ilakkiyainfo

‘ஐ.நா வே எம்மை காப்பாற்று எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தா’ ;வடக்கில் திரண்­டெ­ழுந்து மக்கள் கோஷம்! ப.அகிந்தன்

‘ஐ.நா வே எம்மை காப்பாற்று எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தா’ ;வடக்கில் திரண்­டெ­ழுந்து மக்கள் கோஷம்!  ப.அகிந்தன்
March 17
16:23 2019

போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும், வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட தமது உற­வு­க­ளுக்கு தீர்வு வழங்கக் கோரியும், இலங்கை அர­சுக்கு கால அவ­காசம் வழங்கக் கூடாது என்ற கோரிக்­கை­களை முன்­வைத்தும் , யாழ்.பல்­க­லைக்­க­ழக சமூ­கத்தின் ஏற்­பாட்டில் ”நீதிக்காய் எழுவோம்” மாபெரும் ஆர்ப்­பாட்டப் பேரணி நேற்று சனிக்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இந்தப் பேர­ணி­யா­னது யாழ்.பல்­க­லைக்­க­ழக முன்­றலில் ஆரம்­ப­மாகி, பலாலி வீதி, பிறவுண் வீதி, நாவலர் வீதி ஊடாக பேர­ணி­யாக சென்று, யாழ். ஸ்ரான்லி வீதி வழி­யாக யாழ். மாந­கர சபை திறந்­த­வெளி மைதா­னத்தை சென்­ற­டைந்­தது.

பெரு­ம­ளவில் திரண்ட மக்கள்

மேலும், குறித்த போராட்­டத்தில் பங்கு கொண்ட போராட்டக் காரர்கள், ஐ.நாவே தமிழ் மக்கள் விட­யத்தில் தலை­யீடு செய், தமிழ் மக்கள் மீது இனப்­படு கொலை மேற்­கொள்­ளப்­பட்­டதை ஐ.நா. ஏற்றுக் கொள்ள வேண்டும், ஐ.நா. பாது­காப்புச் சபை­யூ­டாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு இனப்­ப­டு­கொலை விசா­ர­ணைகள் கொண்டு செல்­லப்­பட வேண்டும், இலங்கை அர­சிற்கு இனியும் கால அவ­காசம் வழங்­காதே, தமிழர் தாய­கத்தில் இருந்து இலங்கை இரா­ணுவம் வெளி­யேற வேண்டும்,

சர்­வ­தே­சமே இனியும் வேடிக்கை பார்க்­காதே, அர­சியல் கைதி­களை விடு­தலை செய், காணாமல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­களின் நிலை என்ன?, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்கு, எமது நிலம் எமக்கு வேண்டும், தமிழர் தம்மை ஆள­வேண்டும், ஐ.நாவே மௌனம் ஏன், காத்­தி­ருப்பு என்னும் பெயரில் ஏமாற்­றி­யது போதும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அரசே பதில்­கூறு போன்ற வாச­கங்கள் எழு­தப்­பட்ட பதா­தை­களை கையில் ஏந்­தி­ய­வாறும், வான் அதிர கோஷங்­களை எழுப்­பிய வாறு கடு­மை­யான வெய்­யி­லி­னையும் பொருட்­ப­டுத்­தாது பேர­ணியில் கலந்­து­கொண்டு தமது ஆதங்­கங்­களை வெளிப்­ப­டுத்­தினர்.

தமிழ் அர­சியல் வாதி­களின் பிர­சன்னம்

இப் பேர­ணியில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், காணாமல் ஆக்­க­பட்­டோ­ரு­டைய உற­வி­னர்கள், பொது­மக்கள் மற்றும் தமிழ்­மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் சி.வி.விக்­னேஸ்­வரன், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, புமொட் கட்­சியின் தலைவர் சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன், சர்­வேஸ்­வரன், அருந்­த­வ­பாலன், முன்னாள் வட­மா­காண சபை உறுப்­பினர் குகதாஸ் ஆகிய அர­சியல் பிர­மு­கர்கள் போராட்­டத்தில் பங்­கு­கொண்­டி­ருந்­தனர். இருந்த போதிலும், இது முற்­றிலும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­னதும், பொது­மக்­க­ளி­னதும் போராட்­டமே. ஆகையால் அர­சியல் பிர­மு­கர்கள் முன்­னிலை வகிக்க வேண்டாம் என மாணவர் ஒன்­றியம் விடுத்த வேண்­டு­கோ­ளினை அடுத்து போராட்­டத்தில் முன்­னிலை வகிக்­காமல் பின்­தங்­கி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் யாழ். நகர வீதி­க­ளி­னூ­டாக கால்­ந­டை­யாக யாழ். முற்­றவெ ளி மைதா­னத்தை சென்­ற­டைந்­த­துடன், மாபெரும் கவ­ன­யீர்ப்பு போரட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதில் கலந்து கொண்ட தமது பிள்­ளை­களை இழந்த தாய்­மார்கள் கண்ணீர் மல்க, ஐ.நாவே எங்­களை காப்­பாற்று, எங்கள் பிள்­ளை­களை மீட்­டுத்தா, நாம் உன்­னையே நம்­பு­கின்றோம், எமது பிள்­ளை­களை கண்ணால் பார்க்க வேண்டும், ஐ.நாவே எமது கோரிக்­கைக்கு செவி­சாழ்த்து எமக்கு தீர்­வினை பெற்­றுத்தா போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தனர்.

பல்­கலை மாணவர் ஒன்­றி­யத்­தினால் பிர­க­டனம்

jaffna-protest-16-e1552839672207போராட்­டத்தின் இறு­தியில் மாணவர் ஒன்­றி­யத்­தினால் பிர­க­டனம் வாசிக்­கப்­பட்­டது. அதில் தமிழ்­மக்கள் மீதான சிங்­கள பௌத்த பேரின வாதத்தின் அடக்கு முறையின் உச்­சமே 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மை­யு­மாகும். இவ் மனித குலத்­திற்கு எதி­ரான போர்க்­குற்­றங்கள் மனித உரிமை சட்டம் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள், இனப்­ப­டு­கொலை என்­ப­வற்­றுக்­கெ­தி­ரான சர்­வ­தேச நீதி விசா­ரணை ஒன்­றினை தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த போதும் சர்­வ­தேசம் 2015 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் மூன்றில் ஒன்று தீர்­மா­னத்தின் மூலம் கலப்பு விசா­ரணை பொறி­முறை உட்­பட 25 விட­யங்­களை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என பரிந்­துரை செய்­தது.

மேற் குறிப்­பிட்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்தின் 25 பரிந்­து­ரைகள் நிறை­வேற்­றாது கால இழுத்­த­டிப்பு செய்து வரு­கின்­றது. ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைப் பேர­வையின் 25 பரிந்­து­ரைகள் இலங்கை அர­சாங்கம் நல்­லி­ணக்கம் சம்­பந்­த­மான ஒரு கலந்­தாய்வு செய­ல­ணியை உரு­வாக்­கி­யது. இச் செய­லணி முன்­னேற்ற கர­மான பரிந்­து­ரை­களை செய்த போதிலும் இலங்கை அர­சாங்கம் வேண்­டு­மென்றே உதா­சீனம் செய்­தது.

அது­போல காணாமல் ஆக்­கப்­பட்ட அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­ட­போதும் அதன் செயற்­றிறன் அதன் செயற்­றிறன் அற்ற தன்­மை­யாலும் திட்­ட­மிட்ட அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­யாலும் அதி­காரம் அற்ற ஒன்­றா­கவும் காணப்­ப­டு­வதால் ஏமாற்றம் அளிக்கும் ஒன்­றா­கவே உள்­ளது.

மேலும் இழப்­பீட்­டுக்­கான சட்டம் தொடர்பில் சட்டம் நிறை­வேற்­றப்­பட்ட போதிலும் இது­வ­ரையில் இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. பயங்­கர வாதத் தடைச்­சட்­டத்தை மீளாய்வு செய்தல் எனும் போர்­வையில் அதனை விட மோச­மான சட்டம் ஒன்றை உரு­வாக்க அசாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் என்ற வகையில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை புறந்­தள்ளும் வகையில் யாப்பு உரு­வாக்கல் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் இன்றும் அத்­த­கைய முயற்­சிகள் கைகூ­டப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 25 பரிந்­து­ரை­களும் நிறை­வேற்­றப்­ப­டாமல் இருக்­கின்ற நிலையில் மீள கால அவ­காசம் வழங்­கு­வது மேலும் கால இழுத்­த­டிப்­புக்கே வழி­வ­குக்கும் என்­பதால் கால அவ­காசம் வழங்­கு­வ­தனை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

காலம் கடந்த நீதி மறுக்­கப்­பட்ட நீதியே என்ற முடி­வினை நோக்கி ஐ.நா. சபை­யா­னது தமிழ் மக்­களை தள்ளப் போகின்­றதா என்ற கேள்­வியும் எம்­மத்­தியில் எழு­வதும் நியா­ய­மா­னதே. ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்டு 10 ஆண்­டுகள் நிறை­வ­டைந்த நிலை­யிலும் தமிழ் மக்­க­ளுக்கு பூர்­வி­க­மான தாய­கத்தில் இனப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைக்கும் வகை­யி­லான திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றமை, தொடர்ந்தும் முன்னாள் போர­ளிகள் கைது செய்­யப்­ப­டு­கின்­றமை, அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டாமை, தமிழ் மக்­களின் காணி­களில் இருந்து முழு­மை­யாக இரா­ணு­வத்­தினர் வெளி­யேறி தமிழ் மக்­களை மீள் குடி­யேற்றம் செய்­யாமை, தமிழ் மக்­களின் பூர்­வீக தாய­கத்தில் பௌத்த விகா­ரைகள் அமைக்­கின்ற செயற்­பா­டுகள் தொடர்­கின்­றமை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் தீர்­வின்றி தொடர்­கின்­றமை, மகா­வலி அபி­வி­ருத்தித் திட்­டத்தின் ஊடா­கவும், தொல்­லியல் திணைக்­க­ளத்தின் ஊடா­கவும், வன­வள பாது­காப்புத் திணைக்­க­ளங்கள் ஊடா­கவும் நில ஆக்­கி­ர­மிப்­புக்கள் தொடர்­கின்­றமை போன்ற தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்கு முறைகள் இன்றும் தொடர்ந்து நிலை­யி­லேயே இருக்­கின்­றன.

இந்த நிலையில் கால அவ­காசம் வழங்­கு­வதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகள் தொடர்­வ­தற்­கான சர்­வ­தேச ம் அங்­கீ­காரம் அளிக்கப் போகின்­றதா? ஆயுதம் போராட்டம் மௌனிக்­கப்­பட்டு 10 ஆண்­டுகள் நிறை­வ­டைந்த நிலை­யிலும், யுத்­தத்­தினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் வாழ்­வா­தா­ரமும் உளத் தேவை­களும் இது­வ­ரையில் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

1971களில் மேற்­கொள்­ளப்­பட்ட தரப்­ப­டுத்­த­லினால் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உள்­வாங்­கப்­படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக இதுவரை காலம் பல்கலைக்கழகத்திற்கு தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.

மேலும், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனூடாக இனப்பிரச்சினை க்கு தீர்வினை நோக்கி இலங்கையினை சர்வதேச சமூகம் நகர்த்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே தமிழ்மக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மூன்றில் ஒன்று தீர்மானத்தையே அரசு ஏற்றுக்கொள்ளதாத நிலையில் தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலைகள், உரிமை மீறல்கள் என்பன விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com