ilakkiyainfo

உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் (வீடியோ)

உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் (வீடியோ)
March 11
21:53 2014

(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)

ukraine coat of armsசூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அது யாருடைய சின்னம் என்பது தெரியுமா?

1941 ம் ஆண்டு, உக்ரைனில் யூதர்களை இனவழிப்புச் செய்த, “உக்ரைன் தேசியவாத இயக்கம்” (OUN) என்ற உக்ரைனிய நாஸிகளின் சின்னம்!

இன்றைய ஜெர்மனி, ஹிட்லரின் ஸ்வாஸ்திகா சின்னத்தை, தனது தேசிய சின்னமாக்கிக் கொண்டால், அது உலகில் எத்தகைய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும்? சோவியத் ஒன்றியத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த உக்ரைனில், பழைய நாஸி சின்னம், இன்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. உலகில் யாரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை.

untitled-1ஒரு யூதப் பெண்ணை வீதியில் போட்டு அடிக்கும் உக்ரைன் இனவெறியர்கள்

இன்றைய உக்ரைனிய ஆட்சியாளர்களை, மேற்கத்திய நாடுகள் மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றன. 1941 ம் ஆண்டு, ஐயாயிரம் யூதர்களை இனப் படுகொலை செய்த, அதே உக்ரைன் தேசியவாத இயக்கம், இன்று ஆட்சி அமைத்துள்ளது.

ஜனநாயக பண்பு நிறைந்த மேற்கத்திய கனவான்கள், அந்த அரசைத் தான், “சட்ட பூர்வமான உக்ரைனிய அரசு” என்று அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

இது ஒன்றும் புதுமை அல்ல. 2 ம் உலகப்போரின் முடிவில், உக்ரைன் மீண்டும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாகியது. உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றனர்.

untitled-2உக்ரைன் நாஸி தலைவருடன் கை குலுக்கும் ஜோர்ஜ் புஷ்

OUN தலைவர்களில் ஒருவரான Yaroslav Stetsko, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை சந்தித்து இருந்தார். அப்போது பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சோவியத் யூனியனுக்குள் நுழைந்து, உளவுத் தகவல்கள் திரட்டுவதற்கும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும், உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தார்கள்.

அந்தப் பழைய நட்பு, இப்போதும் தொடர்கின்றது. ஒரு பக்கம், யூதர்களை இனப் படுகொலை செய்தவர்களுடன் கை குலுக்கிக் கொண்டே, மறு பக்கம் இஸ்ரேலுக்கு உதவுவது, அமெரிக்கர்களுக்கு ஒரு முரண்பாடாகத் தெரியவில்லை. அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு கிடையாது.

untitled-3வீதியில் ஒரு யூதப் பெண்ணை ஓட ஓட அடிக்கும் ஒரு பாசிஸ்ட் சிறுவன்

உக்ரைனில் யூத இனவழிப்பு, 1941 ம் ஆண்டு லிவிவ் (Lviv) நகரில் ஆரம்பமாகியது. லிவிவ் அல்லது லிவோவ் என்று அழைக்கப் படும் நகரம், மேற்கு உக்ரைனில் உள்ளது.

போலந்து மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உருவானது. இன்றைக்கும் அதுவே உக்ரைனிய தேசியவாதத்தின் பிறப்பிடமாக கருதப் படுகின்றது. (உக்ரைனிய மொழி, ரஷ்ய மொழிக்கும், போலிஷ் மொழிக்கும் இடைப்பட்ட மொழி ஆகும்.)

அண்மையில், உக்ரைனிய தலைநகர் கீவில் நடந்த, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்களில் பெரும்பான்மையானோர், லிவிவ் நகரில் இருந்து சென்றவர்கள் தான். கடந்த எழுபதாண்டு காலமாக, லிவிவ் மாநிலம், உக்ரைனிய தேசியவாதத்தின் கோட்டையாக இருந்து வந்துள்ளது.

“ஒப்பெறேஷன் பார்பரோசா” என்ற பெயரில், ஜேர்மனிய நாஸிப் படைகள், சோவியத் உக்ரைன் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தின. ஜெர்மனியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சோவியத் இராணுவம் பின்வாங்கிச் சென்றது. 1941, ஜூலை மாதம், முதலாம் தேதி, உக்ரைனின் லிவிவ் மாநிலம் ஜெர்மனியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டது.

untitled-4வீதிகளை கைகளால் சுத்தம் செய்யும் யூதர்கள். உக்ரைனிய இனவெறிக் கும்பல் சுற்றி வர நின்று வேடிக்கை பார்க்கின்றது.

லிவிவ் நகரில், NKVD (கேஜிபி யின் முன்னோடி) பல சிறைச்சாலைகளை நிர்வகித்து வந்தது. ஜெர்மன் படைகள் வருவதற்கு முதல் நாள், சிறையில் இருந்த கைதிகள் அவசர அவசரமாக சுட்டுக் கொல்லப் பட்டனர்.

அநேகமாக, அந்தக் கைதிகளில் பல தேசியவாதிகள் இருந்திருக்கலாம். ஜெர்மன் ஆக்கிரமிப்பின் பின்னர், வெளியே தலை காட்டிய உக்ரைனிய தேசியவாதிகளின் முதலாவது நடவடிக்கை, யூதர்களுக்கு எதிரானது தான்.

சிறையில் கொல்லப்பட்ட கைதிகளின் சடலங்களை அப்புறப் படுத்தவும், துப்பரவு செய்யவும், யூதர்களை பிடித்து பலவந்தமாக வேலை வாங்கினார்கள்.

untitled-5பாசிஸ்டுகள் உடைத்து வீழ்த்திய லெனின் சிலையை முத்தமிடுமாறு ஒரு யூதனை வற்புறுத்துகிறார்கள்.

ரஷ்ய சாம்ராஜ்யத்தில், சார் மன்னன் காலத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனமான யூதர்கள், போல்ஷெவிக் புரட்சியின் பின்னர் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தனர்.

அதனால், தேசியவாதிகளினால், யூதர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று பொதுமைப் படுத்திப் பேசப் பட்டனர். அது உண்மையா, பொய்யா என்பதை விட, யூதர்கள் மீதான இனத் துவேஷத்தின் இன்னொரு வடிவமாக அது இருந்தது. அதனால், பாசிஸ்டுகளால் உடைக்கப் பட்ட லெனின் சிலைகளை முத்தமிடுமாறு, யூதர்களை துன்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

untitled-6நடுத் தெருவில் ஆடை களைந்து அவமானப் படுத்தப் படும் யூதப் பெண்

உக்ரைனில், யூத இனவழிப்பு ஒரு கேளிக்கை நிகழ்வு போன்று தொடங்கியது. பொது இடங்களில் ஒன்று கூடிய கும்பல்கள், பல்வேறு வழிகளில் யூதர்களை துன்புறுத்தின.

தெருவில் யூதர்கள் ஓட ஓட கல்லால் அடித்து விரட்டினார்கள். தெருக்களில் முழங்காலால் நடந்து போகுமாறு கட்டளையிட்டார்கள். ஆண்கள், பெண்கள் பேதம் பாராது, பட்டப் பகலில், நடுத் தெருவில் உடைகளை களைந்து அம்மணமாக்கி அவமானப் படுத்தினார்கள்.

கேளிக்கை முடிந்த பின்னர் அடித்து, சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். அன்றைய இனப் படுகொலையில் பலியான அப்பாவிகள் செய்த ஒரேயொரு குற்றம், யூதர்களாகப் பிறந்தது தான்.

ukraine pogrom5கும்பல் வன்முறைக்கு பாதிக்கப்பட்ட ஒரு தாயும் மகளும்

காலங்காலமாக தங்கள் அயலில் வாழ்ந்த யூதர்களை, உக்ரைனிய காடையர்கள் துன்புறுத்தி, சித்திரவதை செய்து கொன்றார்கள். இன்றைய உக்ரைனை ஆளும், அதே “உக்ரைன் தேசியவாத இயக்கம்” (OUN), அன்று உக்ரைனிய மக்களுக்கு இனவெறியூட்டி, யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது.

அன்று இந்த சம்பவங்களை எல்லாம், ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். உக்ரைனில் அன்று நடந்த யூத இனப் படுகொலையில், குறைந்தது ஐயாயிரம் உக்ரைன் யூதர்கள், உக்ரைனிய இனவெறியர்களினால் கொல்லப் பட்டனர்.

untitled-8தெருவில் முழங்காலால் நடந்து செல்ல வற்புறுத்தப் பட்ட யூதப் பெண்

அன்று உக்ரைனில் நடந்த யூத இனப் படுகொலையை, இன்றைய உலகம் மறந்து விட்டது. அதனால் வரலாறு திரும்புகின்றது. உக்ரைன் நாட்டில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக, அங்கு வாழும் யூதர்கள் அச்சத்தில் உள்ளனர். கீவ் நகர யூத தலைமை மதகுரு, யூதர்களை லிவிவ் நகரை விட்டு, முடிந்தால் உக்ரைனை விட்டு வெளியேறுவது நல்லது என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்த தகவல் எந்த ஊடகத்திலும் வந்திருக்காது. இன்று வரைக்கும், உக்ரைன் ஆட்சியாளர்களை, “நாஸிகள்/பாசிஸ்டுகள்” என்று குறிப்பிட மறுக்கும் ஊடகங்களிடம் இருந்து, நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இன்றைய உக்ரைன் பிரச்சினையில், மேற்கத்திய ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை மிகவும் கேவலமானது. இப்படித் தானே, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நேரமும் நடந்து கொண்டிருந்திருப்பார்கள்?

untitled-9ஒரு உக்ரைனிய வன்முறைக் கும்பல், அப்பாவி யூதர்களை தெருவில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலில் பங்கு பற்றிய ஒருவரின் அடையாள அட்டை வலது புறம் உள்ளது. அதில் “உக்ரைனிய துணைப் படை உறுப்பினர்” என்று ஜெர்மன், உக்ரைனிய மொழிகளில் எழுதப் பட்டிருப்பதை வாசிக்கலாம்

இன்றைக்கும், உக்ரைன் பேரினவாதிகளின் பாசிச அரசாங்கத்தை ஆதரிக்கும் வகையில், தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

உக்ரைனில், யூதர்களையும், போலிஷ் மக்களையும் இனப்படுகொலை செய்த உக்ரைனிய பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது, தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாதிகளை ஆதரிப்பதற்கு சமமானது. ஆனாலும், தமிழ் தீவிர வலதுசாரிகள், மிகவும் துணிச்சலுடன் உக்ரைனிய நாஸி இனப் படுகொலையாளர்களை ஆதரித்து வருகின்றனர்.

பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு சரியான தகவல்கள் போய்ச் சேராத படியால், “தங்களது பிரச்சாரங்களை மட்டுமே தமிழ் மக்கள் நம்புவார்கள்” என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

இன்றைக்கு பலர், “தாங்கள் உக்ரைன் அரசை ஆதரிக்கவில்லை(?)” என்று சொல்லிக் கொண்டே, பாஸிசத்தின் மீள் வருகையை புறக்கணித்து வருகின்றனர். ஹிட்லர் காலத்திலும் அது தான் நடந்தது. அன்று, மேற்கத்திய அரசாங்கங்களும், ஊடகங்களும் ஹிட்லர் மீது நம்பிக்கை வைத்து புகழ்ந்து கொண்டிருந்தன.

சிவபெருமானை எண்ணி தவம் செய்து வரம் கேட்டுப் பெற்ற பஸ்மாசுரன், சிவன் தலை மீதே கை வைக்க முயன்ற போது தான், சிவபெருமானுக்கு தான் செய்த தவறென்ன என்று புரிந்ததாம்.

இன்று, உக்ரைன் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி வருபவர்களின், எதிர்காலமும் அது தான். பஸ்மாசுரனுக்கு பயந்து சிவபெருமான் தலை தெறிக்க ஓடியது போன்று, இவர்களும் நாஸிகளுக்கு பயந்து ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

-கலையரசன்-

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. thamilini
    thamilini March 15, 12:20

    thamilarkalukkum ippadyyana

    kodumaikal nadanthathu thane

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com