மும்பை: நான் ஒரு பெண் எனக்கு மார்பகம் உள்ளது, கிளீவேஜும் (cleavage) உள்ளது. உங்களுக்கு அதில் ஏதாவது பிரச்சனையா என்று நடிகை தீபிகா படுகோனே பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றை கேட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. அடுத்தடுத்து 4 வெற்றிப் படங்களை கொடுத்த அவர் நடித்துள்ள ஃபைன்டிங் ஃபேனி என்ற படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தீபிகா பற்றி செய்தி வெளியிட்டது.
தீபிகா நிகழ்ச்சி ஒன்றுக்கு முன்னழகை வழக்கத்திற்கு அதிகமாக காட்டியபடி ஆடை அணிந்து வந்திருந்தார்.
தீபிகாவின் லோ கட் ஆடை போட்டோவை போட்டு பிரபல நாளிதழ் ஒன்று ஓ மை காட் தீபிகா இப்படி கிளீவேஜை காட்டியுள்ளாரே என்று செய்தி வெளியிட்டது.
வழக்கமாக தன்னைப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அமைதியாக இருக்கும் தீபிகா இதை பார்த்து பொங்கி எழுந்துவிட்டார்.
இந்தியாவின் முன்னணி நாளிதழாம். அதில் இது தான் செய்தியா என்று தீபிகா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் ஒரு பெண். எனக்கு மார்பகமும், கிளீவேஜும் உள்ளது. அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று தீபிகா ட்விட்டரில் விளாசியுள்ளார்.