ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 349906 (ஆசனங்கள்-19 )
ஊவா மாகாண சபை ஆளுங்கட்சி வசம்
தேர்தல்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் பிரகாரம்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 349,906 வாக்குகள் 51.25 சதவீதம் (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 19 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி – 274,773 வாக்குகள் 40.24 சதவீதம் ( 13 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி 36,580 வாக்குகள 5.36 சதவீதம் ( 2ஆசனங்கள்)
2009 ஆம் ஆண்டு இறுதி முடிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 418,906 72.39 (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 25 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி – 129,144 வாக்குகள் சதவீதம் 22.32 சதவீதம் ( 7 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகள 2.53 சதவீதம் ( 1ஆசனம்)
மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகள 1.59 சதவீதம் ( 1ஆசனம்)
ஆளுங்கட்சி இழந்த 6 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐ.தே.க
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைவாகக் கிடைத்துள்ளன. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு 1 இலட்சத்து 45 ஆயிரத்து 629 வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த 2009ஆம் ஆண்டை விட 21 ஆயிரத்து 941 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது.
இம்முறையும் ஊவா மாகாண சபையை ஐ.ம.சு.மு கைப்பற்றியுள்ள போதிலும், 6 ஆசனங்களை இழந்துள்ளது. இதேவேளை, ஐ.தே.க.வுக்கு 6 ஆசனங்கள் மேலதிகமாகக் கிடைத்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியும் ஓர் ஆசனத்தை மேலதிகமாகப் பெற்றுள்ள அதேவேளை, கடந்த முறை ஓர் ஆசனத்தைப் பெற்றிருந்த மலையக மக்கள் முன்னணி, இம்முறை அந்த ஆசனத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.