ilakkiyainfo

ஐபிஎல் கிரிக்கெட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
April 14
18:39 2021

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின
ஐபிஎல் கிரிக்கெட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை:

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

இதில் தேவ்தத் படிக்கல் 3வது ஓவரில் 11 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விராட் கோலி 4 பவுண்டரிகளை விரட்டி 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது(14), டி வில்லியர்ஸ்(1), வாஷிங்டன் சுந்தர்(8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட்

மறுமுனையில் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதத்தை கடந்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல்(59) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் சஹா 9 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வார்னரும் மனீஷ் பாண்டேவும் இணைந்து ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து 83 ரன்களை குவித்தனர்.

இந்நிலையில் அரைசதம் அடித்த வார்னர், 54 ரன்னில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேகம் குறைந்தது. 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஆட்டத்தின் கடைசி 4 ஓவரில் அணி வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் 17வது ஓவரை வீசிய ஆர்சிபி ஸ்பின்னர் ஷபாஸ் அகமது, அந்த ஓவரில் பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே மற்றும் அப்துல் சமாத் ஆகிய மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார்.

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com