ilakkiyainfo

ஒருபாலினத் திருமணம் செய்யும் லக்ஸம்பேர்க் பிரதமர்

ஒருபாலினத் திருமணம் செய்யும் லக்ஸம்பேர்க் பிரதமர்
May 14
20:29 2015

லக்ஸம்பேர்க் நாட்டின் பிரதமர் ஷேவியர் பெட்டெல், ஒருபாலினத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

பிரதமர் ஷேவியர் பெட்டெல், தனது துணைவரான கௌதியர் டெஸ்டினே என்பவரை திருமணம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதான ஷேவியர் பெட்டெல் ஒரு பாலின சேர்க்கையாளர் ஆவார். 2013 ஆம் ஆண்டு முதல் அவர் லக்ஸம்பேர்க் பிரதமராக பதவி வகிக்கிறார்.

1009136லக்ஸம்பேர்க்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பிரதமர் ஷேவியர் பெட்டல் தனது சொந்த திருமணத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளவுள்ளார்.

லக்ஸம்பேர்க்கின் பிரதிப் பிரதமரான எட்டைன் ஷிண்டரும் ஒருபாலின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1009133இதனால், ஒரு பாலின சேர்க்கையாளர்களை பிரதமராகவும் பிரதி பிரதமராகவும் கொண்ட உலகின் ஒரேயொரு நாடாக லக்ஸம்பேர்க் உள்ளது.

ஐரோப்பாவின் மிகசிறிய நாடுகளில் ஒன்றான லக்ஸம்பேர்க் தரையால் சூழப்பட்ட நாடாகும். ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டுள்ளது.

2586 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட லக்ஸம் பேர்க்கில் சுமார் 560,000 மக்கள் வசிக்கின்றனர்.

ஆனால், உலகின் மிக செல்வந்த நாடுகளில் ஒன்றாக லக்ஸம்பேர்க் விளங்குகிறது.

1009132சுமார் 93,000 டொலர் தலா வருமானத்தைக் கொண்ட லக்ஸம்பேர்க் அதிக தலா வருமானத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் கத்தாருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

லக்ஸம்பேர்க் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷேவியர் பெட்டில், லக்ஸம்பேர்க் நாட்டின் தலைநகரான லக்ஸம்பேர்க் சிட்டியின் மேயராக 2011 முதல் 2013 டிசெம்பர் வரை பதவி வகித்தார்.

அதன்பின் லக்ஸம்பேர்க் பிரதமராக அவர் தெரிவானார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் கௌதியர் டெஸ்டினேவுடன் இணைந்து வாழ்கிறார்.

100913740 வயதான கௌதியர் டெஸ்டினே ஒரு கட்டடக்கலைஞர் ஆவார். கௌதியரை தான் திருமணம் செய்யப்போவதாக கடந்த ஓகஸ்ட் மாதம் பிரதமர் ஷேவியர் பெட்டெல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் ஷேவியருக்கும் கௌதியருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட நிகழ்வாக இத்திருமண வைபவத்தை நடத்துவதற்கு லக்ஸம்பேர்க் பிரதமர் ஷேவியர் பெட்டெல் திட்டமிட்டுள்ளதாக வும், இவ் வைபவத்தின் புகைப்படங்களை பிரத்தியேகமாக வெளியிடுவதற்கான உரிமையைப் பெறுவதற்கு சஞ்சிகையொன்று முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், ஜேர்மனியின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெலுடன் லக்ஸம்பேர்க் பிரதமர் ஷேவியர் பெட்டெல்

1009135

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. arya
    arya May 16, 02:33

    ஹிட்லர் இப்ப இல்லாதது வருத்தம் அளிக்கின்றது , அவன் நல்லவனோ அல்லது கெட்டவனோ , ஆனால் இப்படியான இயற்கைக்கு மாறான சமூக விரோதிகளை அடியோடு அழிக்க முயன்றான் , போலி மேற்கு நாடுகள் அதை கெடுத்து விட்டன , அதனால் தான் இப்போது AIDS போன்ற நோய்கள் பரவி உள்ளது.

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com