ilakkiyainfo

இலங்கைப் படையினருக்கு இடமளிக்குமா அமெரிக்கா? -சுபத்ரா (கட்டுரை)

இலங்கைப் படையினருக்கு இடமளிக்குமா அமெரிக்கா? -சுபத்ரா (கட்டுரை)
May 22
23:10 2015

போர் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், இலங்கை இரா­ணு­வத்தை, சர்வ­தேச தரம் வாய்ந்த ஒன்­றாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்­கேற்ப செயற்­படும் ஒன்­றாக மாற்­று­கின்ற முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

கடந்த மாதம் 25ஆம் திகதி நேபா­ளத்தில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்தை அடுத்து, மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடு­ப­டு­வ­தற்­காக மேஜர் ஜெனரல் மைத்ரி டயஸ் தலை­மையில், இரண்டு கட்­டங்­க­ளாக அனுப்பி வைக்­கப்­பட்ட 141 படை­யினர், கடந்­த­வாரம் இலங்­கைக்குத் திரும்­பி­யுள்­ளனர்.

இது வெளி­நாடு ஒன்­றுக்கு இலங்கை படை­யி­னரை உதவிப் பணி­க­ளுக்கு அனுப்­பிய முத­லா­வது சந்தர்ப்­ப­மாகும்.

இதற்கு முன்னர் ஜப்­பானில் இடம்­பெற்ற நில­ந­டுக்கம் மற்றும் சுனா­மியை அடுத்து, உத­விப்­ப­ணிக்கு இலங்கைப் படை­யினர் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட போதும், அது­பற்­றிய தெளி­வான தரவுகள் இல்லை.

ஆனால், இலங்கை படை­யினர், வெளி­நா­டொன்றில் மேற்­கொண்ட மிகப் பெரி­யதும், காத்திரமானதுமான மீட்பு, உதவிப் பணி என்று நேபா­ளத்தில் மேற்­கொண்­டதை குறிப்­பிட்டுக் கூறலாம்.

விமா­னப்­ப­டையின் சி-130 விமா­னத்தின் மூலமும், சிறி­லங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலமும், படை­யி­னரும், பொருட்­களும் காத்­மண்­டு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

படை­யி­ன­ரையும், பொருட்­க­ளையும், ஏற்றிச் சென்ற விமா­னப்­ப­டையின் சி-130 போக்­கு­வ­ரத்து விமானம், காத்­மண்­டுவில் பழு­த­டைந்து போய் நின்­றதால், உதவிக் குழு­வி­னரை அனுப்­பு­வதில் தாமதம் ஏற்­பட்­டது.

இலங்கைப் படை­யினர், சர்­வ­தேச அளவில் குறிப்­பி­டத்­தக்க மனி­தா­பி­மானப் பணி ஒன்றில் ஈடு­பட்­ட­தான பாராட்டைப் பெற்­றி­ருக்­கி­றார்கள்.

எனினும், ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், மனி­தா­பி­மானப் போர் என்ற பெயரில், வன்­னியில் மேற்கொள்­ளப்­பட்ட போரின் போது, படை­யி­னரால் பாரி­ய­ளவில் மனித உரி­மைகள் மீறப்­பட்­ட­தா­கவும், போர்க்­குற்­றங்கள் இழைக்­கப்­பட்­ட­தா­கவும் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து, காப்­பாற்ற, இது­போன்ற மனி­தா­பி­மானப் பணிகள் உதவப் போவ­தில்லை.

சர்­வ­தேச அளவில் இலங்கை இரா­ணு­வத்தை ஒரு தொழில்சார் இரா­ணு­வ­மாக தர­மு­யர்த்திக் கொள்வதற்­கான முயற்­சி­களில் ஒன்­றா­கவும், நேபாள மீட்பு நட­வ­டிக்கை பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை இரா­ணு­வத்­துக்கும், அர­சாங்­கத்­துக்கும், போர்க்­குற்­றச்­சாட்­டுகள் ஏற்­ப­டுத்­திய அசெளகரியங்களில் இருந்து மீள வேண்­டிய அவ­சியம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அதற்­காக, வெளி­யு­லகின் பாராட்டைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான மனி­தா­பி­மானப் பணி­களில் கூடுதல் கவனம் செலுத்தி வரு­கி­றது அர­சாங்கம்.

இப்­போ­தைய நிலையில், ஐ.நா. அமை­திப்­ப­டையில் இலங்கைப் படை­யி­ன­ருக்கு கூடுதல் இடங்­களை ஒதுக்­கு­வதே, அர­சாங்­கத்­தி­னதும், இரா­ணு­வத்­தி­னதும் ஒரே குறி­யாக இருக்­கி­றது.

ஐ.நா. அமைதிப்படையில் தற்­போது, இலங்­கையின் முப்­ப­டை­க­ளையும் சேர்ந்த 1286 படை­யினர் பணியாற்­று­கின்­றனர்.

விமா­னப்­ப­டையின் ஹெலி­கொப்டர் அணி­யொன்றும், இரா­ணு­வத்தின் துருப்­புக்­காவி கவச வாக­னங்­களும் கூட, ஐ.நா. அமை­திப்­ப­டையில் இயங்கி வரு­கின்­றன.

ஐ.நா. அமை­திப்­ப­டையில் துருப்­புக்­களை இணைத்துக் கொள்­வதன் மூலம், பல்­வேறு நன்­மை­களை அடைய முடியும்.

படை­யி­ன­ருக்கு வெளி­நாட்டு கள அனு­ப­வத்­தையும், ஐ.நாவின் கீழ் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்ப எவ்வாறு பணி­யாற்­று­வ­தென்ற பயிற்­சி­யையும் படை­யி­ன­ருக்கு பெற்றுக் கொடுக்க முடியும்.

சுமார் ஆயிரம் டொலர் வரை மாத ஊதியம் வழங்­கப்­ப­டு­வதால், படை­யி­ன­ருக்கு குறிப்­பிட்ட காலத்துக்கு கணி­ச­மான வரு­மா­னத்தை ஈட்டிக் கொடுக்க முடியும்.

போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளினால் இழந்து போயி­ருக்கும் இலங்கை இரா­ணு­வத்தின் பெயரை மீளப் பெற்றுக்­கொள்ள முடியும்.

போருக்­காக திரட்­டப்­பட்ட பெரு­ம­ளவு படை­யி­னரில் ஒரு பகு­தி­யி­னரை, பரா­ம­ரிக்கும் அழுத்தங்களிலிருந்து விடு­பட முடியும்.

மேலும் நாட்­டுக்கு அந்­நியச் செலா­வணி வரு­வாயும் கிடைக்­கி­றது. இது போன்ற பல்­வேறு காரணங்களுக்­கா­கவே, ஐ.நா. அமை­திப்­ப­டையில் இலங்கைப் படை­யி­னரை இணைத்துக் கொள்­வதை அதி­க­ரிப்­பதில் அர­சாங்கம் நாட்டம் காட்டி வரு­கி­றது.

இலங்கைப் படை­யி­னரை, ஐ.நா. அமை­திப்­ப­டையில் சேர்த்துக் கொள்­வ­தற்கு ஐ.தே.க அர­சாங்­கமே முக்­கி­ய­மான கார­ணி­யாகும்.

1960ஆம் ஆண்டு ஐ.நா. அமை­திப்­ப­டையில், கொங்­கோவில் பணி­யாற்­று­வ­தற்­காக ஆறு கண்காணிப்பா­ளர்­களை இலங்கை முதன்­மு­றை­யாக அனுப்­பி­யி­ருந்­தது.

அதற்குப் பின்னர், 2002இல் பத­விக்கு வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தின் முயற்­சியால், ஐ.நா. அமை­திப்­ப­டையில் அதி­க­ளவு படை­யி­னரை இணைத்துக் கொள்ளும் நட­வ­டிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பெறு­பே­றா­கவே, ஹெய்ட்­டிக்கு 2004ஆம் ஆண்டில் 950 பேர் கொண்ட இலங்கை இரா­ணுவப் படைப்­பி­ரிவு ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இப்­போது, ஹெய்டி, லெபனான், மேற்கு சஹாரா, தென்­சூடான், கொங்கோ உள்­ளிட்ட இடங்­களில் இலங்கைப் படை­யினர் ஐ.நா. அமை­திப்­ப­டையில் பணி­யாற்றி வரு­கின்­றனர். போர் முடி­வுக்கு வந்த பின்னர், இலங்கைப் படை­யி­னரை அதி­க­ளவில் ஐ.நா. அமை­திப்­ப­டையில் இணைத்துக் கொள்­வ­தற்கு மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பெரி­ய­ள­வி­லான முயற்­சி­களை மேற்­கொண்­டது.

ஐ.நா. அமை­திப்­ப­டைக்கு 5000 படை­யி­னரை அனுப்பப் போவ­தாக, படை­யி­ன­ருக்கு வாக்குறுதிகளையும் கொடுத்­தி­ருந்தார் மஹிந்த ராஜ­பக் ஷ.

ஆனால், அவ­ரது காலத்தில் அது எட்­டாக்­க­னி­யா­கவே இருந்­தது. இப்­போதும் கூட, ஐ.நா. அமைதிப்படைக்கு அதி­க­ளவில் இலங்கைப் படை­யி­னரை சேர்த்துக் கொள்ள வைப்­ப­தற்­கான முயற்சிகளில் அர­சாங்கம் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது.

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போதும், அண்­மையில் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்­கைக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் போதும், ஐ.நா. அமை­திப்­ப­டைக்கு கூடுதல் படை­யி­னரைச் சேர்த்துக் கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­ல­ரிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்தக் கோரிக்­கையை வெளிப்­ப­டை­யா­கவே முன்­வைத்­தி­ருந்தார்.

எப்­ப­டி­யா­வது 5000 இலங்கைப் படை­யி­னரை ஐ.நா. அமை­திப்­ப­டையில் இணைத்துக் கொள்­வதன் மூலம், படை­யி­ன­ரி­னதும் நாட்­டி­னதும் வரு­வாயை உயர்த்திக் கொள்­ளலாம் என்று அர­சாங்கம் எதிர்பார்க்­கி­றது.

அதை­விட, படை­வி­லக்க, படைக்­கு­றைப்பு சர்ச்­சை­களில் இருந்து மீள்­வ­தற்கும் இது உதவும் என்று அரசாங்கம் கரு­து­கி­றது.

இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு படைக்­கு­றைப்பு மற்றும் படை­வி­லக்கம் முக்­கி­ய­மா­னது என்றும், அதற்கு அமெ­ரிக்கா இந்­தியா போன்ற நாடுகள் உதவ முடியும் என்றும் அண்­மையில் இந்­திய ஊடகம் ஒன்று ஆலோ­சனை கூறி­யி­ருந்­தது.

இலங்கைப் படை­யி­ன­ருக்கு மாற்றுத் தொழில் வாய்ப்­பு­களைத் தேடிக் கொடுப்­பதன் மூலம், இலங்­கைக்கு உதவ முடியும் என்றும், இந்­திய ஊடகம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

வடக்­கி­லி­ருந்து விலக்­கப்­படும் படை­யி­னரில் ஒரு பகு­தி­யி­னரை, ஐ.நா. அமை­திப்­ப­டையில் இணைத்துக் கொள்­வதன் மூலம், அவர்­களை நிலை நிறுத்தும் பிரச்­சி­னையில் இருந்தும், பரா­ம­ரிக்கும் அழுத்­தங்­களில் இருந்தும் இலங்கை அர­சாங்­கத்­தினால் விடு­பட முடியும்.

இப்­போ­தைய அர­சாங்கம், அந்தக் கார­ணத்தை முன்­வைத்தே அமெ­ரிக்க ஆத­ரவைப் பெற முனை­கி­றது. ஐ.நா. அமை­திப்­ப­டைக்கு ஆள­ணியை அதி­க­ரிப்­பதில் அமெ­ரிக்­காவின் செல்­வாக்கு அதிகம்.

ஆனால், ஐ.நா. அமை­திப்­ப­டையில் அமெ­ரிக்கா வெறும் 95 பேரை மட்டும் தான் இணைத்­தி­ருக்­கி­றது.

120 நாடு­களைச் சேர்ந்த 97,175 பேர் இதில் பணி­யாற்­று­கின்­றனர். மற்­ற­நா­டுகள்  ஆயி­ரக்­க­ணக்­கான துருப்­புக்­களை அனுப்­பி­யி­ருந்­தாலும், அமெ­ரிக்கா தனது படை­யி­னரை இதில் ஈடு­ப­டுத்­து­வ­தில்லை.

அதே­வேளை, இலங்கைப் படை­யி­னரை அதி­க­ளவில், ஐ.நா. அமை­திப்­ப­டையில் இணைத்துக் கொள்வதற்கு அமெ­ரிக்கா தரப்பில் தயக்கம் காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. ஐ.நா. தரப்­பிலும் அதே நிலைதான் உள்­ளது.

இதற்குப் பிர­தான காரணம், இலங்கைப் படை­யினர் மீதுள்ள குற்­றச்­சாட்­டுக்­கள்தான்.

குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து இலங்கைப் படை­யி­னரை, விடு­விக்கும் அல்­லது குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வைக்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­றி­யதே இந்த நிலைக்­கான கார­ண­மாகும்.

ஐ.நாவின் அமைதி நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பிரதிச்செயலர் அன்­ரனி ஜே பிளிங்கன், கடந்த மார்ச் மாதம் நிகழ்த்­திய உரை­யொன்றில், அமைதி நடவடிக்­கையில் ஈடு­படும் நாடுகள் குறித்து பிரஸ்­தா­பித்­தி­ருந்தார்.

அத்­துடன், சீனா, இந்­தோ­னே­சியா உள்­ளிட்ட பல நாடுகள், தமது படை­யி­னரின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க முன்­வந்­துள்­ள­தா­கவும், குறிப்­பிட்டுப் பாராட்­டி­யி­ருந்தார்.

அந்த நீண்ட உரையில் இலங்கைப் படை­யி­னரின் பணிகள் தொடர்­பாக பாராட்டுத் தெரி­விக்­கப்­ப­டவோ அல்­லது நீண்­ட­கா­ல­மா­கவே, தமது படை­யி­னரை அதி­க­ளவில் இணைத்துக் கொள்­ளு­மாறு இலங்கை விடுத்து வரும் வேண்­டுகோள் குறித்தே சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வில்லை.

இது, ஐ.நா. அமை­திப்­ப­டையில் இலங்கைப் படை­யி­னரை அதி­க­ளவில் உள்­ளீர்க்கும் உட­ன­டித்­திட்டம் ஏதும், அமெ­ரிக்­கா­விடம் இல்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யது.

எனினும், அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் இலங்கை அரசாங் கம் இதனை மீளவும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில், அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி நிகழ்த்­திய உரையின் போது, நாட்டைப் பாது­காக்க இலங்கைப் படை­யினர் பெரும் பணியை ஆற்­றி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும், ஐ.நா. அமைதிப்படையில் கூடு தல் படையினரை இணைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியை மட்டும் அவர் அளிக்கவில்லை.

இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சிமாற் றத்தை சாத­க­மாக அமெ­ரிக்கா கரு­தினாலும், இலங்­கை­யுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அது முயற்­சித்­தாலும், ஐ.நா. அமை­திப்­ப­டையில் கூடுதல் படையினரை இணைத்துக் கொள்­வ­தற்கு அமெ­ரிக்கா தரப்பில் அவ்­வ­ள­வாக ஆர்வம் காண்பிக்கப்படவில்லை.

இது தற்போதைய அரசாங்கத்துக்கு நெருடலாகவே இருந்தாலும், நேபாள உதவிப் பணி போன்ற சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் செயற்பாடுகளின் மூலம் அந்த நிலையை மாற்றிக் கொள்ள எத்தனிக்கிறது.

இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com