பாலிவுட் நடிகை சன்னிலியோன், நடித்து சமீபத்தில் ரிலீஸான ராகினி எம்.எம்.எஸ், வெற்றிப்படத்தை அடுத்து தற்போது ‘Mastizaade’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெளியான இரண்டே மணி நேரத்தில் இந்த வீடியோவை 79000 பேர் பார்த்து சாதனை புரிந்துள்ளனர்.
இதற்கு காரணம் சன்னிலியோன் இந்த டீஸரில் பேசும் இரட்டை அர்த்தமுள்ள ஆபாச வசனம்தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்த டீஸரில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து நடந்து வரும் சன்னிலியோன், இரண்டு உரித்த வாழைப்பழங்களை கையில் வைத்துக்கொண்டு “Sambhal ke Rakhiye apne kele, kyunki aa rahe hai Laila Lele.” என்ற வசனம் பேசுகிறார். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
உங்கள் வாழைப்பழங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் லைலா லேலே வருகிறாள்” என்று அர்த்தமாம்.
பாலிவுட் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்ற இந்த டீஸர், ஒருசில அமைப்புகளால் கடும் கண்டனத்தையும் பெற்றுள்ளது.
மும்பையில் உள்ள பெண்கள் அமைப்பு ஒன்று இந்த வசனங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும், இந்த டீஸரை தடைசெய்ய வேண்டும் என்றும் மும்பை தெருக்களில் கண்டன போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் மும்பை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.