ilakkiyainfo

கலாபவன் மணியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த ‘அந்த’ நண்பர்கள் யார்?

கலாபவன் மணியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த ‘அந்த’ நண்பர்கள் யார்?
March 21
21:56 2016
திருவனந்தபுரம்: தனது கணவரை சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்ததாக நடிகர் கலாபவன் மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.
நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனையால் கடந்த 6ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மணி அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.21-1458542591-kalabhavan-mani456

ரகசிய விசாரணை

மணியை யாராவது திட்டமிட்டே கொலை செய்தார்களா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீசார் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் 4 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.21-1458542585-kalabhavan-mani657

நிம்மி மணி
என் கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததாக எனக்கு தெரியவில்லை. அவர் பீர் மட்டும் தான் குடிப்பார்.

எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.21-1458542579-kalabhavan-mani-2345

சாராயம்
நான் மணியின் நண்பர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மது அளித்தேன். அப்போது மணி அதை குடிக்கவில்லை. மீதமுள்ள மதுவை நான் எடுத்துச் சென்றேன்.நான் படிக்க உதவியவர் மணி. பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் மது அளித்தேன். பிப்ரவரி 15ம் தேதி நான் அபுதாபிக்கு சென்றுவிட்டேன். மணிக்கு யார் மது அளித்தார்கள் என எனக்கு தெரியாது என அவரின் நண்பர் ஜோமோன் கூறியுள்ளார்.

21-1458542567-kalabhavan-mani34

மணி

நான் மணி மது அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் அவரை சந்தித்தேன். படம் குறித்து பேச அங்கு சென்றேன். அவருடன் சில நண்பர்கள் இருந்தனர். அவர் பீர் மட்டும் தான் குடித்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என நடிகரும், மணியின் நண்பருமான ஜாபர் இடுக்கி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.21-1458542554-kalabhavan-mani235-600

தற்கொலை
மணியின் மரணத்தை தற்கொலை போன்று தெரிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பூர்வமாக போராடுவோம். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். அவருக்கு குடும்ப பிரச்சனை எதுவும் இல்லை. அது விஷ சாராயம் என்றால் மணிக்கு மட்டும் எப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? அவரை பலர் பணத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர் என்கிறார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.

 

தெறி ட்ரைலர்
22-09-2016

கலை புலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தெறி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு நேற்று (20.03.2015) நடைபெற்றது இப்படத்தின் ட்ரைலர் உங்களுக்காக

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com