ilakkiyainfo

இன்று முதல் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அரசியல் கைதிகள் எச்சரிக்கை

இன்று முதல் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அரசியல் கைதிகள் எச்சரிக்கை
October 08
10:22 2017

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 23ஆம் நாள் தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான, 6 வட மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று பார்வையிட்டு கலந்துரையாடியது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு வடமாகாணசபை உறுப்பினர்களின் குழு அரசியல் கைதிகளிடம் கோரியது. எனினும் அவர்கள் அதற்கு இணங்கவில்லை.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களையும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளையும் வட மாகாணசபை உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாகச் சந்தித்து கலந்துரையாடினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது போராட்டத்தை நிறுத்த மறுப்புத் தெரிவித்த அதேவேளை, தமது பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படாவிடின், இன்று தொடக்கம் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து நிலைமைகளை விளங்கப்படுத்தி, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வடமாகாணசபை உறுப்பினர்களின் குழு திட்டமிட்டுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com