Site icon ilakkiyainfo

எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை (சிறப்பு கட்டுரை)

எல்­லாள மன்­ன­னுடன் போரி ட்டு வெற்­றி­பெற்ற துட்­ட­கை­முனு அப்­போ­தி­ருந்த போர் விதி முறை­களைப் பின்­பற்றி எல்­லா­ள­னுக்கு நினைவுத் தூபி எழுப்பி­யுள்ளான்.

ஆனால் அந்தப் போர் தர்­ம­நெறி இப்­பொ­ழுது எங்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் சென்­று­விட்­ட­தென யாழ். பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரி­யரும் உயர் பட்டப் படிப்­புக்கள் பீட பீடா­தி­ப­தி­யு­மான சத்­தி­ய­சீலன் தெரி­வித்தார்.

யாழ். நகரில் எல்­லாளன், பண்­டா­ர­வன்­னியன், பர­ரா­ஜ­சே­கரன் ஆகிய மன்­னர்­க­ளுக்கு அமைக்­கப்­பட்­டுள்ள சிலை­களை திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் நடை­பெற்­ற­போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வர­லாற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் ஆற்­றிய உரையின் முழு­மை­யான வடிவம் வரு­மாறு:

ஒரு­ம­னித சமு­தா­யத்­திற்கு அடை­யா­ளமும் இருப்பும் மிகவும் முக்­கி­ய­மா­னவை. அடை­யா­ளமும் இருப்பும் ஆபத்­திற்கு உள்­ளா­கின்ற போது அந்த மனித சமு­தாயம், தனது இனம், மொழி, சமயம் போன்ற அடை­யா­ளங்­களை முதன்­மைப்­ப­டுத்­து­வது இயல்­பா­னது. இத­னா­லேயே மனித வாழ்­விற்கு அடை­யா­ள­மான இருப்பும் முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது.

அந்த வகையில் எவ­ருமே சிந்­திக்­காத விட­யத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா நீண்­ட­கால தொலை­நோக்கின் அடிப்படையில் மூன்று மன்­னர்­க­ளுக்கு யாழ்ப்­பா­ணத்தில் சிலை அமைத்­துள்ளார்.

எல்­லாள மன்னன் இலங்கை மன்னன் எனவும் பர­ரா­ஜ­சே­கர மன்னன் பேராச்­சி­யத்தின் மன்னன் என்று கூறக்­கூ­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். ஆனால், பண்டாரவன்­னியன் வன்­னியை ஆண்­டவர் என்று வரு­கின்றபோது முன்­ன­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் மன்னர் என்­பதை விட குறு­கிய அரசர் என்­பதே பொருத்­த­மா­ன­தாக அமையும்.

இந்த நிகழ்வின் அடி­நாதம் இது­வா­கவே உள்­ளது. கோட்­டையில் புதிய பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகுதி திறந்து வைக்­கப்­பட்­ட­போது மறைந்த தலைவர் அ.அமிர்­த­லிங்கம் உரை­யாற்­று­கையில், இலங்கை வர­லாற்­றையும் யாழ்ப்­பாண மற்றும் அப்­போது இலங்­கை­யி­லி­ருந்த மூன்று அரசுகளின்வரலாற்றையும் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்த வகையில் இவ்­வி­டயம் முக்­கி­ய­மா­ன­தா­கவே அமை­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்தில் சிலை அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று மன்­னர்­களில் எல்­லாளன் என்ற மன்னன் கி.மு. 2ஆம் நூற்­றாண்டில் இலங்கை முழு­வ­தையும் ஏறத்தாழ 44 ஆண்­டுகள் ஆட்சி செய்­துள்ளான்.

பர­ரா­ஜ­சே­கரன் என்ற மன்னன் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தின் 18 மன்­னர்­களில் 12ஆவது மன்­ன­னாக கி.பி. 1478இல் இருந்து  1519வரை ஆட்சி செய்து வன்னிப்பி­ர­தேசம் உட்­பட தமது ஆட்சி அதி­கா­ரத்தை நிலை நிறுத்­தி­யுள்ளார்.

யாழ்ப்­பாண  இராச்­சி­யத்­தி­னதும் கண்டி இராச்­சி­யத்­தி­னதும் அதி­கா­ரங்கள் வலுப் பெற்­றி­ருந்த காலத்தில் வன்னி சிற்­ற­ர­சுகள் இம்­மன்­னர்­க­ளுக்கு அடங்கி வரி செலுத்­து­ப­வை­யாக இருந்­துள்­ளன. ஒல்­லாந்­த­ருக்கும் கண்டி இராச்­சி­யத்­திற்கும் பிரச்­சினை ஏற்­பட்­ட­பொ­ழுது யாழ்ப்­பாண அர­சர்­க­ளுக்கு தோள் கொடுத்து செயற்­பட்­டன.

கிறிஸ்­து­வுக்கு முற்­பட்ட காலப்­ப­கு­தியில் இலங்கை அர­சர்­களின் தோற்றம் பற்றி நாம் அவ­தா­னிப்­போ­மாயின் நாக அர­சர்கள் கிறிஸ்­து­விற்கு முற்­பட்ட நூற்­றாண்­டு­களில் இலங்­கையின் வட­ப­கு­தியில் ஆட்சி அதி­கா­ரங்­களைப் பெற்­ற­வர்­க­ளாக இருந்­துள்­ளனர்.

இந்த வகையில்  புத்­த­ரு­டைய வருகை கூட மகோ­தர, சூலோ­தர என்ற இரண்டு அர­சர்­க­ளுக்­கி­டை­யி­லான சிம்­மா­சனப் போட்­டியைத் தீர்க்கும் வகை­யி­லா­ன­தா­கவே அமை­கின்­றது.

இது விஜ­யனின் வர­விற்கு முன்னர் நிகழ்ந்­துள்­ளது. இலங்­கையில் ஆரியக் குடி­யேற்­றத்­திற்கு முன்பு நாக அர­சு­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட பிணக்­கினைத் தீர்க்கும் வகையில் சமா­தா­னத்தை இத் தீவில் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக புத்­த­ரு­டைய வருகை அமைந்­த­தா­கவே குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இந்த வகையில் நாம்   இக்­கா­லப்­ப­கு­திக்கு முன்னர் சென்று பார்க்­கின்ற போது கி.மு. 10ஆம் நூற்­றாண்­ட­ளவில்  இற்­றைக்கு சுமார்  3ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பே இங்கு ஒரு வளர்ச்­சி­ய­டைந்த நாக­ரிகம் இருந்­தி­ருக்­கி­றது என்­பதை அறி­ய­மு­டி­கின்­றது. ஆனைக்­கோட்டை, சாட்டி, பூந­கரி, இர­ணை­மடு போன்ற இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் முடி­வு­களும் இதனைக் காட்­டு­கின்­றன.

எனவே 3ஆயிரம் ஆண்­டுகள் வர­லாற்றைக் கொண்ட பிர­தே­ச­மாக இப்­பி­ர­தேசம் காணப்­ப­டு­கின்­ற­மையே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாக உள்­ளது. இத்துறையில்  கலா­நி­தி­க­ளான பொ.ரகு­பதி, பேரா­சி­ரியர். செ.கிருஸ்­ண­ராஜா, பேரா­சி­ரியர் சி.க.சிற்­றம்­பலம், பேரா­சி­ரியர் ப.புஷ்­ப­ரத்­தினம் போன்றோர் இத்து­றையில் தமது பணி­களை ஆற்­றி­யுள்­ளார்கள்.

அதேபோல் இன்று இந்த நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­தி­ய­வர்­களும் பாராட்­டப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவே உள்­ளனர். ஒரு வரு­டத்­திற்கு முன்பு சங்­கி­லியன் சிலை விஷமி­களால் சேத­மாக்­கப்­பட்ட பொழுதும் புன­ர­மைத்துத் திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த நிகழ்­விலும் நாம் கலந்­து­கொண்டோம்.

அச்­சி­லையும் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வா­லேயே திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. எவர் இச் செயலைச் செய்­தாலும் பாராட்­டப்­பட வேண்­டி­ய­தாகும். இவ்­வி­ட­யத்தில் அவர்­க­ளுக்கு அர­சி­ய­லுக்கு அப்பால் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு எனது பாராட்­டுக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

இலங்கைத் தமி­ழர்­களின் வர­லாற்றில் அச்­சு­றுத்தல் ஏற்­பட்ட காலப்­ப­கு­தி­களில் தமது பண்­டைக்­கால வர­லாற்றை எடுத்­துக்­காட்­டு­கின்ற முயற்சிகள்எடுக்கப்­பட்­டுள்­ளன.

இதற்கு நாம் இலங்கை வர­லாற்றில் பல உதா­ர­ணங்­களைக் கூறக் கூடி­யதா­க­வுள்­ளது. இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தோற்றம், சத்­தி­யாக்­கி­ரக போராட்ட வடி­வங்கள், திரு­மலை பாத யாத்­திரை போன்­ற­வற்­றுடன் நல்­லூரில் கொடி­யேற்றி தமது பண்­டைய வர­லாற்று நிகழ்­வு­களை ஞாப­க­மூட்­டி­ய­வற்றைக் குறிப்­பிட்டுச் சொல்­லலாம்.

அந்த வகையில் யாழ்ப்­பாண தொல்­பொருள் கழகம் 1973இல் பேரா­சி­ரியர் கா.இந்­தி­ர­பாலா, பேரா­சி­ரியர் வி.சிவச்­சாமி, யாழ்ப்­பாண தொல்பொருள் ஆணையாளர் செல்­வ­ரட்ணம் போன்­றோரால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­படை நோக்கம் தமி­ழரின் இருப்பை தொல்­லியல் ஆய்­வு­களின் மூலம் வெளிக்­காட்­டு­வ­தாக அமைந்­தது.

நல்லூர் வர­லாற்­றுக்­க­ழகம் கலா­நிதி குண­ரா­ஜா­வினால் உதவி அரச அதி­ப­ராக நல்­லூரில் இருந்த போது முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதற்கு அப்­பொ­ழுது யாழ்ப்­பா­ணத்தில் கட­மை­யாற்­றிய அரச அதி­பர்கள் க.சண்­மு­க­நாதன், செ. பத்­ம­நா­தனும் உறு­து­ணை­யாக இருந்­தனர்.

இத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு அரசின் பூரண ஆத­ரவு கிடைக்­கா­மையால் இவற்றை எம்மால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. ஏனெனில், தொல்­லியல் ஆய்வு என்று வரு­கின்ற பொழுது கொழும்­பி­னு­டைய அனு­ம­தியைப் பெற்றே இவற்றைச் செய்ய வேண்­டி­யுள்­ளது.

யாழில் யமுனா ஏரி அமைந்த இடமும் அதனைச் சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தை நினை­வூட்­டு­கின்ற பல தொல்­லியல் அடை­யாளப் பகு­திகள் உள்­ளன.

இவை­களைப் பேணவும் அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்க­வேண்டும். தமி­ழர்கள் உணர்­வோடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார விட­யங்­களில் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்கள். ஆனால் அவை அரசின் பூரண ஆத­ரவு கிடைக்­கா­மையால் பூர­ணப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

நல்லூர் புனித நகரம் என்னும் திட்­டத்­தி­னையும் கருத்­தி­லெ­டுத்து ஏற்ற ஒழுங்­கு­களை மேற்­கொள்­ள­வேண்டும்.

இன்று சிலை அமைக்­கப்­பட்­டுள்ள எல்­லாள மன்­ன­னுடன் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற மன்னன் துட்­ட­கை­முனு சிங்­கள மக்கள் மத்­தியில் தனித் தலை­வ­னாக, தேசிய தலை­வ­னாக கரு­தப்­ப­டு­கின்றான். அந்த அள­விற்கு சம­பலம் கொண்­ட­வர்­க­ளாக இரு­வ­ருமே விளங்­கி­யுள்­ளனர்.

இருப்­பினும் அப்­போ­தைய இருந்த போர் விதி­மு­றை­க­ளுக்கு துட்­ட­கை­முனு மன்னன் மதிப்­ப­ளித்து எல்­லாள மன்­ன­னுக்கு ஒரு நினைவுத் தூபி எழுப்பியிருந்தார்.

பிரித்­தா­னி­ய­ரு­டைய ஆட்சி வரை இந்த நினைவுத் தூபிக்கு சிங்­கள மக்கள் மதிப்­ப­ளித்­துள்­ளனர். அந்தப் போர் தர்மநெறி இப்­போது எங்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் சென்­று­விட்­டது. அந்த வகையில் தெமல மகா சேத்­திய என்று அழைக்­கப்­ப­டு­கின்ற கட்­டடம் இந்த அடை­யா­ள­மாக இருக்­கலாம் எனவும் கூறப்­ப­டு­கின்­றது. கலா­நிதி ஜேம்ஸ் ரி.இரத்­தினம் எழு­திய எல்லாளனின் நினை­விடம் கட்­டு­ரையில் இதனை மிகவும் சிறப்­பாக எடுத்து காட்­டு­கின்றார்.

இந்த வகையில் பர­ரா­ஜ­சே­க­ரனின் யாழ்ப்­பாண இராச்­சி­ய­மா­னது 1619வரை நிலைத்­தி­ருந்­துள்­ளது.  இதில் ஏறத்­தாழ 18 மன்­னர்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக ஆட்­சி­பு­ரிந்­துள்­ளனர். பர­ரா­ஜ­சே­கரன், செ.கஜ­ரா­ஜ­சே­கரன் ஆகிய இரண்டு பெயர்­களும் மன்­னர்­க­ளு­டைய பெயர்கள் அன்று. அவை சிம்­மா­ச­னத்­திற்­கு­ரிய பட்டப் பெயர்கள் ஆகும்.

1478 தொடக்கம் 1519 வரை­யான காலப்­ப­கு­தியில் ஆட்சி செய்த மன்­ன­னாக இருக்­கின்ற பர­ரா­ஜ­சே­க­ரனின் மக­னாக 1519 இல் மன்­னான முத­லா­வது சங்கிலிய மன்னன் கூறப்­ப­டு­கின்றான்.

யாழ்ப்­பாண வர­லாற்றைக் கூறு­கின்ற நூல்­க­ளான கைலா­ய­மாலை, வையா பாடல், யாழ்ப்­பாண வைப­வ­மாலை ஆகிய நூல்­களால் பல்­வேறு குழ­று­ப­டி­களும் தெளி­வற்ற நிலை­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் பர­ரா­ஜ­சே­கரன் குறித்தும் ஒரு மயக்க நிலை காணப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இந்தப் பர­ரா­ஜ­சே­கரின் காலப்­ப­கு­தியில் இலங்­கையில் முக்­கி­ய­மாக இரண்டு மாற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. கோட்­டையில் 6ஆம் பராக்­கி­ர­ம­பா­குவின் ஆட்சி நிலை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.

அங்­கி­ருந்து செண்­ப­கப்­பெ­ருமாள் இந்தப் பகு­தியை கைப்­பற்றி 1450 இலி­ருந்து 1467 வரை­யான 17 வரு­டங்கள் ஆட்­சி­செய்­துள்ளான். இந்த செக­ராச சேகர மன்னன் நாட்டை விட்டு இந்­தி­யா­விற்கு ஓடி 17 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் திரும்பி வந்து சோழ இராச்­சி­யத்தின் உத­வி­யுடன் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தை கைப்­பற்­றி­யுள்­ள­தாக வர­லாறு தொடர்­கி­றது.

தென்னிந்­தியா அண்­மையில் இருப்­பதால் அதுவும் சுமார் 18மைல் தொலை­வி­லி­ருந்து எமக்குக் கிடைத்­தது சாபமா அல்­லது துன்­பமா என்­பதை இந்­தியக் கொள்கை வகுப்­பா­ளர்கள் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ள­வேண்டும்.

யாழ்ப்­பாண வைபவமாலை என்ற நூல் பர­ரா­ஜ­சே­கரன் என்னும் பட்­டப்­பெ­யரைச் சூடி­யி­ருந்த பிற்­கால மன்னன் ஒரு­வனைக் குறிப்­பிட்டு சில தடு­மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அடுத்­த­தாக குறு­நில மன்­ன­னான பண்­டா­ர­வன்­னியன் 1742 தொடக்கம் 1811வரை ஆட்­சி­செய்­துள்ளார். கண்டி இராச்­சியம் 1815ஆம் ஆண்டு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. பண்­டா­ர­வன்­னியன் 1811இல் இறந்து விட்டான். கால அடிப்­ப­டை­களை சரி­யாக விளங்கிக் கொண்டால் பல குழப்­பங்கள் தீரும்.

1968இல் பண்­டா­ர­வன்­னியன் என்னும் கழகம் அப்­பொ­ழுது வன்னிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னராக இருந்த ரி.சிவ­சி­தம்­ப­ரத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1982இல் பண்­டா­ர­வன்­னியன் ஒரு தேசிய வீர­னாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டான். அதே ஆண்டில் அதன் பின்னர் வவு­னியா செய­ல­கத்தில் பண்­டா­ர­வன்­னி­ய­னுக்கு சிலையும் வைக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண   எல்­லைப்­ப­ரப்பில் பூந­கரி, கரிப்­பட்­ட­மூலை, குமி­ள­முனை, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை போன்ற பல பிர­தே­சங்கள் வன்னி இராச்­சி­யத்தில் சேர்ந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றன. இது நுவர கலா வாவி­யுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­தது. நுவர கலா வாவி கண்டி இராச்­சி­யத்தின் கீழ் ஆளு­கையில் இருந்­தது. இதில் புத்­த­ளமும் அடங்­கி­யி­ருந்­தது.

அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, பாணமை போன்ற பகு­திகள் அடங்­க­லா­கவும் இது இருந்­துள்­ளது. தமிழ் வன்­னி­பங்கள், சிங்­கள வன்­னி­பங்கள் எனவும் இவை இருந்­துள்­ளன. புத்­தளம், திரு­கோ­ண­மலை, கரிப்­பட்­ட­மூலை, முல்­லைத்­தீவு, தண்­ணீ­ரூற்று போன்ற பகு­திகள் அடங்­க­லாக பண்­டா­ர­வன்­னியன் அதி­காரம் பரவியிருந்தது.

பண்­டா­ர­வன்­னி­யனைப் பொறுத்த வரையில் ஒல்­லாந்­த­ருக்கு எதி­ராக யாழ்ப்­பாண அர­சர்­க­ளுடன் இணைந்தும் போரிட்­டுள்ளான். ஏழு தட­வைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்­பாண ஆட்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்ளான்.

அவ­ரது பெயர் நினைவுத் தூண் ஒன்றில் பண்­டா­ர­வன்­னி­மையன் என்றே கூறப்­பட்­டுள்­ளது. இவ­னது நடுகல் கற்­சி­லை­ம­டுவில் காணப்­ப­டு­கின்­றது. இந்த நடு கல்லை பண்­டா­ர­வன்­னியன் இறந்­த­வுடன் நடப்­ப­ட­வில்லை.

ஏறக்­கு­றைய 94 வரு­டங்­களின் பின்பே லூவாஸ் தனது மனுவல் ஒப் வன்னி என்ற நூலில் இந்­ந­டுகல் நாட்­டப்­பட்­டுள்­ளது எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்றார். இக் கல்லும் அண்­மையில் உடைக்­கப்­பட்டு தற்­போது திருத்­தப்­பட்­டுள்­ளது.

ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் ஆகிய அந்­நி­யரை எதிர்த்த ஒரு­வ­னாக பண்­டா­ர­வன்­னியன் காணப்­ப­டு­கின்றான். இவனை 1803இல் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க வும் பெரிய காயத்­திற்­குள்­ளா­கிய இவன் அங்­கி­ருந்த தப்­பிச்­சென்று பிரித்­தா­னிய ஆதிக்­கத்­திற்­கெ­தி­ராக போராடி 1811இல் இறந்து போகின்றான்.

இவன் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இந்த வகையில் இன்று யாழில் திறந்து வைக்­கப்­பட்­டுள்ள மூன்று சிலை­களும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. இதேபோல் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தின் வர­லாறை அறி­வ­தற்­கான அகழ்­வா­ராய்ச்­சிக்­கு­ரிய அனுமதியைப்பெற்றுத் தர வேண்டுமெனவும் நல்லூர் பிரதே சத்தைப் புனிதப் பிரதேசமாக பிரகட னப்படுத்தப்படவேண்டுமெனவும் நாம் கோரி நிற்கின்றோம் என்றார்.

யாழ்.பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் சத்­தி­ய­சீலன் (ந.லோகதயாளன்)

Exit mobile version