும் அரண்மனையில் வைத்திருந்தாராம்.

08-1512715387-12

விசித்திர பழக்கம்

மற்ற இந்திய மன்னர்களை போலவே முகலாய மன்னர்களும் தங்களது வசதிக்கு ஏற்ப அந்தப்புறங்களை வைத்திருந்தனராம். இவர்களுடைய அந்தப்புறம் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமானதாக இருந்தது.

இவர்கள் மகாரணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக அவரது தாய்க்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். மன்னர் போருக்கு செல்லும் காலங்களில் அவரது தாயாரே ஆட்சி பொருப்பை ஏற்பாராம்.

மேலும் முகலாய அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒரு நாளைக்கு பலமுறை உடை மாற்றும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்திய ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்களை மறுமுறை பயன்படுத்த மாட்டார்களாம். எனவே அந்த பொருட்கள் அனைத்தையும் அங்குள்ள பணிப்பெண்களிடம் கொடுத்துள்ளனர்.

08-1512715416-15

ஜெய் சிங்
தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பதை லண்டனுக்கு கற்பித்தவர் தான் ராஜஸ்தானில் உள்ள ஆள்வார் என்ற நகரை ஆட்சி செய்த ஜெய் சிங் மகாராஜா.

இவர் ரோல்ஸ் ராய்ஸ்காரை வாங்குவதற்காக ராஜாவின் உடையில் லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் மன்னரையும் அவரது ஆடைகளையும் பார்த்து ஏளனமாக கேலி செய்துள்ளனர். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுவிட்டார்.

08-1512715425-16

குப்பை வண்டிகள்
அதன் பின் அவருடன் வந்திருந்தவர்களின் மூலமாக ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி விமானத்தில் ஏற்றினார். பின் அந்த கார்களின் இருபுறமும் துடைப்பத்தை கட்டி சாலைகளை சுத்தம் செய்யும் குப்பை வண்டியாக மாற்றிவிட்டார்.

இந்த செயலால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புகழ் குறைந்ததால் விற்பனையும் குறைந்தது. இதனால் அந்த நிறுவனம் தன் தவறை உணர்ந்து மன்னரிடம் மன்னிப்பு கேட்டதுடன் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மன்னருக்கு அன்பளிப்பாகவும் கொடுத்தது. அதற்கு பின் தான் ஜெய்சிங் மன்னர் அந்த துடைப்பங்களை வண்டிகளில் இருந்து அகற்றினாராம்.

08-1512715407-14

இதற்கே இத்தனை செலவா?

முகமத் மகாபத் என்ற மன்னர் மக்களை விட நாய்கள் மீது அதிக அன்பு வைத்திருந்தாராம். அதனாலேயே இவருடைய அரண்மனையில் 800க்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருந்தாராம்.

அதனுடன் அவற்றிற்கு தனித்தனி பராமரிப்பு பணியாளர்களையும் நியமித்துள்ளார். அதுமட்டுமின்றி இவருக்கு மிகவும் பிடித்த 2 நாய்களுக்கு சுமார் 30 லட்சம் செலவில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மேலும் அன்றைய தினத்தை அனைவருக்கும் விடுமுறை நாளாக அறிவித்துள்ளார்.

08-1512715357-9

அசோகர் மிகப்பெரிய பேரரசர்

அசோகர் தற்போதுள்ள கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் தவிர இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து பகுதிகளும் இவருடைய ஆட்சியின் கீழ் தான் இருந்தது.

இவருக்கு 18 வயது இருக்கும் போது உஜ்ஜைன் என்ற இராஜியத்தின் அரச பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் ஒரு வியாபாரியின் மகளான மகாராணி தேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்.

08-1512715287-399 சகோதரர்களை கொன்றார்
ஆனால் மீண்டும் பாடலி புத்திராவில் இருந்து ஆட்சிக்கான அழைப்பு தந்தையிடன் இருந்து வந்ததால் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இவர் மட்டுமே பாடலி புத்திராவிற்கு சென்றார்.

ஒரு வியாபாரியின் மகளை மௌரிய சாம்பிராஜியத்தின் மகாராணியாக ஏற்றுக் கொள்ள அரசர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் அவருடைய தந்தை இறந்த பிறகு தனது 100 சகோதர்களில் 99 சகோதரர்களை அறியணை ஏறுவதற்காக கொன்று ஒருவரை மட்டும் உடன் வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் ஆறு பேரை மட்டும் தான் அரியணைக்காக கொன்றார் என்று மற்றவர்களை பிற சாம்பிராஜியத்திற்கு மன்னராக்கிவிட்டார் என்று பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com