ilakkiyainfo

உதயமானது அகில இந்திய ஓவியா பேரவை… ஆயிரம் பேருக்கு அன்னதான திட்டம்!

உதயமானது அகில இந்திய ஓவியா பேரவை… ஆயிரம் பேருக்கு அன்னதான திட்டம்!
July 30
03:59 2017

பிக் பாஸ் பார்க்கும் அத்தனைபேருக்கும் விடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது ஓவியா ஃபீவர். ஓவியாவுக்கு பாட்டு எழுதுவது.

‘Save Oviya’ என்று அணிதிரள்வது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான ஓவியா கொண்டாட்டம்.  ஓவியா பாசத்தின் உச்சகட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் தமிழரசன் என்பவர் ‘அகில இந்திய ஓவியா பேரவை’ என்ற பெயரில் ஓவியாவுக்கு பேரவை ஆரம்பித்து அதகளப்படுத்தியுள்ளார். (அதானே… யாரும் இன்னும் கிளம்பலையேன்னு பாத்தோம்!)

IMG-20170729-WA0005_(1)_09303

ஃப்ளக்ஸ் அடித்து…   பேரவை ஆரம்பித்தது மட்டுமல்லாமல்  தர்மபுரியில் ஓவியாவுக்கு ஓட்டுகேட்டு பிரசாரமெல்லாம் செய்திருக்கிறது தமிழரசன் குரூப். ஓவியா பேரவையின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனையில் இருந்த (என்னப்பா நடக்குது இந்த  நாட்டுல)  தமிழரசனிடம் பேசினோம்…

யாரு பாஸ் நீங்க?

ஓவியாவுக்கு இருக்கும் கோடான கோடி ரசிகர்கள்ல நானும் ஒருவன். தர்மபுரிதான் என் சொந்த ஊர். பில்டிங் கான்ட்ராக்ட் பிசினஸ் பண்றேன்.

ஆரம்பத்துல சும்மாதான் பிக் பாஸ் பார்க்க ஆரம்பிச்சேன். அது ஒரு ‘கேம் ஷோனு’ எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும், என்னை ஓவியா ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாங்க.

அவங்களுக்காக தினமும் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருந்தா எப்டியெல்லாம் குறும்புத்தனம் பண்ணுமோ அப்டிதான் ஓவியா பண்றாங்க.

அவுங்க ஸ்கிரீன்ல வர்ற ஒவ்வொரு நிமிஷமும் மனசுக்குள்ள மழை ஊத்துது. தமிழ்நாட்டுல பிக் பாஸ் பார்க்கும் ஒவ்வொரு குடும்பமும் ஓவியாவை தன் பொண்ணா பாக்குறாங்க.

அந்த வீட்ல எல்லாரும் பணத்துக்காக நடிக்கும்போது ஓவியா மட்டும் ஒரிஜினல் ஓவியாவாவே இருக்காங்க.

அவங்களை பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியேத்தறத்துக்கு அந்த வீட்ல உள்ள மத்த எல்லாரும் சேர்ந்து திட்டம்  போட்டாங்க. ஓவியாவை எப்படியாவது காப்பத்தணும்னுதான் இந்த  பேரவையை ஆரம்பிச்சோம்.

புரியலையே…!

போன வாரம்கூட பாத்திருப்பீங்க. கீழ விழுந்து ஜுலிக்கு அடிபட்ருச்சில்ல. அப்ப ஜூலிக்கு உண்மையாவே ஹெல்ப் பண்ணது ஓவியாதான்.

கூட பொறந்தவங்க கூட அப்படி அட்வைஸ் பண்ண மாட்டாங்க. அந்த அளவுக்கு  ஜூலிக்கு சப்போர்ட் பண்ணாங்க ஓவியா.

ஆனால், அந்த ஜூலி…  பொய்  சொல்லி எப்படியாவது ஓவியாவைப் பழி வாங்கப் பாத்துச்சி. ஜூலி மட்டுமில்லை. அங்கிருக்கும் பலர் ஓவியாவை நாமினேட் பண்ணி வெளியேத்த பாத்தாங்க. அது அந்த வீட்ல உள்ளவங்க கையில மட்டும் இல்லையே.

மக்களும் ஓட்டுப் போடணும்ல’ அதான் எப்டியாவது ஓவியாவைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணினோம். எங்க பேரவையில இருக்கிற  அம்பது அறுபது இளைஞர்களை திரட்டிகிட்டு மூணு கார்ல ஓட்டு கேக்க கிளம்பினேன். (எல்லாம் ஓவியாவுக்கே வெளிச்சம்!)

ஓட் ஃபார் ஓவியானு போஸ்ட்டரும், விளம்பரத்தட்டிகளும் அடிச்சிகிட்டு தர்மபுரியில் வீடுவீடா போய், ஓவியாவுக்கு ஓட்டுப்போடுங்கன்னு சொன்னோம்.

பலபேர் சிரிச்சாங்க. அதையெல்லாம் நாங்க கண்டுக்கலை. ஓவியாவைக் காப்பாத்தணும்ங்கிற குறிக்கோள்ல நாங்க குறியா இருந்தோம்.

கிட்டதட்ட  மூணு லட்சம் ஓட்டுகள் ஓவியாவுக்காக வாங்கி கொடுத்திருக்கோம் (நல்லா வருவீங்க). குஷ்புக்கு கோயில் கட்றவங்க. நயன்தாராவுக்கு சிலை வைக்கிறவங்களை மாதிரி எங்களை மொக்கையா நெனைச்சிடாதீங்க. நாங்க ஓவியாவின் உன்னத ரசிகர்கள்( ஆ..ஹான்!)

IMG-20170729-WA0006_(1)_09386

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா?

ரஜினிக்கும், கமலுக்கும்  கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்களே… அவங்க கட்டவுட் அடிக்கிறது பாலாபிஷேகம் செய்யுறதுனு ஏதேதோ பண்றாங்களே.

இதெல்லாம் எதிர்பார்த்து பண்றதில்லை. அதுல  ஏதோ ஒரு சந்தோஷம் கிடைக்குது. ரஜினியும் கமலும் சினிமாவுக்காக நடிக்கிறாங்க. ஆனால்,  ஓவியா அப்படி இல்லை.  இதுக்கு முன்னாடி அவங்க நடிச்ச படத்தையெல்லாம் பார்த்திருக்கேன்.

அப்போதெல்லாம் அவங்க மேல பெருசா ஈர்ப்பு இல்லை. ஒரு நடிகைனு கடந்து போயிருவேன். பிக் பாஸ்ல ஓவியாவின் ரியல்  கேரக்டர் என்னை ஈர்த்துடுச்சி.

ரஜினிகிட்டையும், கமல்கிட்டையும் ஆட்டோகிராஃப் வாங்க காத்துக்கிடக்கும் கோடாடன கோடி ரசிகர்களைப் போல நான் ஓவியா மேடத்துக்காக காத்திருக்கிறேன்.

ஓவியா மேடம்  பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்ததும் அவங்களை சந்திக்கிறதுக்கான முயற்சிகள் செஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களுக்கான முதல் வரவேற்பு தர்மபுரியில் இருந்துதான்.

‘பிக் பாஸ் கலாசா சீரழிவுனு’ சொல்றாங்க. நீங்க பேரவை ஆரம்பிச்சிருக்கீங்க. வீட்ல எதுவும் சொல்லலையா? 

இதைவிட எவ்வளவோ  பெரிய சீரழிவுகளெல்லாம் இந்த நாட்டுல இருக்கு. அதையெல்லாம்  தடுத்துட முடியுமா? பிக் பாஸ் பெரிய சீரழிவுன்னு சொல்ல முடியாது.

அவங்களுக்கு பிடிக்கலைன்னா பார்க்காமல் இருக்கட்டும். எங்களுக்கு பிடிச்சிருக்கு நாங்க பாக்குறோம்.     இதுவரைக்கும் 40  ஆயிரம் செலவு பண்ணியிருக்கேன்.

ஓவியா பேரவைக்குனு புது ஆஃபீஸ் திறந்திருக்கேன்.  என் மனைவியும் சரி… என் வீட்ல உள்ளவங்களும் சரி…  எதுவும் சொல்லல. அவுங்களுக்கும் இதுல சந்தோஷம்தான்  ‘ஓவியா பேரவையை இன்னும் அஃபிஷியலா ரிஜிஸ்டர் பண்ணலை’ அதுக்கு ஓவியா மேடம்கிட்ட அனுமதிவாங்கணும்.

 அவங்க  கையெழுத்துப் போடணும்.  அவங்க வெளியில வந்த பிறகுதான் அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்.  இப்போதைக்கு, எங்க பேரவையில் இருக்கிற பசங்களெல்லாம் சேர்ந்து ஆயிரம் அநாதை குழந்தைங்களுக்கு ஓவியா  பேரைச் சொல்லி அன்னதானம் போடலாம்னு பேசிகிட்டு இருக்கோம். அன்னதானத்துக்கான முயற்சிகள்ல இறங்கணும்.

IMG-20170729-WA0008_09376

அந்த ஆஃபீஸ்ல அப்டி என்னதான் பண்ணுவீங்க?

எங்க பேரவையில 60-70 பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலை பாக்குறாங்க. ஃப்ரீ டைம்ல மட்டும் அந்த ஆஃபிஸ்ல ஒண்ணு கூடுவோம்.

அங்க பிக் பாஸை பத்தி மட்டும்தான் பேசிக்கிட்டு இருப்போம். எங்க எல்லாருக்கும் பிடிக்காத ஒரே ஆள் ஜூலிதான். அந்தப் பொண்ணு ஓவரா நடிக்குது.

அதோட இமேஜை அந்தப் பொண்ணே கெடுத்துக்குது. ஓவியாவை யார் யாரெல்லாம் கார்னர் பண்றாங்கனு உட்கார்ந்து பேசுவோம். மத்தபடி அந்த ஆபிஸ்ல வேற எதுவும் செய்யுறது இல்லை.

ஒருவேளை பிக்பாஸ் வீட்டில்  இருந்து  வெளியில் வந்த பிறகு ஓவியாவை உங்களால் சந்திக்க முடியவில்லையென்றால்?

அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது. ஓவியா மேடத்தோட கேரக்டர் அது இல்லை. அதான் தினமும் பாக்குறோமே! அவங்க யார் மனசையும் புண்படுத்த மாட்டாங்க. அப்புறம் எப்படி எங்க மனசை?

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com