இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளமையால் மகிந்த தரப்பில் 11 எம்.பிக்கள் பதவியிழப்பர்..!!
இலங்கையின் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரட்டைக் குடியுரிமையை, மகிந்த அணியில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவர்களும் பதவி இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிய வருகின்றது.
இரட்டைக் குடியுரிமை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், மகிந்த அணியில் இருக்கும் இரட்டைக் குடியுரிமைக் கொண்ட 11 பேரின் நிலமை குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பில் தாம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment