ilakkiyainfo

இறுதி கிரியைக்குப் பின்னர் சவப்பெட்டியை திறத்தோருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பெண்ணாக மாறிய ஆணின் சடலம்

இறுதி கிரியைக்குப் பின்னர் சவப்பெட்டியை திறத்தோருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பெண்ணாக மாறிய ஆணின் சடலம்
March 22
12:06 2019

சவுதி அரேபியாவில் இறந்துபோன தங்களது மகனது உடலுக்கு பதிலாக சவப்பெட்டியில் இலங்கை நாட்டு பெண்ணின் உடல் வந்ததை பார்த்து குடும்ப அங்கத்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா, கேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி ரபிக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது உடலை கேரளாவுக்கு கொண்டு வருவதற்காக குடும்பத்தாரால் பணிக்கப்பட்டமைக் காரணமாக, செய்யப்பட்ட ரபிக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இறுதி கிரியைகள்  செய்து முடிந்துவிட்டு, அடக்கம் செய்யப்போகையில் சவப்பெட்டியை திறந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அங்கு, சவப்பெட்டிக்குள் இருந்தது ஒரு பெண்ணின் உடல். இதனைத்தொடர்ந்து உடனடியாக கொன்னி பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் கொச்சி விமான நிலையம் மற்றும் சவுதி விமான நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் , அது இலங்கை பெண்ணின் உடல் என்றும், ரபிக்கின் உடல் இலங்கைக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குடும்பத்தாரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சவுதி விமான நிலையத்தில் வைத்து இறந்துபோன உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் மாறியுள்ளன. இதனைத்தொடர்ந்து இலங்கை பெண்ணின் உடல் கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மனவேதனையடைந்த ரபிக்கின் பெற்றோர், இலங்கையில் இருக்கும் எங்களது மகனது உடலை எப்படியாவது மீட்டு தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ரபிக்கிற்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், தற்போது அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளமையும் பெரும் வேதனையானதோர் சம்பவமாகும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com