இனிதே முடிந்தது அட்லி – ப்ரியா திருமணம்… மாலை ‘ராஜா-ராணி’க்கு ரிசப்ஷன்! (படங்கள்)
சென்னை: இயக்குநர் அட்லி – பிரியா திருமணம் இன்று சென்னையில் நடந்தது. மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த ராஜாராணி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் அட்லி.
அதேபோல், டிவியில் கனாக்காணும் காலங்கள் தொடரிலும், சிங்கம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை பிரியா. கடந்த ஏழு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து, பின்னர் காதலர்களாக மாறிய அட்லி – பிரியா, இன்று தம்பதிகளாகியுள்ளனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment