ilakkiyainfo

உலகின் 36 ஆவது பெரும் கோடீஸ்வரரைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு: ஐவர் கைது

உலகின் 36 ஆவது பெரும் கோடீஸ்வரரைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு: ஐவர் கைது
June 16
05:52 2020

சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான  Midea நிறுவன ஹீ ஸியாங்ஜியானை கடத்துவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்ப்படடுள்ளனர் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

77 வயதான ஹீ ஸியாங்ஜியான், உலகின் மிகப் பெரிய வீட்டுச்சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Midea நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் ஆவார்.

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் போஷான் நகரிலுள்ள ஹீ ஸியாங்ஜியானின் வீட்டுக்குள் நேற்று ஆயுதபாணி குழுவொன்று புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

எனினும், அவரின் மகன் வீட்டிலிருந்து தப்பி அருகிலுள்ள ஆற்றை நீந்திக் கடந்து சென்று உதவி கோரினார் என ரி.எம்.ரி. போஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதையடுத்து பொலிஸார் அங்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவரும் காயமடையவில்லை.

ஹீ ஸியாங்ஜியானின் சொத்து மதிப்பு 2480 கோடி அமெரிக்க டொலர் என மதிப்ப்pடப்பட்டுள்ளது. போர்ப்ஸ் சஞ்சிகையின் கணிப்பின்படி அவர் சீனாவின் 6 ஆவது மிகப் பெரிய செலவந்தரும் உலகின் 36 ஆவது மிகப் பெரிய செல்வந்தரும் ஆவார்.

ஹீ ஸியாங்ஜியானின் ன் மகன் ஹீ ஜியான்பெங் (55) நிறுவனத்தில் பணிப்பாளர்களில் ஒருவராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com