இந்தியாவிலிருந்து 600 பவுண்டுகளுடன் வந்து பிரித்தானியாவில் ரீ விற்பனை செய்து கோடீஸ்வரராக மாறிய இளைஞன்!

பிரித்தானியாவில் கடும் முயற்சி காரணமாக முன்னேறிய இந்தியர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர் Rupesh Thomas (39), வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக 600 பவுண்டுகளுடன் பிரித்தானியா வந்தவர். தனது கடின உழைப்பால் இன்று விம்பிள்டனில் வீடு வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
15 ஆண்டுகளுக்குமுன் பிரித்தானியா வந்த அவர் டீ விற்பனை மூலம் ஒரு வெற்றிகரமான பிஸினஸ் மேன் ஆகியிருக்கிறார்.
இப்போது 30 வயதாகும் Thomas விம்பிள்டனில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர்.
அது மட்டுமின்றி தெற்கு லண்டனில் 350,000 பவுண்டுகள் மதிப்புள்ள இரண்டாவது வீட்டையும் வாங்கிவிட்டார்.
அவரது டீ வியாபாரத்தால் 2 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு அவருக்கு வருமானம் வருகிறது. இன்று ஆடம்பர பல்பொருள் அங்காடியான Harvey Nicholsக்கும் அவர் டீ சப்ளை செய்கிறார்.
கேரளாவில் பிறந்த அவருக்கு எப்போதுமே பிரித்தானியாவின் மீது ஒரு கண் இருந்தது. பட்டப்படிப்புக்குப்பின் லண்டனுக்கு வந்திறங்கிய அவர் McDonald’sஇல் வேலைக்கு சேர்ந்தார்.
தொடர்ந்து பல இடங்களில் வேலை செய்த அவர் கடினமாக உழைத்தார்.
2007ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alexandraவைத் திருமணம் செய்து கொண்டார்.
Alexandraவுடன் கேரளாவுக்கு செல்லும்போது அவர் கேரளா டீயை ரசித்துக் குடிப்பதைக் கவனித்தார்.
Alexandra ஒரு நாளைக்கு 10 கப் கேரளா டீ வரை குடிப்பார். இதைப் பார்த்ததும் Thomasக்கு ஒரு விடயம் நன்கு புரிந்தது.
பிரித்தானியர்களுக்கு டீ பிடிக ்கும் என்றாலும் அங்கு கேரளா டீயைப்போன்ற சுவையான டீ கிடைப்பதில்லை. இதுதான் தனது அதிருஷ்ட தொழில் என்பதைக் கண்டுகொண்ட Thomas, பிரித்தானியாவில்டீ சப்ளை செய்யத் தொடங்கினார்.
பிரித்தானியர்கள் Thomasஇன் டீக்கு அடிமையானார்கள். டீ வியாபாரம் பிய்த்துக்கொண்டுபோனது.
பல பிரபல கடைகளுக்கு டீ சப்ளை செய்யத் தொடங்கிய Thomas இன் கடின உழைப்பு இன்று அவரை ஒரு கோடீஸ்வரராக்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
பிரிதானிய ஊடகத்தில் வெளிவந்த தொடர்புடைய செய்தி
There are no comments at the moment, do you want to add one?
Write a comment