இராணுவ திருமணத்தில் முதல் முறையாக பங்கேற்ற ஓரின ஜோடி

ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய ஆசியாவின் ஒரே நாடான தாய்வானில் இடம்பெற்ற இராணுவ திருமண நிகழ்வொன்றில் இரண்டு ஓரின ஜோடி முதன்முதலில் பங்கேற்றனர்.
தாய்வானின் இராணுவம் ஒவ்வொரு ஆண்டும் வெகுஜன திருமணங்களை நடத்துகிறது. இந்நிலையில், ஒரே பாலின தம்பதிகள் இவ்வாறான நிகழ்வொன்றில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.
சம்பந்தப்பட்ட தம்பதிகளில் ஒருவர், இது “இராணுவத்தில் அதிகமான ஒரினச் சேர்க்கையாளர்களை உருவாக்க ஊக்குவிக்கும்” என்று நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தாய்வான் ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கியதில் இருந்து சுமார் 4,000 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தாய்வான் கடந்த ஆண்டு ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியள்ளது. என்றாலும் ஓரின சேர்க்கை தம்பதிகள் இன்னும் பாலின தம்பதிகளுக்கு இணையாக சம உரிமைகளை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment