ilakkiyainfo

எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை

எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை
May 31
15:44 2019

எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என  திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார்

அவர் மிகவும் அமைதியானவர்.

அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார்.

ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது.

திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள்

அதன் பின்னர் திடீரென படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் இரு மாணவர்கள் உயிருடன் உள்ளனர் எனவும் ஐந்துபேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் எனக்கு தகவல் கிடைத்தது.

நான் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களின் உடல்கள் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தன.

நான் பிரதே அறையின் உடலை  திறந்தேன் .முதலில் இருந்தது எனது மகனின் உடல்.

இலங்கையில் உரிய நீதி கிடைக்காது.நான் கலப்பு நீதிமன்றமொன்றையே விரும்புகின்றேன் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்பார்க்கின்றேன் , நான் ஒருபோதும் இலங்கையை சேர்ந்த சில நீதிபதிகளை நம்புவதில்லை.

நான் பணமோ, வேறு எதனையுமோ கேட்கவில்லை, நான் நீதியையே கேட்கின்றேன்.

நான் எனது மகனிற்கு சர்வதேசநீதியை கேட்டுநிற்கின்றேன், அதனை கோராவிட்டால் நான் ரஜிகரின் தந்தையில்லை.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com