ilakkiyainfo

என் காதலன் யார் என்று சொல்லுங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்

என் காதலன் யார் என்று சொல்லுங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்
May 11
14:25 2019

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் அவரது காதலரை கரம்பிடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், தன் காதலன் யார் என்று தனக்கு சொல்லும்படி ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், மெய் என தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ராஜேசுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும். காதலித்தவரையே கரம் பிடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஐஸ்வர்யா ராஜேஷ் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

இப்படியான பொய் செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதை சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com