ilakkiyainfo

ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் தந்தையை கொலைசெய்த மகன்!

January 26
19:06 2014

பணம்  பாதாளம் வரை பாயும் என்­ பார்கள். இங்கோ அந்தப் பணம் பிதா வரை பாய்ந்­துள்­ளது. ஆம், தந்தை மகனை கொலை செய்­வதும், மகன் தந்­தையை கொலை செய்­வதும் இன்று நாளாந்த செய்­தி­யா­கி­விட்­டது.  நீர்­கொ­ழும்பு, கிம்­பு­லா­பிட்­டி பிர­தே­ சத்தில் உள்ள ‘ கோல்டன் ஹெவன்’ தோட்ட உரி­மை­யா­ளரின் மர­ணமும் அந்த பட்­டி­யலில் சேர்ந்து விட்­டது.

எதி­ரி­சிங்க ஆராச்­சி­லாகே   நவ­ரட்ன 72 வய­தான   இரு ஆண்­பிள்­ளை­களின்   தந்­தை­யாவார். மூத்­தவர் டிரோன் நவ­ரட்ன. இளை­யவர் கிஹான் நவ­ரட்ன.  மூத்­தவர் நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் ரஷ்யப் பெண் ஒரு­வரை திரு­மணம் செய்து குடி­யேறி­யுள்­ள­துடன்  இளை­யவர்  தனது மனைவி, பிள்­ளை­யுடன் ‘கோல்டன் ஹெவன்’ தோட்­டத்தில்  உள்ள குடும்­பத்­தி­ன­ருக்­குரிய வீட்­டி­லேயே தனது வாழ் நாளை கடத்­த­லா­யினார்.

சிறு­ வ­யதி­லி­ ருந்தே தனது இரு மகன்­மா­ருக்கும் அதீத பாசம் கொடுத்து வளர்த்த தந்­தைக்கு எவ்­வ­ளவோ முயன்றும் அவர்­க­ளுக்கு தேவை­யான கல்­வியை வழங்க முடி­யாது போனது எனலாம். ஏனெனில் ‘கோல்டன் ஹெவன் ‘ தோட்ட சொத்­தினை  விற்­பனை செய்து எந்தவித கஷ்டமும் இன்றி மகன் மார் இரு­வரும் வாழ்ந்­து­வந்­தனர்.

அந்த சொத்­தினை பாது­காப்­பது தொடர்­பிலோ, அல்­லது அதனை விருத்தி செய்­வது தொடர்­பிலோ அவர்கள் கிஞ்­சித்தும் சிந்­திக்­க­வில்லை. இத­னாலோ, என்­னவோ திரு­மணம் முடித்தும் கூட அவர்­களால் சொந்தக் காலில் நிற்­பது என்­பது கூட சிர­ மமா­கி­விட்டது.

இந்த ‘கோல்டன் ஹெவன் ‘ தோட்­டத்தின்  உரி­மை­யா­ள­ராக  எதி­ரி­சிங்க  ஆராச்­சி­லாகே நவ­ரட்­னவின் பெயர் குறிப்­பி­டப்­ப­டு­வ­திலும் ஒரு கதை உள்­ளது.

ஆம், இலங்கை ஆங்­கி­லேயர் ஆட்­ சிக்கு உட்­பட்­டி­ருந்­த­போது இந்த ‘கோல்டன் ஹெவன்’ தோட்டம் இங்­கி­லாந்து அரச குடும்­பத்­துக்கு நெருக்­க­மா­ன­வ­ரான ஸ்காகர் என்ற வெள்­ளைக்­கா­ர­ருக்கு சொந்­த­ம­ான­தாக இருந்­துள்­ளது. அவரின் பின்­ன­ரேயே அந்த தோட்­டத்தின் உரிமை நவ­ரட்­ன­வுக்கு வந்­துள்­ளது.

பல தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் இந்த ‘கோல்டன் ஹெவன்’ தோட்ட உரிமை நவ­ரட்­ன­வுக்கு வந்­ததும் அதிஷ்­டத்­தினால் என்றால் கூட மிகை­யா­காது. அப்­போது நவ­ரட்ன ஒரு பொலிஸ் கான்ஸ்­ட­பி­ ளாக இருந்­துள்ளார். அப்­போது ஒரு நாள் கண்டி தலதா மாளி­கையில்    இடம்­பெற்ற வரு­டாந்த பெர­ஹரா நிகழ்­வொன்றின் பாது­காப்பு பணிக்­காக நவ­ர­ட்ன கண்­டிக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். தலதா மாளி­கையின் பிர­தான மாளி­கைக்கு முன்னால் உள்ள வீதி­யொன்­றி­லேயே அப்­போது அவ­ருக்கு கட­மை­யினை செய்ய வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது.

அரைக்­காற்­சட்டையுடன் கட­மையில் நவ­ரட்ன இருந்த போது வெள்­ளைக்­காரர் ஒருவர் அக்­கா­லத்­துக்­கு­ரிய சுக­போக வாகனம் ஒன்றில் நவ­ரட்ன கடமையில் இருந்த பிர­தே­சத்­துக்கு வருகை தந்து அந்த இடத்தில் தனது மோட்டார் வாக­னத்தை நிறுத்­தி­யுள்ளார்.

எனினும் பொதுவாக பெர­ஹரா நடை­பெறும் போது   எந்­த­வொரு வாக­னமும் அப்­ப­கு­தியில் தரித்து நிற்க அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தில்லை. இதனால் அந்த மோட்டார் வாகனம் அருகே சென்­றுள்ள நவ­ரட்ன மோட்டார் வாக­னத்தை அவ்­வி­ டத்தில் நிறுத்த முடி­யாது எனவும் நிறுத்திய வாக­னத்தை எடுத்துச் செல்­லு­மாறும் கூறி­ யுள்ளார்.

எனினும் அந்த வெள்­ளைக்­காரர்   அதனை காதில் வாங்­கிக்­கொள்­ள­வில்லை. அந்த வெள்­ளைக்­காரர்     வேறு யாரும் அல்ல, கோல்டன் ஹெவன் தோட்டத்தின் உரி­மை­யாளர்   ஸ்காகர் என்­ப­வரே அவர். பிரித்­தா­னிய அரச குடும்­பத்துக்கு நெருக்­க­மா­ன­வ­ரான அந்த வெள்­ளைக்­காரர் சாதா­ரண பொலிஸ் கான்ஸ்­ட­ப­ிளாக இருந்த நவ­ரட்­னவின் பேச்சை கணக்­கி­லெ­டுக்­காது தொடர்ந்தும் நடந்து செல்ல, முன்னால் சென்று மறித்து வாக­னத்தை வேறு இடத்தில் நிறுத்­து­மாறு கூறு­வ­தற்குள் நவ­ரட்­னவின் கான்ஸ்­டபிள் உத்­தி­யோகம் பறி­போ­னது.

உயர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர், தனது கட­மை­யினை சரி­வர மேற்­கொள்­ளாமை கார­ண­மாக நவ­ரட்­னவை கான்ஸ்­டபிள் பத­வி­யி­லி­ருந்து பணி நீக்கம் செய்­தி­ ருந்தார். ஆம், பெர­ஹெர நடைபெறும்போது வாகனம் நிறுத்த தடை செய்­யப்­பட்­டி­ருந்தபோதும் வாகனம் நிறுத்த அனு­ம­தித்த குற்­றச்­ சாட்டின் கீழேயே நவ­ரட்­னவின் தொழில் பறிக்­கப்­பட்­டது.

மீண்டும் ஸ்காகர் வரும்வரை அவரின் வாக­னத்தின் அருகில் நவ­ரட்ன காத்­தி­ ருந்தார். அதா­வது பறி­போ­யுள்ள தனது கான்ஸ்­டபிள் உத்­தி­யோ­கத்தை சிபா­ரிசின் மூலம் பெற்றுத்­தரக் கோரவே அவர் காத்­தி­ ருந்­துள்ளார்.

நீண்ட நேரத்தின் பின்­னர் ­வா­கனம் அருகே வந்த ஸ்காகர், நவ­ரட்ன கூறிய விட­யங்­களை கேட்டு, தன்னால் அவரின் உத்­தி­யோகம் பறி­போ­யுள்­ளதை உணர்ந்து தனது மோட்டார் வாக­னத்தில் ஏற்­றிக்­ கொண்டு தனது சார­தி­யாக புதிய உத்­தி­யோ­ கத்தை நவ­ரட்­ன­வுக்கு வழங்­கி­யுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த வெள்­ளைக்­கார ஸ்காகரின் மனதை நவ­ரட்ன நெகிழ்ச்­சிப்­ப­டுத்­தவே ‘கோல்டன் ஹெவன் ‘ தோட்­டத்தின் மேற்­பார்­வை­யா­ள­ராக நவ­ரட்ன நிய­ம­ன­மானார். இளை­ஞ­ரான நவ­ரட்ன அந்த தோட்­டத்தில் வேலை செய்த ஒரு யுவ­தி­யுடன் காதல்வயப்­பட தனது முத­லா­ளி­யான ஸ்காகரின் ஆசீர்­வா­த­த்துடன் அந்த யுவ­தியை கரம்­பி­டித்தார்.

நவ­ரட்ன விவாகம் செய்து சிறிது காலத்­ தியே ஸ்காகர் இறந்­து­விட்டார். அது திடீர் என ஏற்­பட்ட மர­ண­மாகும். அந்த மரணம் தொடர்பில் பல்­வேறு கட்­டுக்­க­தைகள் உலா­வரும் நிலையில், ஸ்காகரின் மர­ ணத்தின் பின்னர் ‘கோல்டன் ஹெவன்’ தோட்­டத்தின் ஏக உரி­மை­யா­ள­ராக நவ­ ரட்ன மாறினார். ஏனெனில் ஸ்காகரின் பின்னர் அந்த சொத்­துக்­க­ளுக்கு உரிமை கோர யாரும் இருக்­க­வில்லை.

இது தான் நவ­ரட்ன கோல்டன் ஹெவன் தோட்­டத்தின் உரி­மை­யா­ள­ரான கதை.

கோடிக்­க­ணக்­கான பெறு­மதி கொண்ட அந்த சொத்­துக்கள் நவ­ரட்­ன­வுக்கு சொந்­த ­மா­னதையடுத்து அதனை நிர்­வ­கிப்­பதில் திண்­டாட்டம் ஏற்­பட்­டது. ஏனெனில் அந்­த ­ளவு நிர்­வாக திறன் நவ­ரட்­ன­வுக்கு இருக்­க­ வில்லை.

அதன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நவ­ ரட்ன தனது மனைவி, இரு மகன்­மா­ரையும் கோல்டன் ஹெவன் தோட்ட சொத்­துக்­ களை படிப்­ப­டி­யாக விற்றே கவ­னிக்­க­ லானார்.

இதுவே பிற்­கா­லத்தில் மகன்­மா­ரையும் ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டது. அவர்­களும் சொத்­துக்­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­ரான தனது தகப்­பனை சொத்­துக்­களை விற்­பனை செய்ய தொடர்ந்தும் வற்­பு­றுத்தி வந்­த­துடன் அதன் நிழ­லி­லேயே வாழவும் பழ­கிக்­கொண்­டனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் காலம் கடந்­து­கொண்­டி­ருந்­தது. அன்று புதன் கிழமை. இன்னும் தெளி­வாக சொல்­ வ­தென்றால் கடந்த ஆண்டின் இறுதி மாதத்தின் 18 ஆம் திகதி.

நவ­ரட்­னவின் இளைய மக­னான கிஹான் தனது மனைவி, 14 வய­து­டைய பிள்­ளை­ யுடன் வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட முச்­ சக்­கர வண்­டியில் நீர்­கொ­ழும்பு நோக்கி பய­ணித்­துள்ளார். தந்­தையின் வீட்­டி­லேயே திரு­ம­ண­மா­னது முதல் வாழ்ந்து வந்த கிஹான் தனது தந்­தையை மட்டும் வீட்டில் விட்­டு­விட்டே இந்த பய­ணத்­தினை மேற்­ கொண்­டி­ருந்தார். தனியார் வகுப்­பொன்­றுக்கு தனது மகளை அனு­ம­திக்க செல்­வ­தா­கவே கிஹான் அப்­போது தெரி­வித்­துள்ளார்.

நீர்­கொ­ழும்­புக்கு சென்ற கிஹான் மீண்டும் கோல்டன் ஹெவன் தோட்­டத்தில் உள்ள தமது வீட்­டுக்கு திரும்பும் போது கடி­கா­ரமோ இரவு 7 மணியை அண்­மித்து ஓடிக்­கொண்­டி­ருந்­தது.

கிஹான், தனது மனைவி பிள்­ளை­ யுடன் வீடு திரும்­பிய அந்த கணம் யாரோ ஒருவர் அந்த தோட்­டத்தில் வீழ்ந்­து­கி­டப்­ பதை முச்­சக்­கர வண்டி சாரதி அவ­தா­னித்­துள்ளார். முச்­சக்­க­ர­வண்டி வெளிச்­சத்தில் தெரிந்த அந்த உருவம் தொடர்பில் சாரதி கிஹா­னிடம் கூறவே உட­ன­டி­யாக முச்­ சக்­கர வண்­டியை நிறுத்­தி­விட்டு இரு­வரும் வீழ்ந்­து­கி­டந்த அந்த நப­ரிடம் சென்­றுள்­ ளனர்.

திடீ­ரென, எனது தந்­தையே என நவ­ரட்­ னவின் உடலைக் கண்­டதும் கிஹான் சத்­த­ மிட்டு அழ­லானான். உட­ன­டி­யாக வைத்­தி­ ய­சா­லைக்கு கொண்டு செல்ல முனைந்த போதும் அப்­போது நவ­ரட்­னவின் உயிர் பிரிந்­தி­ருந்­தது. தனது தந்­தைக்கு இறுதி நொடி­களில் நீர் சொட்­டேனும் கொடுக்க   முடி­யாமல் போய்­விட்­டதே என புலம்பிப் புலம்பி கிஹான் அழ­லானார்.

அத்­துடன் நீர்­கொ­ழும்பில் உள்ள தனது அண்­ண­னான டிரோனின் தொலை­பே­சிக்கு அழைப்­பினை ஏற்ப­டுத்தி தந்­தையின் மரணம் தொடர்பில் தெரி­விக்­கவே டிரோனும் உட­ன­டி­யாக கோல்டன் ஹெவன் தோட்­டத்தில் உள்ள தந்­தையின் வீட்­டுக்கு வந்து சேர்ந்தார்.

உட­ன­டி­யாக ஸ்தலத்­துக்கு சென்ற நீர்­ கொ­ழும்பு பொலிஸார் ஆரம்­ப­கட்ட விசா­ர­ ணை­களைத் தொடர்ந்து சட­லத்தை நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­வைத்­தனர். நவ­ரட்­னவின் மரணம் கீழே விழுந்­ததால் ஏற்­ பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கித்­ தனர். ஏனெனில் நவ­ரட்­ னவின் வயதும் அதற்கு கார­ண­மா­னது. அத்­துடன் உடலில் காணப்­பட்ட சிராய்வுக் காயம் விழுந்­ ததால் ஏற்­பட்­டதோ என பொலிஸார் சந்­தே­கித்­ தனர்.

எனினும் பிரேத பரி­சோ­த­னையை மேற்­கொண்­டி­ருந்த நீர்­கொ­ழும்பு சட்ட வைத்­திய அதி­கா­ரி­யான ஏ.தய­ாபா­ல­வுக்கு ஆச்­ச­ரியம் காத்­தி­ருந்­தது. திடீர் என்றோ அல்­லது இயற்­கை­யா­கவோ நவ­ரட்ன மர­ணிக்­க­வில்லை என்­பதை சட்ட வைத்­திய அதி­கா­ரி­யான தயா­பால கண்­ட­றிந்தார். உடன் செயற்­பட்ட அவர் நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்­துக்குப் பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் ஜயந்த லிய­ன­கே­வுக்கு அவர் விட­யத்தை கூறினார்.

ஏனெனில் உடலில் அடி­காயம் கார­ண­மாக ஏற்­பட்ட தழும்­புகள், இணைப்­பெ­லும்­புகள் முறிவு மற்றும் தொண்டைக் குழி எலும்பு முறிவு போன்­ற­வற்றை வைத்து சட்ட வைத்­திய அதி­காரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரான ஜயந்த லிய­ன­ கே­வுக்கு நடந்­தி­ருப்­பது ஒரு கொலை என்­ பதை குறிப்­பிட்டார்.

இதனையடுத்து உடன் செயற்­பட்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜயந்த லிய­னகே,வயோ­தி­பரை கொல்­வ­தற்கு முன்னர் பல­மான தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தையும் அதனை தொடர்ந்து கழுத்து நெரித்து கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­ வேண்டும் எனவும் அனு­மா­னித்­துக்­கொண்டார். எனினும் இதனை யார், எதற்­ காக செய்­தனர் எனற வினாக்­க­ளுக்கு விடை தெரி­யா­ம­லேயே இருந்­தது.

இந் நிலையில் தனது மேற்­பார்­வையின் கீழ் இயங்கும் நீர்­கொ­ழும்பு பிரிவு குற் ­றத்­த­டுப்பு பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுசந்த பிரி­ய­தர்­ஷ­ னவை அழைத்து நவ­ரட்­னவின் கொலை தொடர்பில் விசா­ர­ணை­களை முடுக்­கி­வி­டு­ மாறு கூறி அது தொடர்பில் வழங்­க­வேண்­ டிய அறி­வு­றுத்­தல்­க­ளையும் வழங்­கினார். இதனை அடுத்து நவ­ரட்­னவின் கொலை தொடர்பில் பல குழுக்­களை அமைத்த பொலிஸ் பரி­சோ­தகர் சுசந்த பிரி­ய­தர்­ஷன விசா­ர­ணை­களை தொடர்ந்தார்.

அப்­போது நவ­ரட்ன தனது இறுதி நாட்­களில் கோல்டன் ஹெவன் தோட்­டத்தை விற்­று­விட்டு அனு­ரா­த­ புரம் முதியோர் இல்லம் ஒன்­றுக்கு சென்று தனது காலத்தை கழிக்க விரும்­ பி­ய­மை­யையும் அதற்­காக 18 கோடி ரூபா விலை நிர்­ ணயம் செய்து தொழி­ல­திபர் ஒரு­வ­ருடன் பேச்சு நடந்­த­ மை­யையும் பொலி­ஸாரால் தெரிந்­து­கொள்ள முடிந்­தது.

அன்று கோல்டன் ஹெவன் தோட்ட உரி­ மை­யா­ள­ரான வெள்­ளைக்­ காரர் அத்­தோட்­டத்தை கைய­ளிக்கும் போது அவர் பயன்­ப­டுத்­திய வாகனம் உள்­ளிட்ட புரா­தன சொத்­ துக்கள் அந்த தோட்­டத்தில் இன்றும் உள்ள நிலையில் தனது மகன்மார் சொத்­தினை படிப்­ப­டி­யாக விற்று தீர்ப்­பதை தவிர்க்­கவே அவர் இவ்­வாறு ஒரு நடவ­டிக்­கையில் இறங்­கி­யுள்­ள­தையும் பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­திப்­ப­டுத்த முடிந்­தது.

எவ்­வா­றா­யினும் தந்­தையின் இந்த தீர்­ மா­னத்தை இரு மகன்மாரும் எதிர்த்த நிலையில் அவர்­களே இந்த கொலையை செய்­தி­ருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கித்­தனர். எனினும் அதனை வெளியில் காட்­டிக்­கொள்­ள­வில்லை. அண்­ ணனும் தம்­பியும் சேர்ந்து தந்­தையை அடித்து கொலை செய்­தி­ருக்க வேண்டும் என்­பதே பொலி­ஸாரின் சந்­தேகம்.

இதனைத் தொடர்ந்து சிவில் உடையில் பொலிஸ் குழு­வொன்று மரண வீட்­டுக்கு சென்று வேவு பார்த்­தது.

இறு­திக்­கி­ரி­யைகள் இடம்­பெற்­றுக்­கொண்டி­ருந்­த­போது  தேரரின் மத கிரிகை நிகழ்வு இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்க இளைய மக­னான கிஹான் நஞ்­சருந்தி தற்­கொ­லைக்கு முயற்­சிக்க சிவில் உடை­யி­லி­ருந்த பொலிஸ் உள்­ளிட்­ட­வர்­களின் உத­வி­யுடன் நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு காப்­பாற்­றப்­பட்டான்.

கிஹான் தற்­கொ­லைக்கு முயற்­சித்­ ததால் பொலி­ஸாரின் சந்­தே­கமும் கவ­ னமும் கிஹான் பக்கம் திரும்ப உண்மை வெளியில் வந்­தது.

தனது தந்­தை­யான நவ­ரட்­னவை கொலை செய்ய ஒரு கோடி ரூபா ஒப்­ பந்­தத்தை கிஹானே வழங்­கி­யமை தெரி­ய­ வந்­தது.

நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் பிர­பல பாதாள உலகத் தலைவனாக அறியப்பட்ட ‘கொடு அனுர ‘என்பவருக்கே   கிஹான் இந்த ஒப்பந்தத்தை   வழங்கியுள்ளார்.   25 ஆயிரம் ரூபா   முற்பணத்துடன் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்த கொடு அனுர டிசம்பர் 18 ஆம் திகதி கிஹான் வழங்கிய தகவலின் பிரகாரம் நவரட்ன தனிமையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தனது சகாவுடன் சென்று இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் உறுதியானது.

குறித்த 18 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் கோல்டன் ஹெவன் தோட்டத்துக்கு சென்ற கொடு அனுரவும் அவரது உதவியாளரும் நவரட்னவை பலமாக தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தமை விசாரணைகளில் உறுதியானது.

உடன் செயற்பட்ட நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்களான கிஹான், கொடு அனுர மற்றும் அவரது உதவியாளர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

ஒப்பந்தத்தில் பேசப்பட்ட ஒரு கோடி ரூபாவில் 25 ஆயிரம் ரூபாவை ஏற்கனவே பெற்ற அனுர மீதி பணத்தொகையை கிஹானிடம் கோரி பிரச்சினை செய்துவந்த நிலையிலேயே, கிஹான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளமையும் விசாரணைகளில் வெளியான தகவல்களாகும். சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

-எம்.எப்.எம்.பஸீர் –

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com