ilakkiyainfo

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம் (வீடியோ)

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம் (வீடியோ)
June 02
11:18 2014

 

இந்தியா விடுதலை பெற்ற போது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவி இருந்தனர். இந்த 22 மாவட்டங்களில் 12 மாவட் டங்கள் அப்போதைய தமிழகமான சென்னை மாகாணத்திலும் மீதமுள்ள 9 மாவட்டங்கள் ஐதராபாத் சமஸ்தானத்திலும் இருந்தன.

1953ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தில் இருந்த 12 மாவட்டங்களையும் ஐதராபாத் சமஸ்தானத்தில் இருந்த 9 மாவட்டங்களையும் தனியாக பிரித்து ‘ஆந்திரா” எனும் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. பிறகு ஆந்திராவில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

இந்த 23 மாவட்டங்களிலும் தெலுங்கு பேசப்பட்டு வந்தாலும் வட பகுதியில் உள்ள மக் கள் ‘தெலுங்கானா’ என்ற பெயரில் தனிப் பகுதி யாக செயல்படவே விரும்பினார்கள்.
02-1401685949-telangana-bandh13-600
1969ம் ஆண்டு தனித் தெலுங்கானா கோரி போராட்டம் வெடித் தது. கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரராவ் தலைமையில் போராட்டம் தீவிரமானது.

சுமார் 50 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க கடந்த ஆண்டு மன் மோகன்சிங் தலைமையிலான காங் கிரஸ் அரசு முடிவு செய்தது.

02-1401686232-telangana98766-600-jpgஅதன்படி இந்தியா வின் 29வது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 23 மாவட்டங் களில் ஐதராபாத், நல்கொண்டா, மெகபூப் நகர், ரங்கா ரெட்டி, மேடக், நிஜாமாபாத், அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், கம்மம் ஆகிய 10 மாவட் டங்கள் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெறும் வகையில் பிரிக்கப்பட்டன.

மீதமுள்ள 13 மாவட்டங்களைக் கொண்ட கட லோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு சீமாந்திரா மாநிலம் என்று அறிவிக் கப்பட்டது. தெலுங்கானா – சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் பொது தலைநகராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிதததன் பேரில் தெலுங்கானா மாநில உருவாக்கம் தொடங்கியது. இந்த புதிய மாநிலத்தில் 17 பாராளுமன்றத் தொகுதிகளும், 119 சட்ட சபை தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. சீமாந்திராவில் 25 பாராளுமன்றத் தொகுதிகளும் 175 சட்டசபைத் தொகுதிகளும் உள்ளன.

02-1401685994-telangana987-600-jpgகடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்துக்கு இடையே பிரிந்துள்ள தெலுங்கானா மாநிலம் இன்று முதல் அதிகாரபூர்வமாக தனி மாநிலமாக செயல்பட தொடங்கும் என்று மத்திய அரசு அறி வித்து இருந்தது. அதன்படி தெலுங்கானா மாநிலம் இன்று (திங்கட்கிழமை) உதயமாகிறது.

இன்று (திங்கட்கிழமை) காலை 8.15 மணிக்கு தெலுங்கானா கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில் சந்திரசேகரராவ், தெலுங்கானாவின் முதலாவது முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

02-1401686588-k-chandrashekar-rao1-600சந்திரசேகரராவுடன் 12 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பிறகு தெலுங்கானா மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார். துணை முதல் மந்திரியாக தலித் இனத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் நியமிக்கப் படுகிறார்.

புதிய முதல் அரசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் சீமாந் திராவில் முதல் மந்திரியாக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

140602043204_k_chandrashekhar_rao_oath_telangana_624x351_dhananjay
சந்திரசேகரராவ் முதல் மந்திரியாக பதவி ஏற் பதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் கவர்னர் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சீமாந்திரா வில் 8ஆம் திகதி வரை கவர்னர் ஆட்சி நீடிக்கும்.

சீமாந்திராவில் வருகிற 8ஆம் திகதி தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். அதுவரை அங்கு கவர்னரின் ஆட்சி நடைபெறும். இரு மாநிலங்களுக்கும் பொதுவான கவர்னராக நரசிம்மன் இருப்பார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com