எகிப்து தேவாலயத்தில் இடம்பெற்ற கொடூரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு : ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை! (காணொளி இணைப்பு)
எகிப்து தலைநகர் கெய்ரோவின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில், நேற்று (09) குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்திருந்துது.
இதில் நேற்றைய தகவலின்படி 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் குறித்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 47 ஆக உயர்ந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த குண்டுவெடிப்பில் தேவாலாயத்தின் உட்பகுதியிலிருந்த 27 பேரும், தேவாலயத்தின் வெளிப்பகுதியிலிருந்த 16 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தேவாலயத்தில் நடத்தப்பட்டுள்ள குறித்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளதுடன், மேலும் தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Shocking footage shows the aftermath of the Bombing at the Coptic church at Cairo
There are no comments at the moment, do you want to add one?
Write a comment