ilakkiyainfo

இலங்கை தமிழரசு கட்சியின் மகளிர் அணித் தலைவியாக சரா எம்.பியின் மனைவி..??

இலங்கை தமிழரசு கட்சியின் மகளிர் அணித் தலைவியாக சரா எம்.பியின் மனைவி..??
August 19
13:30 2016

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது பாரியாரான யசோதையை நியமிக்க காய் நகர்த்தி வருகிறார் என அறிய முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவியான திருமதி அனந்தி சசிதரனுக்கும் கட்சிக்கும் இடையில் கடந்த காலத்தில் பல முரண்பாடுகள் காணப்பட்டன. இந்த முரண்பாடுகளால் அவர் தனது பதவியைத் தக்க வைப்பதில் தோல்வி கண்டார் அப்பதவியில் இருந்தும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

ஆனால் அனந்தி சசிதரனின் தோல்வியில் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் தந்திரமான காய் நகர்த்தல் முக்கிய பங்காற்றியது.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அனந்தி சசிதரனுக்கும் இடையிலான உறவு ஜனாதிபதி தேர்தலுடன் ஒட்டுமொத்தமாக இல்லாது போனது. அவர் பெயரளவில் மட்டும் மகளிர் அணித் தலைவி பதவியை வகித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் வெற்றி பெற்ற சரவணபவனுக்கு அரசியலிலும் கட்சியிலும் அதிகாரத்துடன் தொடர்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் குறைவாகத் தென்பட்டன.

ஆகவே தனது அதிகார பலத்தை தக்க வைக்க தனது மனைவியான யசோதையை களமிறக்க முடிவு செய்தார்.

கடந்த காலங்களில் அரசியல் ரீதியான சந்திப்புக்களில் பங்கேற்காத யசோதை , இரா.சம்பந்தன் எதிரக்கட்சி தலைவரானதும் வடக்குக்கு விஜயம் செய்தபோது அவருடனான அனைத்து சந்திப்புக்களிலும் கலந்துகொண்டார்.

sampanthan-yasothara-04

குறிப்பாக நல்லூர், மாவிட்டபுரம், நயினாதீவு ஆலயங்களுக்கு சம்பந்தனுடன் சென்றார். இதேபோன்று இவ்வாரம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சம்பந்தன் வந்தபோதும் அவருடன் ஆலயத்துக்கு விஜயம் செய்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அனந்தி சசிதரனுக்கும் இடையிலான முரண் காலத்திலும் சரி தற்போது அவரின் பதவி நீக்கத்தின் பின்னரான காலத்திலும் சரி எதிர்க்கட்சி தலைவருடன் வேறு எந்த அரசியல்வாதிகளின் மனைவியரையும் விட இவர் நெருக்கம் காட்டி வருகின்றமை சரவணபவனின் தந்திர அரசியலை வெள்ளிடைமலையாக்கியுள்ளது எனலாம்.

சரவணபவனின் மனைவி சம்பந்தனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com