ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… உலகை மிரட்டும் உயிர்க்கொல்லி கொரோனா

உலகை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவுக்கு பலியான மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இன்று பிற்பகல் நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. 25 லட்சத்து 73 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 558 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 92 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 57 ஆயிரத்து 219 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 லட்சத்து 1585 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் வருமாறு:-
அமெரிக்கா – 45,343,
ஸ்பெயின் – 21,717
இத்தாலி – 24,648
பிரான்ஸ் – 20,796
ஜெர்மனி – 5,086
பிரிட்டன் – 17,337
துருக்கி – 2,259
ஈரான் – 5,297
சீனா – 4,632
பெல்ஜியம் – 6,262
பிரேசில் – 2,761
கனடா – 1,834
நெதர்லாந்து – 3,916
சுவிட்சர்லாந்து – 1,478
ஸ்வீடன் – 1,765.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment