ilakkiyainfo

‘ஒருநாளும் அடங்காத என் மனைவியை அடக்கிவிட்டேன்’… ஜெயம் ரவி சொன்ன உண்மை கதை!

‘ஒருநாளும் அடங்காத என் மனைவியை அடக்கிவிட்டேன்’… ஜெயம் ரவி சொன்ன உண்மை கதை!
January 04
01:04 2019

சென்னை : தனது மனைவி தனக்கு அடங்கி நடந்த கதையை கூறி, அடங்க மறு வெற்றி விழாவை நடிகர் ஜெயம் ரவி கலகலப்பாக்கினார்.

ஜெயம் ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கிய அடங்க மறு படம் கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்துடன் வெளியான மற்ற படங்களைவிட அடங்க மறு படம் அதிக வசூலை பெற்றுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் அடங்க மறு படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி, நடிகை ராஷி கண்ணா, அழகம் பெருமாள், முனிஸ்காந்த், மைம் கோபி, இயக்குனர் கார்த்திக் தங்கவேல், இசையமைப்பாளர் சாம் சிஎஸ், எடிட்டர் ரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் போது தனது மனைவி ஆர்த்தி தனக்கு அடங்கி நடந்ததாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது

அடங்க மறு படத்தின் வெற்றிக்கு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் தான் முக்கிய காரணம்.

இந்த படத்துக்கு அவர் அமைத்த திரைக்கதை தான் மிக சுவாரஸ்யமாக அமைந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு போது மட்டும் தான் எனது மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி நடந்தார். படத்தின் பெயர் அடங்க மறு என்றாலும் அவர் அடங்கி நடந்தது ஆச்சர்யம் தான்.

adanga-maru--jayam-ravi4-1546492489

ஏனென்றால் படத்திற்கு அவரது அம்மா தான் தயாரிப்பாளர். வீட்டில் ஏதாவது சண்டை வந்தால், உடனடியாக படிப்பிடிப்புக்கு போக முடியாது என கூறிவிடுவேன்.

வேறு வழியே இல்லாமல் அடங்கி போய்விடுவார்.

adanga-maru-success-meet--jayam-ravi2-1546492466அப்படியும் எப்போதாவது கடும் கோபம் வரும் போது, அவரது அம்மாவுக்கு போன் செய்து நாளை ஒருநாளைக்கு மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள், ஒரே ஒரு சண்டை போட்டுக்கொள்கிறேன் என கேட்பார்.

ஆனால் நிறைய நடிகர்கள் நடிப்பதால் அது சாத்தியப்படாது. இதனால் வேறு வழியே இல்லாமல் அமைதியாகி விடுவார்.

கார்த்திக் தங்கவேலுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய விரும்புகிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்”, என ஜெயம் ரவி கலகலப்பாக பேசினார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com