ilakkiyainfo

உணவு மூலம் கொரோனா தொற்று பரவுமா?

உணவு மூலம் கொரோனா தொற்று பரவுமா?
April 16
15:06 2020

Coronavirus : சுமார் மூன்று நிமிடங்கள் பொருத்தமான வெப்பநிலையில், உணவை சமைக்கவும். இதில் வைரஸ் உயிர்வாழ வாய்ப்பில்லை.

Covid – 19: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, கைகளை சுத்தமாக கழுவும்படி உலகம் முழுவதும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உணவு பற்றி? இந்த விஷயத்தில் ஆய்வுகள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என்றாலும், தொற்று நோய்க்கான ஆதாரமாக உணவு குறைந்த ஆபத்து கொண்டதாக இருக்கலாம். யாரோ இருமும்போது, தும்மும்போது அல்லது அசுத்தமான கையால் ஒருவரின் முகத்தைத் தொடும்போது இந்த வைரஸ் நீர்த்துளிகள் மூலமாக பரவுகிறது.

2022 வரை சமூக விலகல் அவசியம்; எச்சரிக்கை செய்யும் ஆராய்ச்சியாளர்கள்

உணவின் மேற்பரப்பில் வைரஸ் உள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. குறிப்பாக பலர் அடிக்கடி வந்து சென்ற இடத்திலிருந்து கொண்டு வரும் உணவில், வைரஸ் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எவ்வாறாயினும், உணவிலிருந்து வைரஸ் பரவுவதற்கான சாத்தியமற்ற ஆதாரமாக விளங்குவது என்னவென்றால், உணவின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலர் முன் கூட்டியே எடுத்துக் கொள்கிறார்கள்.

அதாவது கைகளை கழுவுதல் மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை முன்னெப்போதையும் விட தீவிரமாக பின்பற்றுகிறார்கள். தவிர, உணவை நன்றாக சமைக்கும்போது, அது வைரஸை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு வெப்பநிலையை அடைகிறது.

வைரஸ்கள் உணவில் வளர முடியாது. இருப்பினும் அவை சிறிது காலம் உயிர்வாழ முடியும். தவிர, அதை விழுங்கினாலும், இது போன்ற ஒரு வைரஸ் வயிற்றின், அமில சூழலில் உயிர்வாழ வாய்ப்பில்லை என்று சில வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த பாங்ரா நடனம் ஆடிய பாகிஸ்தான் டாக்டர்கள்; வைரல் வீடியோ

தொற்றுநோயானாலும் இல்லையென்றாலும், உணவுடன் அடிப்படை சுகாதாரத்தைப் பின்பற்றுவது அவசியமாக இருக்கிறது.

* எப்போதும் ஃப்ரெஷ்ஷான பழங்கள், மற்றும் காய்கறிகளை கழுவி சாப்பிட வேண்டும்

* உணவுப் பாக்கெட்டுகளை கையாண்ட பிறகு கைகளைக் கழுவுங்கள்

* சுமார் மூன்று நிமிடங்கள் பொருத்தமான வெப்பநிலையில், உணவை சமைக்கவும். இதில் வைரஸ் உயிர்வாழ வாய்ப்பில்லை.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com