பாக்தாத்: ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஹாலிவுட் பட பாணியில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க சூளுரை எடுத்துள்ளார்.
தீவிரவாதிகள் இருக்கும் இடத்தில் அமெரிக்கா ஏற்கனவே வான்வெளி தாக்குதலை நடத்த துவங்கிவிட்டது. இந்நிலையில் தீவிரவாதிகள் ஹாலிவுட் பாணியில் ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு அமெரிக்காவை மிரட்டியுள்ளனர்.
“Flames of War: Fighting Has Just Begun” :வீடியோ பிளேம்ஸ் ஆப் வார்: ஃபைட்டிங் ஹாஸ் ஜஸ்ட் பிகன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ 1 நிமிடம் 27 விநாடிகள் ஓடுகிறது
வீடியோவில் டேங்குகள் வெடித்துச் சிதறுவது, அமெரிக்க ராணுவம் மீது தீவிரவாதிகள் முன்பு தாக்குதல் நடத்தியது, காயமடைந்த வீரரை அமெரிக்க வீரர்கள் தூக்கிச் செல்வது ஆகியவை ஸ்லோ மோஷனில் காட்டப்பட்டுள்ளது.
வீடியோவின் இறுதியில் பிளேம்ஸ் ஆப் வார்: ஃபைட்டிங் ஹாஸ் ஜஸ்ட் பிகன் என்ற தலைப்பு வருவதுடன் விரைவில்… என்றும் வருகிறது
இந்த வீடியோவை தீவிரவாதிகள் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.