ilakkiyainfo

`எங்கும் மரண ஓலங்கள்; உயிருடன் மனைவியைப் பார்த்ததும் கதறி அழுதேன்!’ -இந்தோனேஷியக் கணவர் உருக்கம்

`எங்கும் மரண ஓலங்கள்; உயிருடன் மனைவியைப் பார்த்ததும் கதறி அழுதேன்!’ -இந்தோனேஷியக் கணவர் உருக்கம்
October 02
16:09 2018

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவு, நிலநடுக்கம், சுனாமி தாக்கத்திலிருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. பலி எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுலவேசி என்னும் தீவுப்பகுதியை (Sulawesi island) 7.5 என்ற ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது.

சுனாமி அலைகள் 20 அடி உயரத்துக்கு எழும்பி ருத்ர தாண்டவம் ஆடியது. இந்த சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது பலு நகரம்தான். அங்கு வசித்த மக்கள் தற்போது உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து நிற்கின்றனர்.

கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி இன்னும் தொடர்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலர் சாலைகளில் தங்கள் உறவினர்களை தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.

அப்படிதான் பலு நகரத்தைச் சேர்ந்த அஸ்வான் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட தன் மனைவியைத் தேடி கடந்த இரு தினங்களாக தன் மகளின் கைகளைப் பிடித்தவாறே சாலைகளில் சுற்றித் திரிந்தார். 2 நாள்கள் தேடலுக்குப் பின்னர் சாலையோரக் கடையொன்றில் தன் மனைவியை உயிருடன் பார்த்து மகிழ்ச்சியில் கதறி அழுதார்.

சுனாமி அலையில் அடித்துச் செல்லப்பட்டதைக் குறித்து அஸ்னானின் மனைவி தேவி கூறுகையில், “நான் கடற்கரை ரிசார்ட்டில் வேலை பார்க்கிறேன். அன்று (28.09.2018) விழா ஒன்றுக்காகப் பெயர்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

திடீரெனக் கட்டடம் ஆடியது. சிறிது நேரத்தில் ராட்சத அலை என்னை அடித்துச் சென்றது. என்னைச் சுற்றி சுனாமி சுனாமி… என்னும் குரல்களும், கதறல் சத்தங்களும் கேட்டன.

நான் கண்களைத் திறந்து பார்த்தபோது ரிசார்ட்டுக்கு எதிரே இருந்த சாலையில் கிடந்தேன். எதிலோ சிக்கி என் ஆடைகள் கிழிந்திருந்தன. எல்லாத் திசையிலும் மனித ஓலங்கள் மட்டுமே கேட்டன. இருள் வேறு சூழ்ந்திருந்தது.

அன்று இரவு குப்பைத்தொட்டி அருகிலேயே என்னையறியாமல் தூங்கிவிட்டேன். நான் சுனாமியில் உயிர்பிழைத்ததை இந்த நிமிடம்வரை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு இரண்டாவது பிறப்பு என்றே தோன்றுகிறது’ என்றார்.

os9v6lug_indonesia-couple-reunites-afp_625x300_02_October_18_17270

மீதமுள்ள சம்பவத்தை அஸ்வான் விவரித்தார். `என் மனைவியைத் தேடி ரிசார்ட்டுக்குச் சென்றேன். அங்கு யாருக்குமே என் கேள்விக்கு பதில் அளிக்கக்கூட நேரமில்லை. உடல்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மீட்புப் படை மும்முரம் காட்டிக் கொண்டிருந்தது.

அவர்கள்  உடல்களை பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்துக்கொண்டிருந்தனர். என் இதயத்துடிப்பு அதிகரித்தது. என் மனைவி இறந்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன், பிளாஸ்டிக் பைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தேன்.

ரிசார்ட்டுக்கு வெளியே வந்து சாலையோரங்களில் இருந்த உடல்களையும் பார்த்தேன். தலை சுற்றியது. தேடித்தேடி ஒரு கட்டத்தில் என் மனைவி இறந்திருப்பார் என்று எண்ணினேன்.

நான் தனியாக வீடு திரும்பியதும் என் உறவினர்கள் தேவி இறந்துவிட்டார் என்று அழுதுதீர்த்தனர். ஆனாலும் என் நம்பிக்கை குறையவேயில்லை. மறுநாளும் அந்த ரிசார்ட்டைச் சுற்றித் தேடினேன்.

சற்றுத் தொலைவில், ஒரு கடையின் வாசலில் என் மனைவி நிற்பதைப் பார்த்தேன். சந்தோஷத்தில் எனக்குப் பேச்சு வரவில்லை. கண்ணீர் விட்டுக் கதறினேன். என்னைப் போல பலர் தங்கள் உறவுகளைத் தேடி அலைவதைப் பார்த்தேன். அனைவருக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்’ என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com