ilakkiyainfo

‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’: சிசிடிவி காணொளி

‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’: சிசிடிவி காணொளி
October 10
14:24 2016

கொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள பிரபல்யமான இரவு கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற அட்டாகசம் தொடர்பில், ஊடகங்கள் மௌனமாகவே இருக்கின்றன.

இதுவா ஊடக சுதந்திரம் எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, சிறிசேனவின் மகனே இந்தத்தாக்குதலை மேற்கொண்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதியின் மகன்மார், இரவு விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும், எனினும் அவர்கள், ஒவ்வொருநாளும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஊடக சுதந்திரம் இருப்பதாகக் கூறப்படுகின்றபோதிலும், இவ்வாறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. அந்த கேளிக்கை விடுதிக்கு அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவுடன் சென்றே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின், விபத்துச் சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு அதிமுக்கிய  பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தோர் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில், சனிக்கிழமை நடத்திய, நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரபல அரசியல்வாதி மகனின் அட்டகாசம் ; வெளியானது சிசிடிவி காணொளி
09-10-2016

kalavaramm

இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதி ஒருவரின் மகனால், கொழும்பில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் அட்டகாசம் புரியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன

கொழும்பு நகர மண்டப பகுதியில் அமைந்துள்ள  இரவு விடுதி  ஒன்றினுள் நேற்று இரவு புகுந்த ஒரு குழுவினர், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியை தாக்கியுள்ளனர்.

அத்தோடு குறித்த விடுதிக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நபர்களின் தாக்குதல் காரணமாக இரவு நேர விடுதியின் பாதுகாப்பாளர் தற்போது வரை அவசர கிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜீவன் பிரேமதாஸ என்ற நபரே இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இரவு நேர விடுதியிற்கு வருகை தந்த குழுவினரில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவருடன் வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

dhama-sirisena-night-club-attackdhama-sirisena-night-club-attack-1-1-768x1024dhama-sirisena-night-club-attack-1-3

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com