எனது மச்சான், உந்த பொலிஸை உன்னால் சுட முடியுமா என்று கேட்டதற்கே நான் சுட்டேன்.. சந்தேக நபர் பரபரப்பு வாக்குமூலம்!
எனது மச்சான், உந்த பொலிஸை உன்னால் சுட முடியுமா என்று கேட்டதற்கே நான் சுட்டேன் என்று கைதாகியுள்ள பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியிருப்பதாக அறிய முடிகிறது.
”நான் மது போதையில் இருந்து சும்மாதான் அந்தப் பொலிஸாரின் துப்பாக்கியை எடுத்தேன். அப்போது எனது மச்சான், “உந்த பொலிஸை உன்னால் சுட முடியுமா என்று சவால் விட்டார், அதனால் நானும் சுட்டுவிட்டேன்” என்று கைதாகியுள்ள பிரதான சந்தேக நபர் தனது முதற்கட்ட பொலிஸ் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட சந்தேக நபர் இன்று காலையில் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையிலேயே இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தற்பொழுது பரபரப்பான நிலையைத் தோற்றுவித்துள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment