ilakkiyainfo

இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தும் நாடகமாடுகின்றது- நவநீதம் பிள்ளை சீற்றம்

இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தும் நாடகமாடுகின்றது- நவநீதம் பிள்ளை சீற்றம்
February 24
13:58 2019

இலங்கையின் அரசதலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்காக  அமைச்சரவையின் அனுமதியை பெறும் முயற்சியை  ஐக்கியநாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடுமையாக விமர்சித்துள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை குறித்து மனித உரிமை பேரவை விவாதிக்க உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தப்புவதற்காக  தாமதிக்கும் நாடகத்தை ஆடுகின்றது என  நவநீதம் பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்

தென்னாபிரிக்க பாணியில் மறப்போம் மன்னிப்போம் என்ற  இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள நவநீதம் பிள்ளை பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம்  நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதி செய்வதாக உறுதியளித்தது எனினும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு மாத்திரம் அமைச்சரவையின் அனுமதியை பெற முயல்வதன் மூலம் பின்னோக்கி செல்ல முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக  அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தென்னாபிரிக்கா உண்மையை தெரிவிப்பது விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லை எனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு உகந்தது என்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை இலங்கையில் இடம்பெற்ற விடயங்களுடன் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ள நவநீதம் பிள்ளை இங்கு பாரிய படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு அட்டுழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் தெரிவிப்பது போன்று தென்னாபிரிக்க மக்கள் வழக்குதாக்கல் செய்யாமலிருக்கவில்லை,கடந்த மாதம் கூட பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தவர்கள் பொலிஸாரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர் என நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com