விலங்குகளில் பெரும்பாலானவை பிறந்த உடனே எழுந்து நின்றுவிடுகின்றன, ஒருசில மணித்தியாலங்களில் நடக்கவும் ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால் விலங்குஇனத்தை சேர்ந்த மனிதனால் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடக்க முடிவதில்லை.

 

பிறந்த குழந்தை  தனாக எழுந்து நடக்க 18 முதல் 21 மாதங்கள் எடுக்கின்றது.  நன்றாகப் பேசுவதற்கும் தானாகச் சாப்பிடுவதற்கும் இரண்டு ஆண்டு காலம் வரை தேவைப்படுகிறது.

மனிதர்களின் கர்ப்ப காலம் 9 மாதங்கள் என்பதால், குழந்தை முழுமையாக வளர்சியடையாது  பிறக்கின்றது. பிறந்த பின்பே முழு வளர்ச்சி நடைபெறுகிறது.

விலங்குகளின் கர்ப்ப காலம் அதிகம் என்பதாலும் பிறந்த பிறகு அவை தாமாகவே வளர வேண்டிய சூழல் இருப்பதாலும் முழுமையாக வளர்ச்சியடைந்த பின்பே அவை பிறக்கின்றன.

விளங்குகளைப் போன்று மனித உடல் நீண்ட காலம் வயிற்றுக்குள் குழந்தையைச் சுமப்பதற்கு இசைவாக்கம் அடையாமையால் குழைந்தைகளின் மூலையுடன் தொடர்புடைய விருத்திகள் பிறப்பின் பின்பு நடைபெறுகின்றது.