12 ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்றைய தினம் இரண்டு போட்டிகளில் இடம்பெறவுள்ளன.

 

8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் மாதம் 23 ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ள  நிலையில் பிளே-ஒப் சுற்றுக்கு 4 ஆவது அணி எது என்ற இழுபறிக்கு லீக் சுற்றின் கடைசி நாளான இன்று தான் விடைகிடைக்கும்.

இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மொஹாலியில் இன்று மாலை 4.00 மாலை இடம்பெறவுள்ள 55 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும், இரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தல் ஆரம்பமாகவுள்ள 56 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளன.

பஞ்சாப் – சென்னை

DQ0Q1921

வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் உள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்யும் ஆவல் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஐ.பி.எல். வரலாற்றில் அது சென்னை அணியின் 100 ஆவது வெற்றியாக பதிவாகும்.

ஏற்கனவே பஞ்சாப்பை சொந்த ஊரில் வீழ்த்திய சென்னை அணி அதே நம்பிக்கையுடன் மீண்டும் களமிறங்கவுள்ளது.

5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளி எடுத்துள்ள பஞ்சாப் அணி இந்த முறை சொதப்பி விட்டது. ஒரு வேளை கடைசி லீக்கில் இமாலய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சில முடிவுகள் சாதகமாக அமைந்தால் அதிசயம் நிகழலாம். ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்துள்ள பஞ்சாப் அணியினர் உள்ளூரில் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்யும் நோக்குடன் களம் காணுவார்கள்.

மும்பை-கொல்கத்தா

DQ0Q3510

மும்பை அணி ஏற்கனவே பிளே-ஒப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை எட்டலாம். தோற்றால் வெளியேற வேண்டியது தான். ஏனெனில் ஓட்ட விகிதாசாரத்தில் ஐதராபாத் வலுவாக உள்ளது.

கடந்த 28 ஆம் திகதி இவ் விரு அணிகளும் கொல்கத்தாவில் சந்தித்த போது கொல்கத்தா அணி 232 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்து பிரமிக்க வைத்தது. ஆகையினால் இப் போட்டியை சாதகமாக பயன்படுத்தி மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.