ilakkiyainfo

எங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது… நித்தி யாரையும் விட்டு வைக்க மாட்டார்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

எங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது… நித்தி யாரையும் விட்டு வைக்க மாட்டார்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
January 11
00:31 2020

நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் அதிர்ச்சிகரமான தகவல்.

அந்த வகையில் நித்தியின் மீது கொலைவழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் பார்வையில் இருக்கிறது. அந்த வரிசையில், “என்னுடைய உயிருக்கு ஆபத்து’ என ஒரு புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

245_1

அந்த வீடியோவில் பேசியிருப்பவர் மா நித்திய தத்வ பிரியானந்தா என்கிற பெண். “என் பெண்களை நித்தி கடத்திவிட்டார்’ என குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ள ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்தான் இவர்.

“நித்தியானந்தம்… என் பேர் மா நித்திய தத்வ பிரியானந்தா. நிறைய பேர் வந்து எனக்கு என்ன, ஏ அழற, என்ன ஆச்சு… அப்படின்னு சொல்லிட்டு தமிழ்ல மெசேஜ் போட்டு இருந்தீங்க… (இடையில் வீடியோவில் அழுகிறார்) நா இப்ப என்ன சிச்சுவேஷன்ல மாட்டிண்டுருக்கேன் என்னென்ன நடந்துண்டுருக்கு அப்படிங்கறது உங்களுக்கு சொல்றதுக்காக வந்தேன்.

246_3ஒண்ணே ஒண்ணு சொல்லணும் பர்ஸ்ட்… (அழுகிறார் வீடியோ கட்டாகிறது… திரும்ப பேசுகிறார்) லிட்ரலாவே லைஃப் திரட்டனிங்கான ஒரு சிட்சுவேஷன்ல இருக்கோம்.

அப்படின்னா (மேலே வெறித்துப் பார்க்கிறார்) எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்றது தெரியாது? அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக்கோம்”. (இதையே ஆங்கிலத்தில் மீண்டும் பேசுகிறார்).

I will tell simultaneously in English also. I am struck in a life threatening situation. I don’t know whether I am going to be alive to make the next video…

(தொடர்ந்து தமிழில் பேசுகிறார்…)

எனக்கு கண்டிப்பாகத் தெரியாது அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு… எனக்கு அந்தளவுக்கு பயமா இருக்கு…” இவர் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிடவில்லை.

வேறொரு நண்பருக்கு அனுப்பி இந்த வீடியோவை வெளியிட வைத்திருக்கிறார். வீடியோவின் துவக்கத்தில் வழக்கமாக சொல்வது போல் “நித்தியானந்தம்’ என சொல்லி ஆரம்பிக்கிறார்.

இவர் பேசிய வீடியோ நித்திக்கு தொடர்பேயில்லாத பலரது பக்கங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

31_15

இந்த வீடியோவை பார்த்து அந்த பெண்ணின் அப்பாவான ஜனார்த்தன சர்மா கதறிவிட்டார். அவர் நித்திக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த பலருக்கு இந்த வீடியோவை அனுப்பி அவர்களது கருத்துகளை கேட்டார்.

ஏற்கனவே சங்கீதா என்கிற பெண்ணை பிடதி ஆசிரமத்திலேயே கொலை செய்து அவரது மரணம் இயற்கையான மரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையும் பெற்றவர் நித்தி.

32_17

சங்கீதாவின் தாயார் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு வாங்கி பிரேத பரிசோதனை செய்யும் போது, சங்கீதாவின் மூளை இருந்த இடத்திலும்; இதயம், நுரையீரல் இருந்த இடத்திலும் கந்தை துணிகள் இருந்ததை பார்த்த சங்கீதாவின் தாயார் மயக்கமடைந்து விட்டார்.

அது நடந்தது பெங்களூரில். இன்று நித்தி இருப்பது வெளிநாட்டில். இந்திய சட்டம் என்னை ஒன்றும் செய்யாது’ என சவால் விடும் நித்தி மா நித்திய தத்துவ பிரியானந்தாவையும் அவரது சகோதரியையும் அவர்களை நித்தி கடத்திக் கொண்டு போய்விட்டார் என வழக்கு போட்டார் என்பதற்காக கொலை செய்தால் என்ன ஆவது? எதற்காக இந்த வீடியோ இப்பொழுது வருகிறது.

இது புதிய வீடியோவா? பழைய வீடியோவா? என கேட்டு வருத்தத்துடன் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றி ஜனார்த்தன சர்மாவின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டோம். சோகமாக இருக்கும் அவர் நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.

ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் அடிக்கடி வீடியோக்களில் பேசக் கூடியவர்கள். ஜனார்த்தன சர்மா “எனது மகள்களை நித்தி கடத்தி விட்டார்’ என புகார் கொடுத்தபோது…

“எனது தந்தையின் புகார் அடிப்படை ஆதாரமற்ற புகார். எங்களை கடத்தி புஷ்பக் நகர் என்ற இடத்தில் இரண்டு வாரம் அடைத்து வைத்தார் நித்தி என புகார் தரப்பட்டது. புஷ்பக் நகரில் உள்ள வீட் டுக்கு நாங்கள் விடு முறையில் சென்றோம்.

அங்கு எங்களை சந்திக்க வருவதாக சொன்ன ஜனார்த்தன சர்மா வரவில்லை. நாங்கள் அங்கிருந்தவர்களிடம் சகஜமாக பேசிவிட்டு வந்தோம்.

அதன்பிறகு நாங்கள் கடத்தப்பட்டதாக என் தந்தை பொய் புகார் கொடுத்திருக்கிறார்” என வீடியோ பேட்டி ஒன்றில் கூறினார்கள்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com