விமல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, இனியா தம்பி ராமையா சூரி நடிக்கும் படம் ‘புலி வால்’. கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘சாப்பா குரிச்சி’ படத்தின் ரீமேக்தான் இது. அந்தப் படத்தின் மையகருவை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார்களாம். பணக்கார இளைஞனுக்கும், ஏழை இளைஞனுக்குமான ஈகோதான் கதையாம். பணக்கார இளைஞனாக பிரசன்னாவும். ஏழை இளைஞனாக விமலும் நடித்திருக்கிறார்கள்.
காமெடிக்கும். சென்டிமென்டுக்கும் முக்கியத்துவம் இருக்குமாம். ஒரிஜினல் மலையாள படத்தில் ரம்யா நம்பீசன் மிக அழுத்தமான உதட்டு முத்தம் ஒன்றை ஹீரோ பஹத் பாசிலுக்கு கொடுத்து அசத்தியிருப்பார். அந்த முத்தம் படம் வெளியானபோது கேரளாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோன்று ஒரு காட்சி புலிவால்’ படத்திற்காக சமீபத்தில் எடுக்கப்பட்டது.
முத்தக்காட்சியை படமாக்கும்போது பிரசன்னா மிகவும் தயங்கி தயங்கி வெட்கப்பட்டதாகவும், அவருக்கு ஓவியா தைரியம் கொடுத்து நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் படமாக்கப்படும்போது ஹீரோதான் ஹீரோயினுக்கு தைரியம் கொடுப்பார். ஓவியாவின் தைரியத்தை பார்த்து படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த முத்தக்காட்சியில் நடிக்கும்போது பிரசன்னா பதட்டமாக இருந்ததால் 12 டேக் வரை எடுக்கப்பட்டு பின்னர்தான் ஓகே செய்யப்பட்டது. முத்தக்காட்சி முடிந்ததும் ஆளைவிட்டால் போதும் என்று உடனடியாக படப்பிடிப்பு தளத்தை விட்டு சென்றுவிட்டார் பிரசன்னா.