ilakkiyainfo

ஏழு இலச்சம் ரூபா ஒப்பந்தத்தில் கொலை செய்யப்பட்ட யக்கட ரங்க: நடந்தது என்ன?

ஏழு இலச்சம் ரூபா ஒப்பந்தத்தில் கொலை செய்யப்பட்ட   யக்கட ரங்க: நடந்தது என்ன?
December 02
23:40 2014

பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் வைராக்­கியம் கார­ண­மாக தொடரும் பழி­வாங்­கல்­களின் வெளிப்­பா­ட்டின் மற்­றொரு சம்­ப­வமே ரங்க கொலை என்­பதை பொலிஸார் தெரிந்து கொண்­டனர்.

பேலி­ய­கொடை, துட்­ட­கை­முனு மாவத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்­டவர் கங்­காநாத் விஷ்­மித்த பிர­சங்க. எனினும் இந்த இயற்­பெ­யரை விட ‘இரும்பு ரங்க’ (யக்­கட ரங்க) என அழைக்கும் போதே அவரை பல­ருக்கும் தெரிந்­தி­ருக்கும். ஏனெனில் கங்­காநாத் விஷ்­மித்த பிர­சங்க எனும் இயற்­பெ­யரை விட அவரை ரங்க என்றே அனை­வரும் அழைத்­தனர்.

ரங்­கவின் அப்பா பழைய இரும்பு வர்த்­தகர் என்ற ரீதியில் ரங்­காவின் பெய­ருக்கு முன்னால் அடை­மொழி சேர்ந்­தது. அதுவே அவரை யக்­கட ரங்க என பலருக்கு அடை­யாளம் காட்­டி­யது.

அது கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை  வழ­மை­யான நாட்­க­ளைப்­போன்றே அன்றும் பொழுது புலர்ந்­தது. துட்­ட­கை­முனு மாவத்தையின் 20ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த ரங்க காலை­யி­லேயே நுகே வீதிக்கு செல்­ல­லானார்.

அது நுகே வீதியில் உள்ள கொமர்ஷல் வங்­கியின் ஏ.ரீ.எம். இல் செல­வுக்­காக பணத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தற்­காகும். தனது கெப் ரக வாக­னத்தில் சார­தி­யுடன் சென்ற ரங்க சார­தியை பாதை­யி­லேயே நிறுத்தி விட்டு வாக­னத்­தி­லி­ருந்து இறங்கி ஏ.ரீ.எம். இயந்­திரம் நோக்கி சென்­றுள்ளார்.

இதன்­போது ஏ.ரீ.எம். அருகே மறைந்­தி­ருந்த அடையாளம் தெரி­யாத துப்­பாக்­கி­தாரி ஒருவர் ரங்க மீது சர­மா­ரி­யாக துப்­பாக்­கிச்­சூட்­டினை நடத்த ரங்க துடிதுடித்து வீதி­யி­ல் வீழ்ந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து துப்­பாக்­கி­தாரி ரங்­கவின் சார­தியை இலக்­காக கொல்ல முயற்­சிக்­கையில் கெப் வண்­டியில் இருந்த அவர் பயத்தில் தனது எஜ­மா­னரை அப்­ப­டியே துடி­து­டிக்க விட்­டு­விட்டு மின்­னலாய் மறைந்தார்.

இத­னை­ய­டுத்து அந்த வழியாய் வந்த முச்­சக்­கர வண்டி சார­தி­யொ­ருவர் ரங்­கவை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்தார்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து மேல் மாகா­ணத்தின் வடக்­குக்கு பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதிபர் குண­ரட்ன, கள­னிக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்தி­யட்சர் விதி­சிங்க ஆகி­யோரின் மேற்­பார்­வையில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

குறித்த இரு சிரேஷ்ட அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய இச்­சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பேலி­ய­கொட குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கும் மேல் மாகா­ணத்தின் வடக்கு பிராந்­திய குற்­றத்­த­டுப்பு பிரி­வுக்கும் பாரப்­ப­டுத்­தப்­பட்­டன.

பேலி­ய­கொட குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி டீ.பீ.பிலப் பிட்­டிய தலை­மையில் பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் பிர­சன்ன உள்­ளிட்­டோரின் தலை­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு சப்­பு­கஸ்­கந்த பொலிஸ் தட­ய­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி கஹட்­ட­பிட்­டி­யவின் உத­வியும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இந்­நி­லை­யில்தான் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த ரங்க இரண்டு நாட்­க­ளி­லேயே இறந்து விட்ட செய்தி பொலி­ஸா­ருக்கு கிடைக்­கின்­றது.

அந்த செய்தி பொலி­ஸா­ருக்கு ஏமாற்­றத்­தையே அளித்துள்ளது. ஏனெனில் ரங்­கவின் வாக்கு மூலத்தைக் கொண்டு மேல­திக விசா­ர­ணை­களை முன்னெடுப்­பது பொலி­ஸாரின் எண்­ண­மாக இருந்­தி­ருக்­கலாம்.

எனினும் இரு நாட்கள் அதி தீவிர கண்­கா­ணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்ற ரங்க ஒரு வார்த்­தை­யேனும் பேசாது உலகுக்கு விடை கொடுக்­கவே குற்றவாளிகளை  தேடிய வேட்­டையை  தட­ய­வியல் ரீதி­யா­கவும் வேறு வழி­க­ளிலும் விசா­ரணை குழு­வினர் ஆரம்­பித்­தனர்.

இவ்­வாறு விசா­ரணை செய்த போது இந்த கொலையின் பின்­னணி வெளிப்­பட்­டது. அதா­வது பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் வைராக்­கியம் கார­ண­மாக தொடரும் பழி­வாங்­கல்­களின் வெளிப்­பா­ட்டின் மற்­றொரு சம்­ப­வமே ரங்க கொலை என்­பதை பொலிஸார் தெரிந்து கொண்­டனர். முற்­றுப்­புள்­ளி­யற்று தொடரும் பேலி­ய­கொடை பழி­வாங்­கல்கள் தொடர்­பான தக­வல்கள் அம்­ப­ல­மான முறை சற்று சுவா­ரஷ்­ய­மா­னது.

விசா­ர­ணை­களை பொறுப்­பேற்ற பேலி­ய­கொடை குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பல­ரிடம் வாக்கு மூலங்­களை பதிவு செய்­தது. அதில் தப்­பிச்­சென்ற ரங்­கவின் சார­தியின் வாக்கு மூலமும் அடங்கும். அவற்றை வைத்­துக்­கொண்டு குற்­ற­வா­ளி­களை தேடும் வேட்­டையை முன்­னெ­டுப்­பது சிர­ம­மா­கவே இருந்­தது.

இந்­நி­லையில் விசா­ர­ணைக்­கு­ழு­வினர் இறந்த ரங்­கவின் தாயா­ருடன் நீண்ட கலந்­து­ரை­யாடல் ஒன்றை செய்து ரங்க தொடர்­பான பல விட­யங்­களை அறிந்து கொள்­கின்­றனர். அத்­துடன் விசா­ரணைப் பிரி­வி­னரின் தனிப்­பட்ட ஒற்றன் ஒரு­வனூடாக மேலும் பல தக­வல்­களை சேக­ரித்துக் கொண்ட பொலிஸார் கொலை­களை தேடி நடவடிக்கையை ஆரம்­பித்­தனர்.

தட­ய­வியல் அதி­கா­ரிகள் ஊடாக சேக­ரித்த தக­வல்­க­ளையும் வைத்­துக்­கொண்டு விசா­ர­ணை­களை முன்­வைத்த பொலி­ஸாரின் கவனம் மீக­ஹ­வத்த பொலிஸ் பிரிவில் வசிக்கும் நபர் ஒருவர் மீது குவிந்­தது.

தாம­திக்­காது சென்ற பொலிஸார் மீக­ஹ­வத்த பொலிஸ் பிரிவின் மணல் வீதியில் பழைய பாலத்திற்கு கீழால் தனது இரு பிள்­ளை­க­ளுடன் எங்கோ சென்று கொண்­டி­ருந்த போது சந்­தேக நபரை கைது செய்­கின்­றனர்.

அவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவன் வேறு யாரும் அல்ல அப்­பி­ர­தே­சத்­தி­லேயே வசித்து வந்த அநுர அல்­லது கொம்­பெட்டா எனப்­படும் நப­ராவான். இரு பிள்­ளை­களின் தந்­தை­யான அவனின் மனைவி வெளி­நாட்டு வேலை­வாய்ப்பில் இருப்­பவள். இந்­நி­லை­யி­லேயே பிள்­ளை­க­ளுடன் அவன் பிர­தே­சத்தை விட்டு தப்பிச் செல்ல முற்­பட்ட போது கைது செய்­த­தாக பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர்.

இந்­நி­லையில் பிள்­ளைகள் இரு­வ­ரையும் உற­வி­ன­ரிடம் ஒப்­ப­டைத்த பொலிஸார் கொம்­பெட்­டாவை பேலி­ய­கொடை பிரிவின் புல­னாய்வு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

சேர்… வர்த்­தகர் ஒருவர் எனக்கு வழங்­கிய ஒப்­பந்தம் ஒன்று தொடர்­பி­லேயே இந்த கொலையை செய்தேன். எனினும் நான் கொலைக்­கான உளவு வேலையை மட்­டுமே பார்த்தேன் என கைது செய்­யப்­பட்ட கொம்­பெட்டா விசா­ரணைப் பிரி­வி­ன­ரிடம் தெரி­வித்­துள்ளான்.

சேர்… உண்­மையில் 10 இலட்சம் ரூபா­வுக்­குத்தான் ஆரம்­பத்தில் ஒப்­பந்தம் செய்தோம். எனினும் பின்னர் அது ஏழு இலட்­ச­மாக குறைக்­கப்­பட்­டது என ஒப்பந்­தத்­தொகை தொடர்­பிலும் அச்­சந்­தேக நபர் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூல­ம­ளித்­துள்ளான்.

விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒரு­வரின் தக­வலின் பிர­காரம் ரங்­கவின் கொலைக்­கான ஒப்­பந்­தத்தை பெற்­றுக்­கொண்­டவர் மாளி­கா­வத்தை பிர­தே­சத்தை சேர்ந்த பிர­பல பாதாள உல­கத்­த­லைவன் ரிமிஸ் கொலமின் உத­வி­யாளர் ஆவார்.

ரிமிஸ் கொலம் கடந்த காலத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரு­ட­னான மோதல் ஒன்றின் போது சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்தான். இந்­நி­லையில் அவ­ரது உதவி­யா­ளர்கள் ரிமிஸ் கொலம் விட்­டுச்­சென்ற பணி­யினை தொடர்­வ­தாக அறிய முடி­கின்­றது.

பொலிஸார் மேற்­கொண்ட விசேட விசா­ர­ணை­களில் ஒப்­பந்­தத்தை வழங்­கிய வர்த்­த­கரின் வீட்டில் பல நாட்கள் ரிமிஸ் கொலமின் குறித்த உத­வி­யாளர் தங்­கி­யி­ருந்­துள்­ளமை தெரிய வந்­துள்­ளது.

அத்­துடன் கொலைத்­திட்­டமும் அங்கு வைத்தே தீட்­டப்­பட்­டுள்­ள­துடன் கொலைத்­திட்­டத்­துடன் பிறி­தொரு நபருக்கும் தொடர்­புள்­ளதை விசாரணைகளூடாக  வெளிச்­சத்­துக்கு கொண்டு வந்த பொலிஸார் ஒப்­பந்தம் கொடுத்த வர்த்­த­கரை கைது செய்­ய­லா­யினர்.

வர்த்­தகர் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து ரங்­கவின் கொலை பின்­னணி வெளிப்­பட்­டது. ஏனெனில் ரங்­கவின் கொலைக்­கான கார­ணத்தை தேடி­வந்த பொலி­ஸா­ருக்கு இற்­றைக்கு சில மாதங்­க­ளுக்கு முன்னர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட பேலி­ய­கொட நகர சபை உறுப்­பினர் சாமிய சந்­து­ரு­வனின் கொலைக்கு பழி­வாங்கும் பட­லத்தின் வெளிப்­பாடே என்­பதை வர்த்­த­கரின் கைது சொல்­லிக்­கொ­டுத்­தது.

சாமில சந்­து­ருவன் சில மாதங்­க­ளுக்கு முன்னர் கட­வத்தை மஹர நீதிவான் நீதி­மன்­றுக்கு வழக்கு விசா­ர­ணை­க்கு சென்று விட்டு திரும்பும் போது சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். அது பேலிய கொடை பழைய கண்டி வீதியில் டயர் சந்­தியை அண்­மித்த பிர­தே­சத்­தி­லாகும்.

இது தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்த மேல்­மா­கா­ணத்தின் வடக்கு பிராந்­தி­யத்தின் குற்­றத்­த­டுப்புப் பிரிவு இரு தரப்­பி­ன­ரி­டையே சில கால­மாக நீடித்த முரண்­பா­டு­களின் பிரதி பலனே தவிர சபை உறுப்­பினர் சாமி­லவின் கொலைக்­கான காரணம் என கண்­ட­றிந்­த­துடன் அக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் 4பேரை கைது செய்து மன்றில் ஆஜர்­ப­டுத்தி விளக்­க­ம­றி­ய­லிலும் வைத்­துள்­ளது.

சாமில சந்­து­ரு­வனின் கொலைக்­கான கார­ண­மான பிரச்­சினை ஆரம்­பித்தது பேலி­ய­கொ­டையில் மீன் விற்­பனை மத்­திய சந்தை அமைக்­கப்­பட்­டது முத­லாகும்.

சந்­தையை அண்­மித்த பகு­தியில் வாகன தரிப்­பிட வச­தி­யொன்றை செய்து கொடுத்து அதி­லி­ருந்து பணம் பெற்று சம்­பா­தித்து வந்­துள்ளார்.

இந் நிலையில் பேலி­ய­கொடை நகர சபையின் அப்­போ­தைய உப தலைவர் அமி­லவும் தனது சகாக்­க­ளுடன் இதனை ஒத்த ஒரு வாகன தரிப்­பிட வசதியினை செய்து கொடுத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் பணம் பெறும் வியா­பா­ரத்தை ஆரம்­பித்­துள்ளார். நகர சபை உப தலைவர் அமி­ல­வுடன் மன்ன அமின் மஞ்சு என ஒரு பட்­டா­ளமே இணைந்து இதனை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த இரு வாகன தரிப்பு வர்த்­தகம் ஊடா­கவும் இரு தரப்­புக்கும் இடையே முறுகல் இருந்து வந்­தது.

கொலை செய்­யப்­பட்ட சமில சந்­து­ரு­வனின் சகோ­த­ர­ருக்கும் அப்­போ­தைய நகர சபை உப தலைவர் அமி­லவின் சகாக்­க­ளுக்கும் இதனால் அடிக்­கடி மோதல்கள் ஏற்­பட்­டன.

இதன் தொடர்ச்­சி­யாக ஒரு நாள் அமி­லவின் சகா­வான போதைப் பொருள் கடத்­த­லுடன் தொடர்­பு­டைய மன்ன அமீனை மீது சாமில சந்­து­ரு­வனின் சகோ­தரர் தாக்­கி­யுள்ளார்.

இந்தச் சம்­பவம் இடம்­பெற்று சில நாட்­களில் வெள்ளை வேனில் வந்தோர் மன்ன அமீனை கடத்தி சென்­றி­ருந்­தனர். அதன் பின்னர் மன்ன அமீன் தொடர்பில் இது­வரை எந்த தக­வலும் இல்லை.

இந்த சம்­ப­வத்தை அடுத்து மன்ன அமீனின் சகாக்­க­ளான மஞ்சு உள்­ளிட்டோர் சாமில சந்­து­ரு­வனே ஒப்­பந்தம் கொடுத்து மன்ன அமீனை கடத்தி கொலை செய்­து­விட்­ட­தாக சந்­தே­கித்­தனர். அதனால் சாமில சந்­து­ரு­வனை தீர்த்துக் கட்­டு­வது என்ற எண்­ணத்தில் அவர்கள் உறு­தி­யாக நின்­றனர்.

அதன்­படி மஞ்சு, சாமில சந்­து­ரு­வனை கொலை செய்யும் திட்­டத்­துக்கு 9 மில்லி மீற்றர் ரக கைத்­துப்­பாக்கி ஒன்றை தயார் செய்­த­துடன் அவரை நகர சபை முதல் நீதி­மன்றம் வரை பின் தொட­ர­லா­யினான்.

பல நாள் பின் தொட­ரலின் பின்னர் கடந்த மே மாதம் 12 ஆம் திகதி சாமில சந்­து­ரு­வனை கொலை செய்­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்பம் மஞ்சு உள்­ளிட்ட முன்னாள் நகர சபை உப தலைவர் அமி­லவின் ஆட்­க­ளுக்கு கிடைத்­தது.

அன்று மஹர நீதி­மன்றம் வரை மோட்டார் சைக்­கிளில் தனது நண்­ப­னுடன் சாமில சந்­து­ரு­வனை பின் தொடர்ந்த மஞ்சு அங்­கி­ருந்து சாமில திரும்பும் வரை நீதி­மன்றம் பகு­தியில் காத்­தி­ருந்­துள்ளான்.

வெள்ளை வேனில் கடத்­தப்­பட்ட மன்ன அமீனின் பிறி­தொரு நண்­ப­னு­ட­னேயே இதற்­காக மஞ்சு சென்­றி­ருந்தான். அந்த நண்பன் மோட்டார் சைக்­கிளை செலுத்த மஞ்சு பின்னால் அமர்ந்து சாமி­லவை கொலை செய்ய தயா­ரானான்.

சாமி­லவின் சிவப்பு நிற காரினை பின் தொடர்ந்து மஹர மன்­றி­லி­ருந்து களனி பழைய கண்டி வீதியின் டயர் சந்­தி­வரை வந்த மஞ்சு அந்த சந்­தியை அண்­மித்த பகு­தியில் வைத்து காரை முந்திச் செல்லும் போது காரை செலுத்­திய சாமில சந்­து­ரு­வனை சுட்­டுக்­கொன்று விட்டு தப்பிச் சென்­றி­ருந்தான். (குறித்த சம்­பவம் தொடர்­பான முழு­மை­யான விப­ரங்­க­ளுக்கு கடந்த 2014 மே15 திகதி வீர­கே­ச­ரியைப் பார்க்­கவும்)

இத­னை­ய­டுத்து சாமில சந்­து­ரு­வனின் கொலை­யுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ரான மஞ்சு உள்­ளிட்ட மூன்று பேர் கொலை இடம்­பெற்று 10 நாட்கள் கழிந்த நிலையில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர்.

மேல் மாகா­ணத்தின் வடக்­குக்கு பொறுப்­பான புலன் விசா­ரணைப் பிரிவு இவர்­களை கைது செய்­தி­ருந்­த­­துடன் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட 9 மில்­லி­மீற்றர் கைத்­துப்­பாக்கி கொலையின் போது சந்­தேக நபர்கள் அணிந்­தி­ருந்த ஆடைகள் தலைக்­க­வசம் மோட்டார் சைக்கிள் என அனைத்­தையும் பொலிஸார் கைப்­பற்­றி­யி­ருந்­தனர்.

பின்னர் மற்­று­மொரு நப­ரையும் கைது செய்த பொலிஸார் மஞ்­சு­வுக்கும் கொலையின் போது மோட்டார் சைக்­கிளை செலுத்­திய நப­ருக்கும் நேரடி கொலைக் குற்­றச்­சாட்­டினை பதிவு செய்­த­துடன் ஏனைய இரு­வ­ருக்கும் கொலைக்­கான திட்­டத்தை வகுத்­த­தாக குற்றம் சுமத்­தினர். இந்த வழக்கு மஹர மன்றில் தொடர்­கி­றது.

பொலிஸார் சாமில சந்­து­ரு­வனின் கொலை­யுடன் தொடர்­பு­டைய அனைத்து மர்­மங்­க­ளையும் வெளிப்­ப­டுத்தி உண்மை குற்­ற­வா­ளி­களை ஆதா­ரத்­துடன் கைது செய்த போதும் சாமி­லவின் உற­வி­னர்கள் அதனை நம்பத் தயா­ராக இருக்­க­வில்லை.

சாமி­லவின் உற­வி­னர்கள் முன்னாள் நகர சபை உப தலைவர் அமில மற்றும் அமி­லவின் நண்­ப­ரான யக்­கட ரங்க ஆகி­யோ­ரையே சாமி­லவின் கொலை தொடர்பில் சந்­தே­கித்து வந்­தனர்.

எனினும் அமில உள்­ளிட்­டோரை ஏற்­க­னவே சாமி­லவின் கொலை தொடர்பில் பொலிஸார் விசா­ரணை செய்து விட்டு அவர்­க­ளுக்கு தொடர்­பில்லை என்­பதை உறுதி செய்­தி­ருந்­தனர்.

சாமி­லவின் கொலை தொடர்பில் மஞ்சு பொலி­ஸா­ருக்கு ஒப்­புதல் வாக்­கு­மூலம் அளித்­தி­ருந்தும் சாமி­லவின் குடும்­பத்­தினர் அதனை நம்­ப­வில்லை.

அமி­லவின் தேவைக்­காக ரங்­கவின் திட்­டப்­ப­டியே சாமில கொலை செய்­யப்­பட்­ட­தாக சாமி­லவின் குடும்­பத்­தினர் நம்பும் நிலை­யி­லேயே ரங்க ஒப்­பந்த அடிப்­ப­டையில் கூலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

இந்நிலையில் முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட சாமில சந்துருவனின் தந்தை கொம்பெட்டா உள்ளிட்ட மூவரை இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்துள்ள நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

யக்கட ரங்காவை கொலை செய்ததாக சந்தேகிக்கும் பாதாள உலகத் தலைவனின் சகாவும் மற்றொரு நபரும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்குக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் குணரட்ன களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விதிசிங்க ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் பேலியகொட தலைமை பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரசன்னவின் ஒத்துழைப்புடன் குற்ற புலன் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி டீ.பீ. பலப்பிட்டிய தலைமையிலான கான்ஸ்டபிள்களான பெரேரா (50905), நந்தன (48067), அரவிந்த (88617), அஜித் (85902), வீரசிங்க (43069), ஜகத் (82359), அதிகாரி (7041,) குணரத்ன (6984) ஆகியோருடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் வாசினி(8652) ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான ரங்கவின் கொலை தொடர்பில் மர்மங்கள் துலங்கியுள்ள நிலையில் தேடப்படும் இருவரையும் விரைவில் பொலிஸார் கைது செய்வர் என எதிர்பார்க்கலாம்.

எம்.எப்.எம்.பஸீர்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com