மாஸ்கோ: அமெரிக்காவின் ரகசிய புலனாய்வுத்துறையின் கணினிப் பிரிவில் பணி புரிந்த எட்வர்ட் ஸ்னோடென் அந்நாடு பிற நாடுகளை ரகசியமாகத் துப்பறிவதை வெளியுலகிற்குத் தெரிவித்ததன் மூலம் அரசின் கோபத்திற்கு ஆளானார்.
தண்டனைக்குப் பயந்து அங்கிருந்து தப்பிய அவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் அவரது காதலி லிண்டே மில்ஸ் தற்போது ரஷ்யாவிலுள்ள ஸ்னோடனுடன் இணைந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அனடோலி கூறியுள்ளார்.
ஸ்னோடனின் நீண்ட கால காதலியும், நடன நங்கையுமான லிண்ட்சே கடந்த ஜூலை மாதம் மாஸ்கோவில் சந்தித்து விட்டு நாடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ரஷ்யா வந்துள்ளார்.
எப்பொழுதெல்லாம் லிண்ட்சே ரஷ்யா வருகிறாரோ அப்பொதெல்லாம் ஸ்னோடனுடன் தான் அவர் வசிப்பதாகவும், அது ஸ்னோடனை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விசா கட்டுப்பாடுகள் காரணமாக லிண்ட்சே ரஷ்யாவில் நிரந்தரமாக தங்க முடியாத நிலை ஏற்பட்டாலும், அடிக்கடி அவர் அங்கு வந்து செல்வதாகவும், இருவரும் இணைந்து ரஷ்யாவில் உள்ள திரையரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதாகவும் அனடோலி கூறியுள்ளார்.
இதன் மூலம் உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை என்பது தெளிவாக தெரிவது குறிப்பிடத்தக்கது.
புகைப்படத்தில் தென்படுவது 50 அடி அகலமான இராட்சத நண்டு…!!
17-10-2014
உலகின் மிகப்பெரிய நண்டாக இது இருக்கும் என நம்பப்படுகிறது. வானிலிருந்து பிடிக்கப்பட்ட குறித்த புகைப்படத்தில், நீரினுள் தென்படும் இந்த நண்டானது 50 அடி அகலமானதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் புகைப்படத்தில் தென்படுவது மணல் மேடாகவோ அல்லது புகைப்படக் கையாழுகையாகவோ இருக்கக்கூடும் என சிலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பிடித்த குயின்டன் வின்டர் என்பவர், ஆரம்பத்தில் தானும் மணற்திட்டாக இருக்கக்கூடும் என நம்பியதாகவும் பின்னர் அது நீரிலிருந்து நகர்வதைக் கண்டபின்னரே அது நண்டு என்பதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, உலகின் மிகப்பெரிய நண்டாக ஜப்பானின் ஸ்பைடர் கிராப் (சிலந்தி நண்டு) எனும் 12 அடியுடைய நண்டினம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.