ilakkiyainfo

‘என் மகளை நேரடியா எலிமினேஷனுக்கு நாமினேட் பண்ணினது தவறு!” – ‘பிக் பாஸ்’ ரம்யாவின் அம்மா

‘என் மகளை நேரடியா எலிமினேஷனுக்கு நாமினேட் பண்ணினது தவறு!” – ‘பிக் பாஸ்’ ரம்யாவின் அம்மா
July 13
17:20 2018

ண்டைகள், போட்டிகள், கருத்து மோதல்கள் என இருந்தாலும், `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமும் தொய்வும் கலந்தே இருக்கிறது. இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் ஏராளமான கருத்து வேறுபாடுகளைப் போட்டியாளர்கள் எதிர்கொண்டனர்.

போட்டியாளரும் பின்னணிப் பாடகியுமான ரம்யாவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. `சகப் போட்டியாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் ஆக்டிவாக விளையாடும் ஆர்வமே இல்லை’ எனவும் வெளிப்படையாகக் கூறினார். `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், ரம்யா என்.எஸ்.கே.வின் செயல்பாடுகள் குறித்து அவரின் அம்மா கலைச்செல்வியிடம் பேசினோம்.

“உங்க பொண்ணு `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளராகப் போனதுக்குக் காரணம் என்ன?”

“திட்டமிட்டுப் போகலை. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு தன் ஃப்ரெண்ஸ்ட்களோடு `பிக் பாஸ்’ பற்றி பேசிட்டிருக்கும்போது, சேனலிலிருந்து அழைப்பு வந்துச்சு.

அங்கே இன்டர்வியூ முடிஞ்சு கையெழுத்துப் போட்டுட்டு ஷாப்பிங் பண்ணிட்டு, நைட் 9 மணிக்கு வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரத்திலேயே வீடியோ பைட் எடுக்க சேனலிலிருந்து வந்தாங்க.

ரெண்டு மணி நேரத்துக்கு மேலாகிடுச்சு. அடுத்து, டிரெஸ் பேக்கிங். காலையில் 6 மணிக்கு காரில் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஒரே நாளில் முடிவாகி, போட்டியாளரா போயிருக்கிறாள்.

மற்றவங்களோடு சண்டை போடறதுக்கோ, இன்னொருத்தரை டார்கெட் பண்ணி வெற்றிபெறவோ ரம்யா அந்த நிகழ்ச்சிக்குப் போகலை. அது அவளுக்குத் தேவையுமில்லை. இந்த நிகழ்ச்சியால் வாழ்க்கையில் சில அனுபவங்களும் மாற்றங்களும் கிடைக்கும்னு நம்பிக்கையோடு போயிருக்கா.”

“ரம்யாவின் குணநலன்கள் பற்றி…”

“நான் பியூட்டீஷியன் கிளாஸ் எடுத்துட்டிருந்தேன். கணவர் மறைவுக்குப் பிறகு, ரெண்டு பொண்ணுகளையும் வளர்க்கிறதில் மட்டுமே கவனம் செலுத்தறேன். ரம்யா சின்ன வயசுல மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சாள்.

அவள் சினிமா பின்னணிப் பாடகி ஆகணும்னு ஆசைப்பட்டேன். `உனக்கென நான் எனக்கென நீ’ (காதலில் விழுந்தேன்) பாடல் மூலமாக பின்னணிப் பாடகியானாள். நிறைய ஹிட் சாங்ஸ் பாடியிருக்காள். வீட்டிலும் ஸ்கைப்லேயும் மியூசிக் கிளாஸ் எடுத்திருக்கிறாள்.

ரம்யா அமைதியான பொண்ணு. எந்தப் பிரச்னைக்கும் போக மாட்டாள். ஃப்ரெண்ட்ஸுகளோடு நிறைய நேரத்தைச் செலவழிப்பாள். அவங்க தாத்தா மாதிரியே இல்லாதவங்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டு.”

` `பிக் பாஸ்’ வீட்டில் உங்க பொண்ணுக்குச் சவாலாக இருக்கும்னு நீங்க நினைக்கிறது எது?”

“வெளிநாட்டுக் கச்சேரிகளில் நிறைய பாடுவதால், தனியாவே பயணம் செஞ்சு, மாசக்கணக்கில் என்னைப் பிரிஞ்சு இருப்பாள். அதனால், ஃபேமிலியைப் பிரிஞ்சு இருக்கிறது அவளுக்குச் சிரமமா இருக்காது.

ஓரளவுக்குச் சமைப்பாள். பெரிசா வீட்டு வேலைகள் செய்ய மாட்டாள். அதுக்கு நேரமும் இருக்காது. இப்போ, `பிக் பாஸ்’ வீட்டுல எல்லா வேலைகளையும் ஷேர் பண்ணிதானே ஆகணும்.

அதில் கொஞ்சம் சிரமப்படலாம். `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே போறதுக்கு முன்னாடி, நிறைய சமையல் டிப்ஸைக் கேட்டுட்டுப் போனாள். `நீ நீயா இரு’னு சொல்லி அனுப்பினேன். வேற எந்த அட்வைஸும் கொடுக்கலை. எத்தனை நாள் அந்த வீட்டில் இருந்தாலும், வெளியே வரும்போது புதிய மாற்றத்தோடு வருவாள்.”

rrrr2_12216

``உங்க பொண்ணோட புது ஹேர்ஸ்டைல் ரகசியம் என்ன?”

(சிரிக்கிறார்) “அவளுக்கும் தாத்தா என்.எஸ்.கிருஷ்ணன் மாதிரி சுருள் முடிதான். எப்பவும் பாய் கட் ஹேர்ஸ்டைல்தான் வெச்சுப்பா. `புது ஹேர்ஸ்டைல் மாத்தப்போறேன்.

வித்தியாசமா இருக்கும்’னு சொல்லிட்டு இருந்தாள். திடீர்னு ஒருநாள், ரொம்ப ஷார்ட்டா முடியை கட் பண்ணி, கலரிங் பண்ணிட்டு வந்து நின்றாள். `அழகான சுருள்முடியை ஏண்டீ இப்படிப் பண்ணிட்டே’னு சிரிச்சேன். `எனக்குப் பிடிச்ச மாதிரி பண்ணியிருக்கேன்’னு சொன்னாள். இப்போ எல்லோரும் அவள் ஹேர்ஸ்டைல் பற்றி அதிகம் பேசறாங்க.”

`` `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் உங்க மகளின் செயல்பாடுகள் எப்படி இருக்குனு நினைக்கிறீங்க?”

“என் பொண்ணுங்கிறதுக்காகச் சொல்லலை. இதுவரை மத்தவங்க பற்றி யார்கிட்டயும் இன்னொருத்தரைப் பத்தி தப்பாப் பேசலை. அவளால் யாருக்காவது பாதிப்பு வந்திருக்கா? அவளைப் பற்றி சகப் போட்டியாளர்கள் குற்றம் சொல்லியிருக்காங்களா? ஒருத்தர் தப்பு செஞ்சா, அதைப் பிறர் மனசு புண்படாத வகையில் சொல்வாள்.

பொன்னம்பலம் சொன்ன அந்த ஒரு வார்த்தை தவிர, பெரிசா ரம்யா எதுக்கும் கோபப்படலை. முதல் சீசனிலும் சண்டைகள், போட்டிப் பொறாமைகள் இருந்தாலும், அவை ரசிக்கிற மாதிரி இருந்துச்சு.

தவறு செய்றவங்க தன் தவறுகளை உணர்ந்து சரிசெய்துக்கிற மாதிரி தோணுச்சு. ஆனா, இந்த சீசன் தொடக்கம் முதலே ஒரே சண்டையா இருக்கு. அந்த வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் எல்லோருமே டாஸ்க்கை ஆக்டிவா விளையாடுற மனநிலையில் இல்லைனு தோணுது.

பலரின் இயல்பான குணம் இதுவரை வெளிவரலை. சண்டைகள் குறைஞ்சு, சுவாரஸ்யம் கூடணும். அதுதான் நேயர்களின் எதிர்பார்ப்பு.”

ramya_09079_12086

``ரம்யாவை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டதை எப்படிப் பார்க்கிறீங்க?”

“அது தவறான முடிவு. `பிக் பாஸ்’ போட்டியாளர்கள் கேமை முறையா, ஆர்வத்துடன் விளையாடுறதில்லை. இதைதான் ரம்யாவும் ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னாள்.

ஆனால், ரம்யாவைத் தலைவி பதவியிலிருந்து நீக்கிட்டு, அடுத்த வார எலிமினேஷனுக்கு நேரடியா நாமினேட் பண்ணிட்டாங்க. ரம்யாவுக்கு போலியா இருக்கத் தெரியாது.

அவளை எலிமினேட் பண்ணினாலும் கவலைப்பட மாட்டாள். ஒருவேளை, ரம்யாவை உடனே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினாலும் வருத்தப்பட மாட்டேன். அவளுக்கு எல்லா டாஸ்கையும் எதிர்கொள்ளும் திறமை உண்டு.

எல்லோருடனும் ஃப்ரெண்ட்லியா மிங்கிள் ஆகிடுவா. யாராச்சும் பிரச்னை பண்ணினாலும் அங்கிருந்து விலகிடுவாள். வரும் நாள்களில் மத்தவங்களால் அவளுக்குப் பிரச்னைகள் வரலாம்.

மத்தவங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ரம்யா வெற்றிபெறும் நோக்கத்தில் அந்த நிகழ்ச்சிக்குப் போகலை. சிங்கரா ரம்யாவை இதுவரை கொஞ்சம் பேருக்குத் தெரியும். இனி பலருக்கும் அவளைப் பத்தி பரிட்சையமாகத் தெரியணும்ங்கிற ஒரே நோக்கத்தோடுதான் போயிருக்கிறாள்.”

Top Comment

முடி வெள்ளையாயிருக்ரதாலே ரம்யாவோடே உண்மையான அழகை ரசிக்க முடியலே. ரொம்ப அடக்கமானவங்க.

ஆனா ஆளுமைத்திறன் இல்லேன்றத பிக் பாஸ் முடிவு பண்ணிட்டு ரம்யாவ தலைவர் பதவியிலேர்ந்து நீக்கிட்டாரு. ஒரே ஒரு சின்ன வருத்தம். சென்றாயன் சாப்பாட்டு தட்டுல சோறு போட்டு பசியோடு நின்னுட்ருந்தப்ப மத்தப் பொண்ணுங்க கூட சேர்ந்து விளையாட்டுல இல்லேன்னா சோறே கிடையாதுன்னு சொன்னப்ப சென்றாயன் துவண்டு போய் சோறு வேண்டான்னு சொல்லிட்டுப் போனத பார்த்து உண்மையிலேயே கண் கலங்கி போயிட்டேன்.

ஆனா அதுக்கப்புறம் திருடன் டானி ஒரு ஆப்பிள் கொடுத்தாரு அத பசியோடு வாங்கி சென்றாயன் சாப்பிட்டாரு. அதுக்கும் என் கண்கள் கலங்கிடுச்சு. ஆனா ரம்யா ஒதுங்கி இருக்கக் கூடாது.

மகத் மாதிரி ஏதாவது பிரச்சினை கிளப்பி எல்லாரையும் வெறுப்பேத்திட்டு அப்புறம் மன்னிப்பு கேட்கிறது மாதிரி ஏதாவது பிரச்சினை கிளப்புங்க.. அப்பத்தான் ஷோ விருவிருப்பைருக்கும். பிக் பாசுக்கும் சந்தோஷமாகும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com