ஒக்ஸ்போர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி நவம்பரில் வெளிவரும்

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு நவம்பர் முதல் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் 2 ஆம் திகதி தொடங்கும் வாரத்திலிருந்து தடுப்பூசிக்குத் தயாராக இருக்கும் படி குறித்த வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவரது எதிர்ப்பார்ப்பும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மீது இருக்கும் நிலையில் ரஷியா, அமெரிக்கா, சீனா, பிரித்தானியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியானது, நோயாளிகளிகளாக அடையாளம் காணப்பட்ட இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
அத்தோடு இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பின் விபரங்கள் விரைவில் ஒரு மருத்துவ வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment