ilakkiyainfo

இறங்குமுகம்! பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

இறங்குமுகம்!  பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)
March 02
19:52 2019

அர­சியல் உரி­மைக்­கான தமிழ் மக்­களின் போராட்டம் ஒரு சந்­தியில் வந்து தேக்க நிலையை அடைந்­துள்­ளது. ஐந்து தசாப்­தங்­க­ளுக்கு மேலாகத் தொடர்ந்த ஓர் அர­சியல் போராட்­டத்தின் இந்த நிலைமை கவ­லைக்­கு­ரி­யது. பல வடி­வங்­களில் பல படி­நி­லை­களைக் கடந்து வந்­துள்ள இந்தப் போராட்­டத்தைப் பல­த­ரப்­பட்ட தலை­வர்கள், பல்­வேறு நிலை­களில் பல்­வேறு வழி­மு­றை­களில் வழி­ந­டத்­தி­யி­ருக்­கின்­றார்கள். அந்த வழி­ந­டத்­தல்­க­ளும் ­சரி, முன்­னேற்­ற­மும் ­சரி, போராட்­டத்தின் இலக்கை நோக்கித் தொடர்ந்து பய­ணிப்­ப­தற்கு உற்­சா­க­மூட்­டு­வ­தாக அமை­ய­வில்லை.

போராட்ட வடி­வங்கள் மாறலாம். போராட்­டத்தின் இலக்கு மாற­வில்லை. கொள்­கையில் மாற்­ற­மில்லை என்ற போராட்­டத்தின் இருப்பு குறித்த இறு­மாப்­பான குரல்கள் காலத்­துக்குக் காலம் ஒலித்த வண்ணம் இருக்­கின்­றன. ஆனால் போராட்­டத்தின் இலக்­கிற்கு அவ­சி­ய­மான தெளி­வான, ஒன்­றி­ணைந்த கொள்கை ரீதி­யான ஐக்­கி­யப்­பட்ட நிலைப்­பாடு என்­பது கேள்­விக்­கு­ரி­ய­தா­கவே இருந்து வந்­துள்­ளது. – இருந்து வரு­கின்­றது.

போராட்­டத்­துக்­கான கொள்கை நிலை­களில் காலத்­துக்­குக்­கேற்ற மாற்றம் அவ­சியம் என்ற உண்மை பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில், பல்­வேறு கசப்­பான அனு­ப­வங்­களின் மூலம் உணர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இருப்­பினும் கல்­தோன்றி மண்­தோன்றா காலத்­துக்கு முன் தோன்­றி­யவன் தமிழன் என்று பெருமை பேசி, பழ­மையில் ஊறித்­தி­ளைக்­கின்ற போக்கில் மாற்றம் ஏற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. ஆளுக்­கொரு நிலைப்­பாடு, ஆளுக்­கொரு கோலம் என்ற போக்கும் அர­சியல் நிலையுமே காணப்படுகிறது.

போராட்­டத்தின் இலக்கை நோக்­கிய பய­ணத்தில் கால மாற்­றத்­திற்கும் அர­சியல் யதார்த்த நிலை­மை­க­ளுக்கும் உகந்த முறையில் கொள்­கைகள் பல­த­ரப்­பி­ன­ராலும் ஒன்­றி­ணைந்து பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தில்லை. அத்­த­கைய பரி­சீ­ல­னையின் அடிப்­ப­டையில் போராட்டம் பல­த­ரப்­பி­ன­ராலும் ஒருமுக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அந்த முன்­னெ­டுப்­பிற்­கான முயற்­சிகள் சிறிய அள­வி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டன என்­பதும், அந்த முயற்­சியின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட ஐக்­கி­யப்­பட்ட நிலை­மையும் குறு­கிய காலத்­தி­லேயே அற்றுப் போய்­விட்­டன என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

சுய அர­சியல் இலாபம், கட்சி அர­சியல் நன்­மைகள் என்ற எல்­லை­களைக் கடந்து திறந்த மன­தோடு உரிமைப் போராட்­டத்தின் பங்­கா­ளர்­க­ளினால், இந்த மீள் பரி­சீ­லனை காலத்­துக்குக் காலம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட வர­லாற்றைக் காண முடி­ய­வில்லை. ஓரிரு சந்­தர்ப்­பங்­களில் இந்த ஒற்­றுமை உரு­வாக்­கப்­பட்­டது என்­பதை மறுக்க முடி­யாது. தமிழர் விடு­தலைக் கூட்­டணி, தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு போன்ற கூட்டு இணை­வுகள் சாத்­தி­ய­மா­கி­யி­ருந்­தன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆயினும் அவற்றின் செயல் வடிவ விளை­வு­களும் தொடர்ச்­சியும் கவ­லைக்­கு­ரிய நிலை­மை­யையே பிர­தி­ப­லித்­தி­ருக்­கின்­றன.

போராட்­டத்தின் இலக்கு ஒரே இலக்­காகத் தோற்­ற­ம­ளிக்­கலாம். ஆனால், போராட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான தலை­மைத்­து­வத்தை ஏற்­றுள்ள பலரும், ஆளுக்­கொரு கொள்கை, காலத்­துக்கு ஏற்ற கோலம் என்ற போக்கில் பய­ணித்­தி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. அந்தப் பயணம் எல்­லை­யற்­ற­தாகத் தொடர்ந்து கொண்­டி­ருப்­பது தமிழ் அர­சி­யலின் மோச­மான சோக­நிலை என்றே கூற வேண்டும்.

பேரி­னத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­க­ளுடன் சரி சமத்­து­வ­மாக, இந்த நாட்டின் குடி­மக்கள் என்ற உய­ரிய அந்­தஸ்­துடன் வாழ வேண்டும். அதற்­கான உரி­மைகள் இருக்க வேண்டும். அந்த உரி­மைகள் அர­சியல், சமூக, பொரு­ளா­தார, சமய, கலை, கலா­சார விழு­மிய நிலை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அந்த உறு­திப்­பாடு கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட முடி­யா­த­தாக இருக்க வேண்டும். மறுத்­து­ரைத்து ஒடுக்­கப்­ப­டு­வ­தற்கும், அதி­கார நிலை­களில் மீளப் பெறப்­ப­டு­வ­தற்கும் இட­ம­ளிக்க முடி­யா­த­தாக அமைந்­தி­ருக்க வேண்டும் என்­பதே – அந்த சரி சம­னான உரிமை கோரிக்­கையின் அடிப்­ப­டை­யாகும்.

இத்­த­கைய அடிப்­ப­டையைக் கொண்ட உரிமைப் போராட்டம், பேச்­சு­வார்த்­தைகள், சாத்­வீகப் போராட்டம், ஒத்­து­ழை­யாமை போராட்டம், அடக்­கு­மு­றைக்கு எதி­ரான போராட்டம், அடக்­கு­மு­றையில் இருந்து பாது­காத்துக் கொண்டு போராட வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லான ஆயுதப் போராட்டம் என்று பல படி­நி­லை­களைக் கடந்து வந்­துள்­ளது.

இந்த படி­நி­லை­களில் பேரின மக்­க­ளுடன் இணைந்து வாழ்­வ­தற்­கான விருப்பு, அதி­கார வர்க்­கத்தின் அடக்­கு­மு­றை­க­ளினால், தகர்க்­கப்­பட்­டது. அதுவே, தனி­நாட்டுக் கோரிக்கை நிலைப்­பாட்டை நோக்கித் தமி­ழர்­களை உந்­தித்­தள்­ளி­யது. ஆயுதப் போராட்டம் அந்தத் தனி­நாட்டுக் கோரிக்­கையில் அசைக்க முடி­யாத கொள்கைப் பிடிப்பைப் பிர­தி­ப­லித்­தி­ருந்­தது.

சிறு­பான்மை இன மக்கள் மீது அடக்­கு­மு­றையை நிரந்­த­ர­மான அர­சியல் அணு­கு­மு­றை­யாகக் கொண்­டி­ருந்த ஆட்­சி­யா­ளர்­களை இந்த ஆயுதப் போராட்டம் ஆட்டம் காணவும், அஞ்சி ஒடுங்­கவும் செய்­தி­ருந்­தது. ஆனால், அர­சியல் ரீதி­யான மன­நிலை மாற்­றத்தை நோக்கி அவர்­களை உந்­தித்­தள்ளச் செய்­வ­தற்கு அந்த அழுத்தம் உத­வ­வில்லை.

மாறாக ஆயுதப் போராட்டம் என்ற அந்த அர­சியல் அழுத்­தத்தை, சர்­வ­தேச ஒழுங்­க­மை­வுக்கு உகந்­த­தாக மாற்றி, பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரித்து, அதனை அதி­கூ­டிய இரா­ணுவ பலத்தின் மூலம், அடித்து நொறுக்­கு­வ­தற்கே பேரி­ன­வாத ஆட்­சி­யா­ளர்கள் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். இது அவர்­க­ளு­டைய குள்­ள­ந­ரித்­த­ன­மான அர­சியல் உத்­தி­யாக வெளிப்­பட்­டி­ருந்­தது.

ஐக்­கி­யப்­பட முடி­ய­வில்லை

தாயக மண் உரித்­துடன் கூடிய உறு­தி­யான, நிரந்­த­ர­மான ஓர் அர­சியல் தீர்வை எட்ட வேண்டும் என்­பது தமிழர் தரப்பு அர­சி­யலின் அசைக்க முடி­யாத இலக்கு.

எதிர்ப்பு அர­சியல் போக்கைக் கடைப்­பி­டித்­த­வர்­க­ளா­யி­னும்­ சரி, இணக்க அர­சி­யலைக் கடைப்­பி­டித்­த­வர்­க­ளா­யி­னும்­ சரி, அபி­வி­ருத்தி அர­சி­யலைக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளா­யி­னும்­ சரி, அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் இதுவே பொது­வா­னதோர் அர­சியல் இலக்­காக இருந்­தது. காலங்கள் கரைந்­துள்ள போதிலும், அந்த இலக்கை நோக்­கிய நிலையில் அவர்­க­ளிடம் மாற்றம் இல்லை என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்­பதே பொது­வான அர­சியல் குறிக்­கோ­ளாக இருந்த போதிலும், அதற்­கான கொள்கை வழிப்­போக்கில், இந்த மாறு­பட்ட நிலை­களில் உள்ள தமிழ் அர­சியல் சக்­திகள் ஏன் ஒன்­றி­ணைய முடி­ய­வில்லை, ஐக்­கி­யப்­பட முடி­ய­வில்லை என்­பது விடை காண முடி­யாத வினா­வாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

மித­வாத தமிழ் அர­சியல் கட்­சி­களே தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யாக ஒன்­றி­ணைந்து, தனி­நாட்டைத் தவிர வேறு வழி­யில்லை என்ற அர­சியல் தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருந்­தன. தேசிய கட்­சி­களின் நிழலில் அர­சியல் முன்­னெ­டுப்­புக்­களைக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளும்­கூட, அடி­ம­னதில் இந்தத் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளா­கவே இருந்­தார்கள்.

மித­வாத அர­சியல் சக்­தி­களின் தனி­நாட்டுக் கோரிக்கை தீர்­மா­னத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­காக ஆயு­த­மேந்திப் போரா­டிய இளைஞர் சக்­தி­க­ளும்­கூட, தமக்குள் ஐக்­கி­யப்­பட்டு தொடர்ச்­சி­யாக ஆயுதப் போராட்­டத்தை முன்­னெ­டுக்க முடி­யாமல் போய்­விட்­டது. சகோ­தரப் படு­கொ­லைகள் என்ற அர­சியல் சாபக்­கேட்டு நிலை­மைக்கு ஆயு­த­மேந்­தி­யி­ருந்த இளைஞர் அமைப்­புக்கள் ஆளாகிப் போயின. அந்த நிலைமை தமிழ் அர­சியல் போராட்­டத்தின் பிர­தான மனித வலு­வா­கிய இளைஞர் சக்­தியை மலி­னப்­ப­டுத்­தி­யது. அது­மட்­டு­மல்­லாமல் மோச­மான பல­வீ­னத்தை நோக்­கியே தமிழ் அர­சி­யலை நகர்த்­தி­யி­ருந்­தது. தனி­நாட்­டுக்­கான ஆயுதப் போராட்ட வர­லாற்றில் கசப்­பான சாபக்­க­கே­டா­கவே அந்த சகோ­தரப் படு­கொலை அர­சியல் நிலைமை பதி­வா­கி­யி­ருக்­கின்­றது.

ஆயுதப் போராட்ட காலத்தில் தங்­க­ளுக்­கி­டையில் திம்பு பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது ஐக்­கி­யப்­பட்­டி­ருந்த ஆயு­த­மேந்­திய அமைப்­புக்கள் தொடர்ச்­சி­யாகத் தமது போராட்டச் செயற்­பா­டு­களை ஒற்­று­மை­யாக முன்­னெ­டுக்க முடி­யாமல் போய்­விட்­டது. ஆயு­தப்­போ­ராட்­டத்­தின்­போது அவ்­வப்­போது, குறிப்­பாக யாழ்.கோட்­டையில் நிலை­கொண்­டி­ருந்த இரா­ணுவம், மக்கள் குடி­யி­ருப்­புக்­களை நோக்கி ஷெல் தாக்­கு­தல்­களை நடத்­திய தரு­ணங்களில் அந்த அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டி­ருந்த போதிலும், அரச படை­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தில் தொடர்ச்­சி­யாக ஒன்­ற­ிணைந்து தமது போராட்டச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை.

இந்­திய அமைதி காக்கும் படை­யி­னரின் வரு­கை­யை­ய­டுத்து, ஆயுதமேந்­திய அமைப்­புக்கள் ஜன­நா­யக வழிக்குத் திரும்­பின. விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த போதிலும், ஏனைய அமைப்­புக்கள் ஜன­நா­யக வழி­மு­றை­யி­லான தமது அர­சியல் பய­ணத்தைத் தொடர்ந்த போதிலும், அவை இறுக்­க­மான ஓர் ஐக்­கி­யப்­பட்ட வழி­நின்று தொடர்ச்­சி­யாகச் செயற்­பட முடி­ய­வில்லை.

z577தயக்­கத்­திற்­கு­ரி­யதோ தலைமை. . . . .?

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்குப் பின்னர், உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­பிலும், முன்னர் ஆயு­த­மேந்திப் போரா­டிய அனைத்து அமைப்­புக்­களும் அந்த கூட்­ட­மைப்பில் இணைந்து செயற்­பட முடி­ய­வில்லை.

யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர், தமிழர் தரப்பின் முக்­கிய அர­சியல் தலை­மை­யாகத் துளிர்­விட்ட தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்பட்ட மக்­களின் மீள் எழுச்­சிக்கு அவ­சி­ய­மான அடிப்­படைத் தேவை­களை அடி­நா­த­மாகக் கொண்ட பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் வெற்­றி­க­ர­மாகச் செயற்­பட முடி­ய­வில்லை. இதனால் மாற்றுத் தலைமை குறித்த சிந்­த­னைக்­கான நிர்ப்­பந்­த­மான நிலை­யிலும், ஜன­நா­யக வழிக்குத் திரும்­பி­யி­ருந்த முன்னாள் ஆயுதக் குழுக்­க­ளா­கிய அமைப்­புக்­க­ள் ஒன்­றி­ணைந்­ததோர் அர­சியல் தலை­மையை உரு­வாக்­கு­வதில் வல்­லமை குறைந்­த­வை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்­தபின் உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் ­தே­சிய மக்கள் முன்­னணி மற்றும் ஈ.பி.­ஆர்­.எல்.எப்., தமிழர் விடு­த­லைக்­ கூட்­டணி போன்ற கட்­சி­களும், தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­புடன் இணை­யாமல் வெளியில் இருந்து ஆரம்­ப­காலம் தொட்டுச் செயற்­பட்டு வந்த ஈ.பி­.டி.பி. உள்­ளிட்ட ஏனைய கட்­சி­க­ளும்­கூட தங்­க­ளுக்குள் ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­க­ளுக்­கென ஒன்­றி­ணைந்­ததோர் அர­சியல் அமைப்பை உரு­வாக்க முடி­ய­வில்லை.

தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­புக்குத் தலைமை ஏற்­றுள்ள தமி­ழ­ரசுக் கட்சி தனது கட்சி நலன்­களைப் பேணு­வ­திலும், அந்தக் கட்­சியை மக்கள் மத்­தியில் செல்­வாக்­குடன் வளர்த்­தெ­டுப்­ப­திலும் கூடிய சிரத்­தை­யெ­டுத்துச் செயற்­ப­டு­கின்­றதோர் அர­சியல் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றது. இந்த கட்­சி­சார்ந்த சுய­நலப் போக்கே கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் போன்­ற­வர்கள் கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து செல்ல கார­ண­மா­கி­யது.

தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பை ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்து வலு­வா­னதோர் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்­துக்­கு­ரிய சக்­தி­யாகக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குத் தமி­ழ­ர­சுக்­கட்சி தவ­றி­விட்­டது. இத­னா­லேயே தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற தமிழ் மக்­களின் அர­சியல் வலிமை பல­வீ­ன­மான நிலை­மைக்கு ஆளா­கி­யது.

அங்­கத்­து­வக்­ கட்­சி­களின் கருத்­துக்­களை உள்­வாங்கி உள்­ளக ஜன­நா­யகப் பண்பை மேம்­ப­டுத்தி, கூட்­ட­மைப்பை வலு­வா­னதோர் அர­சியல் தலை­மை­யாகக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குத் தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் முடி­யாமல் போய்­விட்­டது. அரச மட்­டத்­திலும், சர்­வ­தேச மட்­டத்­திலும் தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு என்­பது தமிழ் மக்­களின் சக்தி வாய்ந்­ததோர் அர­சியல் அமைப்­பாகக் கரு­தப்­பட்ட போதிலும், கூட்­ட­மைப்பின் உட்­கட்­ட­மைப்பும், உள்­ளகச் செயற்­பா­டு­களும் அவ்­வாறு அமை­ய­வில்லை என்­பதே கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து சென்­ற­வர்­க­ளி­னதும், கூட்­ட­மைப்பின் மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­தி­ருந்­த­வர்­க­ளி­னதும் கருத்­தாகும்.

கூட்­ட­மைப்பு என்­பது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குக் காலத்­துக்குக் காலம் உரிய அணு­கு­மு­றை­களைப் பின்­பற்றி, பங்­காளிக் கட்­சி­களின் ஏகோ­பித்த ஆத­ர­வுடன் சரி­யான நிலைப்­பாட்டில் காரி­யங்­களை முன்­னெ­டுக்­காமல் அதன் தலைமை நிலையில் உள்ள தமி­ழ­ர­சுக்­ கட்சி தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுத்துச் செயற்­ப­டு­கின்­றது என்ற அதி­ருப்­தியும் இந்த நிலை­மைக்குத் துணை­செய்­தி­ருந்­தது.

குறிப்­பாக 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்தல் கால வாக்­கு­று­தி­களை தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை கடைப்­பி­டிக்கத் தவ­றி­யது, நிறை­வேற்ற முயற்­சிக்­க­வில்லை போன்ற பொது­வான குற்­றச்­சாட்டுக்களும் கூட்­ட­மைப்புத் தலை­மையின் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. தமிழ் மக்­களின் நலன்­க­ளிலும் பார்க்க தேர்­தலில் வெற்­றி­பெற்று அர­சியல் செல்­வாக்கைப் பேண வேண்டும் என்ற சுய­ந­லப்­போக்கில் கூட்­ட­மைப்பின் தலைமை அதிக கவனம் செலுத்­து­கின்­றது என்ற குற்­றச்­சாட்டும் உள்­ளது.

நிலை­மைகள்

சாத்­வீகப் போராட்ட வழி­சென்ற தமிழ் மக்கள் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட அரச அடக்­கு­மு­றைகள், அடா­வ­டித்­த­னங்­களில் இருந்து அவர்­களைக் காத்து, அர­சியல் போராட்­டத்தை வலிமை மிக்­க­தாக முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவே தனி­நாட்டுக் கோரிக்­கையை வரித்­துக்­கொண்ட ஆயுதப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்த போராட்­டத்தைப் பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இந்­திய அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்பில் 1985 ஆம் ஆண்டு ஜுலை,ஆகஸ்ட் மாதங்­களில் இரண்டு அமர்­வு­க­ளாக பூட்டான் நாட்டுத் தலை­ந­க­ரா­கிய திம்­புவில் அர­சியல் தீர்­வுக்­கான முத­லா­வது பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன. அது தோல்­வியில் முடிந்த பின்னர், 1987 ஆம் ஆண்டு இலங்கை–இந்­திய ஒப்­பந்தம் செய்­யப்­பட்டு மாகா­ண­ சபை முறை­மையின் கீழ் அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

அதுவும் தோல்­வி­ய­டைந்து, ஆயுத மோதல்கள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்த ஒரு பின்­ன­ணியில் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் செய்­யப்­பட்டு, நோர்வே நாட்டின் மத்­தி­யஸ்­தத்­துடன் சமா­தான பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அந்தப் பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து, யுத்தம் புதிய வேகத்­துடன் மூண்­டது.

தமி­ழர்­களின் வீரம், செயல் வல்­லமை மிகுந்த துணிவு, நவீன காலத்துப் போர்க்­கள வியூகப் பயன்­பாட்டுத் திறமை, ஒப்­பற்ற யுத்­த­முனைத் தியாகம், அதற்குச் சற்றும் சளைக்­காத அஹிம்சை வழி­யி­லான (திலீ­பனின்) உண்­ணா­வி­ரதப் போராட்டத் தியாகம், கொண்ட கொள்கை மீதான இறுக்­க­மான பிடிப்பு, கொள்­கையில் விட்­டுக்­கொ­டுக்­காத தன்மை போன்ற பல்­வேறு குண­ந­லன்­களும், பண்­பு­க­ளையும் தமிழ் மக்­களின் முப்­பது வரு­ட­கால ஆயுதப் போராட்டம் அரங்­கேற்­றி­யி­ருந்­தது.

ஆனால் விடு­த­லைப் ­பு­லி­களின் தலை­மையில் மிகத் தீவிரம் பெற்­றி­ருந்த தனி­நாட்­டுக்­கான ஆயுதப் போராட்டம், நேர்த்­தி­யா­னதோர் சட்டம், ஒழுங்கு, நீதித்­துறை என்­ப­வற்றை முக்­கி­ய­மாக உள்­ள­டக்­கிய ஆட்சி நிர்­வாகச் செயற்­பாடு, மக்கள் நலன்­சார்ந்த பொருண்­மிய கொள்கை போன்ற பல்­வேறு விட­யங்­களை உள்­ள­டக்­கி­யதோர் நிழல் அர­சாங்­கத்தின் பரீட்­சார்த்த கள­மாக வன்­னிப்­பி­ர­தேசம் திகழ்ந்­தது. அந்தப் போராட்டம் நல்ல கதை; முடிவு சரி­யில்லை என்ற விமர்­சன ரீதி­யி­லான முடிவை 2009 ஆம் ஆண்டு எட்­டி­யது.

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான பத்து வருட காலத்­திலும் இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வில்லை. அதற்­கான பேச்­சு­வார்த்­தை­களோ அல்­லது அத­னை­யொட்­டிய தீவி­ர­மான முயற்­சி­களோ மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஆனால் யுத்­தத்தில் வெற்றி பெற்ற அர­சாங்­கத்தின் போக்கில் ஏற்­பட்ட உள்ளூர் மற்றும் சர்­வ­தேச அதி­ருப்தி நிலை கார­ண­மாக யுத்தம் முடி­வுக்கு வந்த 9 ஆண்­டு­களின் பின்னர் நடை­பெற்ற தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும் என்ற ஆணையின் அடிப்­ப­டையில் உரு­வா­கிய புதிய ஆட்­சியில் பல்­வேறு மாற்­றங்­க­ளுக்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் ஊடாக அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

நல்­லாட்சி அர­சாங்கம் என்­ற­ழைக்­கப்­பட்ட புதிய அர­சாங்­கத்தின் நான்கு வருடச் செயற்­பா­டு­களும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கோ அல்­லது,யுத்­த­கா­லத்து உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐ.நா. மற்றும் சர்­வ­தே­சத்தின் அழுத்­தத்­தை­யொட்­டிய நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் முறை­யாக அர­சாங்­கங்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இணை அனு­ச­ரணை வழங்கி நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படப் போவதாக அளித்த உறுதிமொழிகளைக் காற்றில் கரைப்பதற்கான முயற்சிகளிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

பொறுப்பு கூறுகின்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கான கால எல்லையைக் காலத்துக்குக் காலம் நீடித்துக் கொள்வதில் காட்டப்படுகின்ற அக்கறையையும், ஆர்வத்தையும் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுகின்ற செயற்பாடுகளில் அரசு காட்டவில்லை. இழுத்தடித்து ஏமாற்றுகின்ற ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதிலேயே அது குறியாக இருக்கின்றது.

இதனால், பொறுப்பு கூறுகின்ற கடமைக்குரிய செயற்பாடுகளுடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்கின்ற கடப்பாடும்கூட கானல் நீராகின்ற நிலைமையை நோக்கியே நகர்ந்துள்ளது.

மொத்தத்தில் தனிநாட்டுக்கான கோரிக்கை ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததுடன் கோஷத்துடன் முடிவுற்றதைப் போலவே, யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கு இணைப்பு, பகிரப்பட்ட இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வும் தேர்தல் கால கோஷத்துடன் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

தனிநாடு சாத்தியமில்லை. வடகிழக்கு தாயகக் கோட்பாடும் சாத்தியமில்லை. பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறைமையும் “ஏக்கிய ராஜ்ஜிய” – ஒருமித்த நாடு என்ற, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அரசியல் தீர்வுப் பிரசாரப் பொறிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த பின்னணியிலேயே தமிழ் மக்களின் சம அரசியல் உரிமைக்கான கோரிக்கையும் அரசியல் போராட்டங்களும் இறங்குமுக நோக்கில் சரிந்து வந்து சந்தியில் விறைத்து நிற்கின்ற ஒரு நிலைமையை எட்டியுள்ளது.

இந்தத் தேக்க நிலையில் இருந்து தமிழ் மக்கள் எவ்வாறு மீளப் போகின்றார்கள்? விறைப்பு நிலையை எட்டியுள்ள அரசியல் உரிமைக்கான போராட்டம் எந்த வகையில் உயிர்ப்படையப் போகின்றது?

இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கப் போவது யார் என்பது தெரியவில்லை.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com