பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தோழிகளான ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகா ஆனந்தும் இணைந்த பாடிக் கொண்டே ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலம் ஆனவர். ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் படங்களில் நடித்தவர். இருவரும் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்கள். போட்டியாளர்களாக கலந்துகொண்ட யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருக்கமான தோழிகள் ஆனார்கள்.

யாஷிகா போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் ஐஸ்வர்யா மட்டுமே கடைசிவரை களத்தில் இருந்து இரண்டாம் இடம் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இயல்புக்குத் திரும்பியுள்ள இந்நிலையில், யாஷிகா தற்போது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தாங்கள் இந்தப் பாடலை சொந்தமாக உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் ஐஸ்வர்யாவுடன் நடனமாடிக் கொண்டே, “நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு” என ஐஸ்வர்யாவுடன் இணைந்து பாடியும் உள்ளார். இந்த நடனம் இணையத்தில் பரவலாக கவனம் பெற்றுவருகிறது.