ilakkiyainfo

ஐஸ்கிறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசிக்கொல்ல முயன்ற தாய்; 2 வருட கடூழியச் சிறை

ஐஸ்கிறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசிக்கொல்ல முயன்ற தாய்; 2 வருட கடூழியச் சிறை
May 27
10:17 2014

ஐஸ்கிறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு களுத்துறை நீதிவான் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

ஐஸ்கிறீம் கேட்டு அழுது அடம்பிடித்த மகனை களுகங்கையில் வீசி கொலை செய்ய இந்தப் பெண் முயற்சித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட பெண்ணுக்கு களுத்துறை நீதிவான் பத்மன் சூரசேன இரண்டாண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாமிகா திலானி பொன்சேகா என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 2500 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்டிருந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பியபோது, களுத்துறை போதிக்கு அருகாமையில் ஐஸ்கிறீம் கேட்டு மகன் அழுததாகவும் தமது கைகளை கடித்துவிட்டதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய், மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்ததாகவும் பொலிஸார் மகனைக் காப்பாற்றியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது சிறுவர் இல்லமொன்றில் வாழ்ந்து வருகின்றான்.

நயினாமடுவில் கணவனை வெட்டிவிட்டு மனைவியின் தங்கச் சங்கிலி அபகரிப்பு
27-052017

278719768Untitled-1-290x160வவுனியா வடக்கு நயினாமடு பகுதி வீடொன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் கூறியதாவது ;

நயினாமடுவிலுள்ள ஒரு வீட்டிற்கு இரவு வேளையில் வந்த சிலர் ,வீட்டு உரிமையாளரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர்.

இதனையடுத்து வெளியில் வந்து பார்த்தபோது அவர் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டியதோடு அவரின் மனைவியின் கழுத்திலிருந்த இரண்டரைப் பவுண் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் த. செல்வராசா என்பவரே காயமடைந்துள்ளார். இவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com