இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை – இறக்ககண்டி பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இறக்க கண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த அபூபக்கர் சம்சுதீன் ( 50 வயது) எனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர், அவரது மனைவியான இஸ்மாயில் பரீனா (45 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய, நூர் லெப்பை பாரூக் ( 65வயது) என்ற யாசகர்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் திருகோணமலைக்கு யாசகம் கேட்டு வருவதாகவும், அவருக்கு இரண்டு மாதங்களாக உணவு வழங்கி வந்ததாகவும் நேற்றிரவு குறித்த யாசகர் வீட்டுக்கு வந்து கணவனையும், மனைவியையும் கோடரியால் தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.