ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா!

கடந்த ஆண்டு பிப்ரவரி ரஷ்ய கூட்டாட்சி சேவையகத்தால் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதில் அந்நாட்டில் தயாராகி வரும் பொருள் ஒன்றின் கருத்துரு பற்றிய தகவல்கள் வெளியாகி அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.
அனைத்து தர்க்கம் மற்றும் எச்சரிக்கைகளுக்கு எதிர்மறையான, ஒரு உள்ளூர் ஆயுத தயாரிப்பாளர் துப்பாக்கியுடன் கூடிய ட்ரோனை வடிவமைத்துள்ளார்.
ரஷ்ய ஆயுத தயாரிப்பாளரான அல்மாஸ் ஆன்டி, களோஷ்னிகாவ்வின் பிரபல ஏகே-47 க்கு ஒத்ததாக இருக்கும் துப்பாக்கி பொருத்தப்பட்ட பறக்கும் ட்ரோனை உருவாக்கி வருகிறார் அல்லது உருவாக்க முயல்கிறார் என காப்புரிமை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதில் பல விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ட்ரோன் வடிவமைப்பு மிகவும் உறுதியானதாக இருந்தாலும், வெறும் 3 அடிப்படை கருத்துருவை மட்டுமே காட்டுகிறது.
உந்துவிசை முறைகள் தெளிவாக அந்த வரைபடத்தில் இல்லை,ஆகவே அது இன்னும் பரிசீலனையில் இருக்கலாம் மற்றும் துப்பாக்கியானது டிரோனின் உடற்பகுதியில் இரண்டு இறக்கைகளுக்கு இடையே நிறுவப்படுவதாக தெரிகிறது.
ஆனாலும் இதுபோன்ற வடிவமைப்பு உலகின் மீது கட்டவிழ்த்துவிடப்படுவது ஒரு நல்ல யோசனையாக இருக்குமா என நினைக்கும் போதே திகிலூட்டுகிறது.
அசாதாரணமான சூழ்நிலை
இந்த ட்ரோன் ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் இருக்கும் போது எவ்வளவு திறமையாக செயல்படும் என்பது தெளிவாக இல்லை.
தரப்பட்டுள்ள உந்துசக்தி மற்றும் வழிசெலுத்தல் முறை ஆகியவற்றை வைத்துபார்த்தால் இது விமானம் போல செயல்படும் என தெரிகிறது.
ஆனால் எவ்வளவு நேரத்திற்கு அது தானாகவே இயங்க முடியும்? அது எடுத்துச்செல்லும் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டால் என்ன செய்யும்? தோட்டாவை நிரப்புவதற்காக மீண்டும் திரும்பி வருமா அல்லது அவசரகாலத்தில் ஒரு முறை பயன்படுத்திய பின்னர் அழிக்கப்படுமா?
பொதுஇடங்களில்
பொதுஇடங்களில் எப்படி வேலை செய்தாலும், இது ஒரு பயங்கரமான யோசனைதான். மலிவான விலையில், பயன்படுத்த எளிதானது, மற்றும் கொல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொல்லும் இயந்திரம், போர்க்களத்தில் பிரியும் வீரர்களின் உயிர்களை காட்டிலும் மலிவானது தான்.
எதிர்மறையாக சிந்தித்தால், இந்த இயந்திரங்களில் சிலவற்றை தீவிரவாத கும்பல் கைப்பற்றி, அவற்றை தங்களுக்கு ஆபத்தில்லாமல் தொலைவில் இருந்து பொதுஇடங்களில் உள்ள மக்களை கொல்ல பயன்படுத்தினால்!!!
எதிர்காலத்தில் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில் முன்னெடுத்து செல்ல வேண்டும். இது இப்போதைக்கு ஒரு காப்புரிமை தான் என்றாலும், அந்நிறுவனம் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்களை கொண்ட வகையில் இந்த யோசனையை எதிர்காலத்தில் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில், இது உண்மையிலேயே ஒருபோதும் தொடரப்பட வேண்டிய யோசனை அல்ல.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment